41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன்தான் கூட்டணி… இல்லை எனில், தேமுதிக தனித்து களமிறங்குமாம்!
41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன்தான் கூட்டணி... இல்லை எனில், தேமுதிக தனித்து களமிறங்குமாம்!
2021 சட்டமன்ற தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டிவரும் நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 67 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, சட்டமன்ற தேர்தல், கட்சிப்பணிகள், களப்பணிகள், கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், பிரசார ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. ‘டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு ஒரு நிரந்தர முடிவு ஏற்படுத்திட முன்வர வேண்...









