ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

கொரானா வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் ஊழல் அமைச்சர் பதவி பறிப்பு… 3 மாசம் சிறை…!

கொரானா வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் ஊழல் அமைச்சர் பதவி பறிப்பு… 3 மாசம் சிறை…!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    கொரானா வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் ஊழல் அமைச்சர் பதவி பறிப்பு... 3 மாசம் சிறை...! தலைப்பை பார்த்ததும் ஷாக் ஆக வேண்டாம்... இது நம்மூரில் இல்லை. வெளிநாட்டு விவகாரம்... கொரானா வைரஸ் பரவியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக்கருவி மிகவும் முக்கியமான மருத்துவ உபகரணமாக செயல்பட்டு வருகிறது. கொரானா வேகமாக பரவி வருவதால் வெண்டிலேட்டரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆகையால், உலகின் பல்வேறு நாடுகள் வென்டிலேட்டர் உற்பத்தி செய்யும் நாடுகளிடமிருந்து அதை கொள்முதல் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். தென் அமெரிக்க நாடான பொலிவியாவிலும் கொரானா பரவத்தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 6 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா தாக்குதலுக்கு அங்கு இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர் ...
உள்ளூர் விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு திடீர் கட்டுப்பாடு! மத்திய அரசுக்கு கடிதம்!!

உள்ளூர் விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு திடீர் கட்டுப்பாடு! மத்திய அரசுக்கு கடிதம்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    உள்ளூர் விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு திடீர் கட்டுப்பாடு! மத்திய அரசுக்கு கடிதம்!! தமிழகத்தில் நாள்தோறும் கொரானா பாதிப்பு குறையாமல் உயர்ந்து கொண்டே போகிறது. இதன் காரணமாக வெளி மாநில போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் உள்ளூர் விமான சேவையை மத்திய அரசு நேற்று முதல் தொடங்கியது. முதலில் விமான சேவை 31ம் தேதி வரை தொடங்க வேண்டாம் என்ற தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது. இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை செயலாளர் பிரதீப்சிங் கரோலாவுக்கு தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடங்கியுள்ள நிலையில், இங்கு நிலவும் சூழ்நிலைப்படி சில கட்டுப்பாடுகளுடன் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு வரும...
விமானங்கள் திடிரென ரத்தானதால் பயணிகள் அவதி… குழப்பத்தில் விமான போக்குவரத்து துறை!

விமானங்கள் திடிரென ரத்தானதால் பயணிகள் அவதி… குழப்பத்தில் விமான போக்குவரத்து துறை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விமானங்கள் திடிரென ரத்தானதால் பயணிகள் அவதி... குழப்பத்தில் விமான போக்குவரத்து துறை! கொரானா பாதிப்பு காரணமாக பொது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இன்று முதல் உள்நாட்டு விமான சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கொல்கத்தா போன்ற பல மாநிலங்கள் முதலில் விமான சேவைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் விமான இயக்கத்திற்கு அனுமதி அளித்தனர். விமான சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் மும்பை விமான நிலையத்தில் தலா 25 விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும் மட்டுமே மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்தது. மேலும் பல மாநிலங்கள் தானாகவே பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகளை வெளியிட்டது. இதனால் குழப்பம் நிலவியது. அதே நேரம் பயண டிக்கெட் அனைத்தும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் டெல்லியில் இருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கு செல்ல இருந்த 82 விமானங்கள்...
சிங்கம்பட்டி ஜமீன் கடைசி ராஜா மரணம்!

சிங்கம்பட்டி ஜமீன் கடைசி ராஜா மரணம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மன்னர் to LIC ஏஜெண்டான சிங்கம்பட்டி ஜமீன் கடைசி ராஜா மரணம்! நாடு சுதந்திரம் அடைந்த பின் மன்னர்கள், அரசர்கள், ராஜாக்கள், இளவரசர், இளவரசி என்பதை எல்லாம் வரலாற்று பதிவுகளில் மட்டுமே படித்து வருகிறோம். அதையும் மீறி சம காலத்தில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் தகவல்களையும், வளைகுடா மன்னர் குடும்பங்கள் பற்றியும் அறிந்த நமக்கு நம்மூரில் இருக்கும் ராஜாக்கள் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாமல் விட்டது தான் சோகம். அப்படி நம்மூரில் இருந்த கடைசி ராஜாதான் சிங்கம்பட்டி ஜமீன் ராஜா டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி ஜமீனை ஆண்டுவந்தவர் ராஜா டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா. தமிழகத்தில் மன்னராட்சியில் ராஜாவாக முறைப்படி பட்டம் சூட்டிக் கொண்டவர்களில் மிஞ்சி இருந்த ஒரே ஒரு ராஜா இவர் தான். தமிழ்நாட்டில் மன்னராட்சி...
வெளிநாடு வாழ் இந்தியரா… தாயகம் திரும்பனுமா… இத படிங்க

வெளிநாடு வாழ் இந்தியரா… தாயகம் திரும்பனுமா… இத படிங்க

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    வெளிநாடு வாழ் இந்தியரா... தாயகம் திரும்பனுமா... இத படிங்க வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள், முதலில் அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களில் தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். கட்டாய சூழ்நிலைகளில் உள்ளவர்கள் தாயகம் திரும்ப முன்னுரிமை அளிக்கப்படும். வேலை இழந்தவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், கர்ப்பிணிகள், குடும்ப உறுப்பினரின் இறப்புக்கு செல்பவர்கள், விசா முடிவடையும் நிலையில் இருப்பவர்கள், அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள், முதியோர், மாணவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயண செலவை அவர்களே ஏற்க வேண்டும். அதுபோல், இந்தியா திரும்பிய பிறகு, சுகாதார அமைச்சகம் வகுத்த அனைத்து நெறிமு...
உலகம் முழுதும் கொரானா பாதிப்பு 54 லட்சத்தை கடந்து விட்டது… 22 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

உலகம் முழுதும் கொரானா பாதிப்பு 54 லட்சத்தை கடந்து விட்டது… 22 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  உலகம் முழுதும் கொரானா பாதிப்பு 54 லட்சத்தை கடந்து விட்டது... 22 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினார். பலி எண்ணிக்கை 3.5 லட்சமாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரானா வைரஸ் இப்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக பல லட்சம் மனிதர்களை பலி வாங்கி வருகிறது.   இந்நிலையில், உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே நேரம் வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்து 47 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரானாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 562-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரானா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரானா வைரசால் அதிகம் பாதிப்பு...
கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் எச்சரிக்கை

கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கு முடிவதற்கு முன் கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எச்சரிக்கை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும். அதற்கு முன்பாக தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால் அந்த பள்ளிக்கூடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிக்கூடங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை, திருவள்ளூர், அரியலூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் பிளஸ்-2 பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திரு...
கொரானாவை அடுத்து வெட்டுக்கிளி தாக்குதல் வரப்போகுதாம்… காப்பான் சினிமா நிஜமாகிறதா!?

கொரானாவை அடுத்து வெட்டுக்கிளி தாக்குதல் வரப்போகுதாம்… காப்பான் சினிமா நிஜமாகிறதா!?

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    கொரானாவை அடுத்து வெட்டுக்கிளி தாக்குதல் வரப்போகுதாம்... காப்பான் சினிமா நிஜமாகிறதா!? உலகிலேயே பேரழிவை ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சியாக ‘பாலைவன வெட்டுக்கிளி’ என்ற வகையான வெட்டுக்கிளி கருதப்படுகிறது. இவை பயிர்களை அழித்து உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை. அதன்மூலம் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு உண்டாகும். தற்போது, இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா, சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் மையம் கொண்டுள்ளன. அங்கு பெரும் நாசத்தை உண்டாக்கி வருகின்றன. அதே சமயத்தில், அடுத்த மாதம் இந்தியாவுக்கு படையெடுக்கும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வெட்டுக்கிளி கணிப்பு மைய மூத்த அதிகாரி கெய்த் கிரஸ்மன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த ஜனவரி மாதத்தில் இருந...
தலித் மக்களை பகடையாக்கி திமுக கூட்டணியை சிதறடிக்கும் அரசியல் விளையாட்டு வேண்டாம் – திருமா எச்சரிக்கை

தலித் மக்களை பகடையாக்கி திமுக கூட்டணியை சிதறடிக்கும் அரசியல் விளையாட்டு வேண்டாம் – திருமா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா? விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கண்டனம்! திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களைத் திடுமென தமிழகஅரசு கைது செய்திருக்கிறது. தலித்மக்களின் மீது மிகுந்த கரிசனம் இருப்பதைப்போலவும், தலித்மக்களை யார் சீண்டினாலும் இழிவுபடுத்தினாலும் வேடிக்கைப் பார்க்கமாட்டோம்; கடுமையாக நடவடிக்கை எடுப்போமென சாதி- மதவெறியர்களையெல்லாம் எச்சரிப்பதைப் போலவும், இந்தியாவிலேயே சாதிய வன்கொடுமைகள் நடக்காத ஒரே மாநிலமாக தமிழகத்தைப் பாதுகாத்து வருவதைப்போலவும், அதீத பொறுப்புணர்வுடன் ஆர்.எஸ்.பாரதி அவர்களைக் கைதுசெய்து தனது சட்டபூர்வமான கடமையை ஆற்றியிருக்கிறது அதிமுக அரசு. எனவே, தலித்மக்களின் மீதான தமிழக அரசின் அக்கறையைப் பாராட்டாமலிருக்க இயலுமா? கொரோனா காலத்திலும் தலித் மக்களுக்கெதிர...
தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை – எடப்பாடிபழனிச்சாமி குற்றச்சாட்டு

தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை – எடப்பாடிபழனிச்சாமி குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை - எடப்பாடிபழனிச்சாமி குற்றச்சாட்டு கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சட்டத்தின் அடிப்படையிலே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவரை விமர்சித்ததன் புகாரின் பேரிலே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இ-டெண்டரில் முறைகேடு என ஆர்.எஸ். பாரதி தெரிவித்ததில் துளிகூட உண்மை இல்லை. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஸ்டாலின் அரசின் மீது புகார் தெரிவிக்கிறார். ஆர்.எஸ். பாரதி பேசிய போதே மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரானா வைரஸ் பரிசோதனைகள் அதிக அளவில் செய...