சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட தலைவர்கள் மரியாதை!

அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட தலைவர்கள் மரியாதை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் மரியாதை! பேரறிஞரின் 51வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  உள்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அண்ணாவிற்கு மரியாதை செலுத்தினர். முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளோடு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்....
கொரானா வைரஸ் பீதியால் சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து!

கொரானா வைரஸ் பீதியால் சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      கொரானா வைரஸ் பீதியால் சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து! சீனாவில் இந்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி (நேற்று) சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்ட நாளாக கருதப்பட்டது. ஏனெனில் 02.02.2020 என்ற தேதியை பின்பக்கமாக வாசித்தாலும் ஒரே மாதிரியே இருக்கும். இதனால் இந்த அதிர்ஷ்ட நாளில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை நடத்த சீன மக்கள் முன்னரே திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர். ஆனால் தற்போது அங்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிவேகத்தில் பரவிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிப்ரவரி 2-ந்தேதி திருமணங்களை நடத்த வேண்டாம் என மக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்தது. இது குறித்து சீன மக்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பிப்ரவரி 2-ந்தேதி அதிர்ஷ்ட நாள் என்று நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ரத்து செய்து விடுங்கள். தற்போது நிலவும் சூழ்நிலையை மற்றவர்கள...
பெயரைப் போலவே ரசிகர்களை ஏமாற்றியதா டகால்டி – கோடங்கி விமர்சனம்

பெயரைப் போலவே ரசிகர்களை ஏமாற்றியதா டகால்டி – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
    காமெடி ஹீரோ ஆக்‌ஷன் ஹீரோ ஆக முயற்சி எடுத்திருக்கும் படம் தான் டகால்டி. சின்னச் சின்ன தவறுகளை செய்து பணம் சம்பாதிக்கும் சந்தானத்திடம் ஒரு பெண்ணை கண்டுபிடித்து ஒப்படைக்கும் வேலை கொடுக்கப்படுகிறது. அந்த பெண்தான் ஹீரோயின் ரித்திகா. அவரை பார்க்காமலேயே படம் வரைந்து வில்லன் தேடுகிறார். அவரிடம் ஹீரோயினை ஒப்படைத்து சந்தானம் பணம் வாங்கினாரா ஹீரோயின் என்ன ஆகிறார் எனபதுதான் டகால்டி கதை. சந்தானம் நண்பராக முதல்முறையாக யோகிபாபு இணைந்து நடித்திருக்கிறார். அதனால் காமெடி நிச்சயம் என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் தான். ஆனால் அதற்கு பதிலாக சந்தானம் ஆக்‌ஷன் ஹீரோவாக பறந்து பறந்து சண்டை போடுகிறார். இயக்குனர் விஜய் ஆனந்த் ஆக்‌ஷனில் காட்டிய தீவிரத்தை கதையிலும் திரைக்கதையிலும் காட்டி இருந்ததால் படம் கண்டிப்பாக பேசப்பட்டிருக்கும். படத்துக்கும் பாடல்களுக்கும் தொடர்பில்லாமல் இருப...
மார்டன் கடவுளாக விஜய் சேதுபதி களமிறங்கிய ஓ மை கடவுளே!

மார்டன் கடவுளாக விஜய் சேதுபதி களமிறங்கிய ஓ மை கடவுளே!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மார்டன் கடவுளாக விஜய் சேதுபதி களமிறங்கிய ஓ மை கடவுளே! அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், வில்லா, தெகிடி படங்களில் நாயகனாக நடித்த அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ஓ மை கடவுளே. இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக இறுதிச்சுற்று, சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை படங்களில் நாயகியாக நடித்த ரித்திகா சிங் நடித்துள்ளார். திருமண வாழ்வில் இணையும் தம்பதிகளாக இருவரும் ஃபர்ஸ்ட் லுக்கில் கொஞ்சம் டாம் அண்ட் ஜெர்ரி போல காட்சி அளிக்கின்றனர். ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட ஜெயம் ரவி "என்னது இது என் கதை மாதிரியே இருக்கு" என கேப்ஷன் போட ... இது ஜெயம் ரவியின் ரியல் கதை மாதிரி இருக்கா அல்லது அவர் இயக்க எழுதி வைத்த கதை மாதிரி இருக்கா என தனியாக ரசிகர்கள் பட்டிமன்றம் நடத்த தொடங்கி விட்டனர். இந்த சூழலில் இந்த படத்தில் விஜய் சேதுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்...
கொரோனா வைரஸ் பீதி – சீனாவில் இருந்து 2வது கட்டமாக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த இந்தியர்கள்!

கொரோனா வைரஸ் பீதி – சீனாவில் இருந்து 2வது கட்டமாக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த இந்தியர்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரோனா வைரஸ் பீதி - சீனாவில் இருந்து 2வது கட்டமாக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த 323 இந்தியர்கள்! சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரசினால் அந்நாட்டில் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர். 14,000 நபர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட பல நாடுகளில் இந்த வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  உலக நாடுகள் பலவும் சீனாவில் உள்ள தங்களது குடிமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன.   இதற்கிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள வுகான் நகரில் உள்ள இந்தியர்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதுகுறித்து சீன அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்ச...
அல்வா கிண்டி ஆரம்பித்த பட்ஜெட் மக்களுக்கும் அல்வா கொடுத்துள்ளது – கமல்ஹாசன் டிவீட்

அல்வா கிண்டி ஆரம்பித்த பட்ஜெட் மக்களுக்கும் அல்வா கொடுத்துள்ளது – கமல்ஹாசன் டிவீட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    மக்களுக்கு அல்வா கொடுத்த மத்திய பட்ஜெட் - கமல்ஹாசன் மத்தியில் ஆளும் பாஜக அரசின் 2020 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்தார். வழக்கமாக மத்திய அரசு எப்போதெல்லாம் பட்ஜெட் தாக்கல் செய்தாலும் அதற்கு முன் பட்ஜெட் தயாரித்த பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்பான அல்வா கிண்டி தருவது வழக்கம். இந்த பட்ஜெட்டின் போதும் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அல்வா கிண்டி ஊழியர்களுக்கு கொடுத்தார். மிக நீண்ட பட்ஜெட் உரை. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த பட்ஜெட்டை "மிக நீண்ட பட்ஜெட் ஆனாலும் வெற்று பட்ஜெட்" என கிண்டல் அடித்தார். நடிகரும் தமிழக அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்த பட்ஜெட் பற்றி டிவிட்டரில் " அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை." என குறிப்...
மத்திய அரசு தாக்கல் செய்தது “வெற்று” பட்ஜெட் – ராகுல் நக்கல்

மத்திய அரசு தாக்கல் செய்தது “வெற்று” பட்ஜெட் – ராகுல் நக்கல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய அரசு தாக்கல் செய்தது "வெற்று" பட்ஜெட் - ராகுல் நக்கல் பாராளுமன்றத்தில் நடப்பு (2020-2021) நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு சுமார் இரண்டரை மணி நேரம் உரையாற்றினார். இந்நிலையில், இந்த நிதிநிலை அறிக்கை தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். ‘வேலை வாய்ப்பின்மை என்பது நாடு எதிர்நோக்கியுள்ள அதிமுக்கிய பிரச்சனையாக உள்ளது. இதை தீர்ப்பதற்கும் நமது இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் இந்த பட்ஜெட்டில் எவ்வித ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் நான் பார்க்கவில்லை. பட்ஜெட்டில் உள்ள அனைத்தும் அரசின் மனப்பாங்கை விவரிக்கின்றது. எல்லாமே வெறும் பேச்சுதான். ஆனால், எதுவுமே நடப்பதில்லை. நிதிநிலை அறிக்க...
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – நிர்மலா சீத்தாராமன்

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – நிர்மலா சீத்தாராமன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழர்களின் தொன்மையை உலகுக்கு விளக்கும் வகையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியபோது கூறியது; சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு முக்கியமான நகரங்கல் தேஜஸ் ரயில் மூலம் இணைக்கப்படும். சுற்றுலா துறையை மேம்படுத்த ரூ. 2500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகம், அரியானா, உத்தர பிரதேசம், குஜராத் உள்பட 5 மாநிலங்களில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்....
சினிமாவுக்கு வர உதவி செய்த சனம் ஷெட்டி மீது வழக்கு தொடரும் எண்ணம் இல்லை – தர்ஷன்

சினிமாவுக்கு வர உதவி செய்த சனம் ஷெட்டி மீது வழக்கு தொடரும் எண்ணம் இல்லை – தர்ஷன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    சனம் ஷெட்டி எனக்கு ஆரம்பகாலத்தில் சினிமாவில் நடிப்பதற்கு நிறைய உதவி புரிந்து இருக்கிறார்; அவர் மீது எந்த வழக்கும் தொடர மாட்டேன் - தர்ஷன் பிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அதுகுறித்து விரிவான விளக்கம் அளித்து அவர் கூறியதாவது: 2016-ல் சென்னைக்கு வந்தேன். நான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, என்னுடைய இருசக்கர வாகனத்தை விற்று விட்டு தான் சென்னைக்கு வந்தேன். வந்ததும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் ஆறு மாத காலம் உதவியாளராக பணிபுரிந்தேன். அங்கங்கே நடக்கும் ஆடிஷனில் கலந்து கொண்டு விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். பிறகு வில்லனாக ஒரு படத்தில் நடித்தேன். 2017 தான் சனம் ஷெட்டியை சந்தித்தேன். அப்போது என்னை அவரது முகநூலில் சேர்த்தார். அதன் பிறகு என்னுடைய ஒவ்வொரு படத்தின் புகைப்படங்கள...
பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தனிநபர் வருமானம் 5 லட்சம் ரூபாய் இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. 5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக வரி குறைப்பு. 7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக வரி குறைக்கப்பட்டு உள்ளது. 10 லட்சம் முதல் 12,5 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால்  30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக வரி குறைப்பு 12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரி வருமானம் இருந்தால் 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 30 சதவீதம் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த வருமான வரி குறைப்பு நடவட...