வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா..! களத்தில் நேரடியாக குதித்த அதிமுக!! – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா..! களத்தில் நேரடியாக குதித்த அதிமுக!! – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா களத்தில் நேரடியாக குதித்த அதிமுக - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் நாடக நடிகர்களின் வீடு வீடாக போய் ஓட்டு கேட்கும் அதிமுக எம்.எல்.ஏ, முன்னாள் மேயர் - இது சேலம் கலாட்டா நடிகர் சங்க தேர்தல் பொது தேர்தலை விட பல திருப்பங்கள், திரை மறைவு வேலைகளில் நொடிக்கு நொடி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வெறும் 3 ஆயிரத்து சொச்சம் வாக்காளர்கள் இருக்கும் ஒரு அமைப்பு. அதிலும் ஆயிரத்து சொச்சம் உறுப்பினர்கள் மட்டுமே கடந்த முறை வாக்களித்தார்கள். இதைவிட ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட எந்த சங்கத்திலும் அதன் தேர்தல் நேரங்களில் இத்தகைய பரபரப்பு ஏற்படுவதில்லை. இதற்கு காரணம் தமிழக அரசியலையும் திரைத்துறையையும் குறிப்பாக நடிகர்களையும் பிரிக்க முடியாது. சரி விஷயத்திற்கு வருவோம்... நடிகர் சங்கத்தில் ராதாரவி-சரத்குமார் கூட்டணி பதவியில் இருந்த போது ...
கரகாட்டகாரன் 2 முடிவு தேன் கூட்டில் கை வைப்பதற்கு சமம் – ராமராஜன்

கரகாட்டகாரன் 2 முடிவு தேன் கூட்டில் கை வைப்பதற்கு சமம் – ராமராஜன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கரகாட்டக்காரன் 2 எடுக்க நினைப்பது தேன் கூட்டில் கை வைப்பதற்கு சமம் என ராமராஜன் கூறியுள்ளார். 90 கால கட்டத்தில் வெளியாகி மெகா ஹிட் ஆன படம் கரகாட்டக்காரன். ராமராஜன்-கனகா ஜோடி நடிப்பில் கங்கைஅமரன் இயக்கி தயாரித்த படம் இது. கவுண்டமணி, செந்தில், கோவைசரளா கூட்டணியின் காமெடி காலத்தால் அழிக்க முடியாதபடி இப்போதும் ரசிக்கும்படி உள்ளது. தமிழ் திரையுலகில் சமீப காலமாக ஹிட் ஆன படங்களை இரண்டாம் பாகம் எடுப்பது தொடர்கதையாகி வருகிறது. அதில் சில வெற்றி பெறுகிறது. பல படங்கள் படு தோல்வி அடைகிறது. அந்தவகையில் ஹிட் ஆன் கரகாட்டக்காரன் படத்தை இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இதில் நடித்த ராமராஜன் "கங்கை அமரன் கூட கேட்டார் ஆனால் இது சத்தியாமவதற்கான வாய்ப்பு பற்றி எனக்கு தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை கரகம் எடுத்து ஆடியாச்சு.. படமும் ஓடியாச்சு.. இனிமேல...
மாதவனுடன் கை கோர்த்த டைட்டானிக் நடிகர்..!

மாதவனுடன் கை கோர்த்த டைட்டானிக் நடிகர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாதவனுடன் கை கோர்த்த டைடானிக் நடிகர்..! கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் நம்பி நாராயண் ராக்கெட்ரி படத்தில் மாதவன் நடித்து வருகிறார். இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணி புரிந்தவர் நம்பி நாராயணன். இவர், 1994-ல் இவர் வேறு நாட்டிற்கு தகவல் கொடுக்கும் உளவாளி என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மிக பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு 1996-ல் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடைசியாக 1998-ல் வந்த தீர்ப்பின் படி நம்பி நாராயணன் ஒரு குற்றமும் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, நம்பியை விடுதலை செய்த நீதிமன்றம், அதில் வெற்றி பெற்ற அவருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது. நம்பி நாராயணன் தனக்கு நடந்த சம்பவங்களை 'ரெடி டூ பையர்: How India and I survived the ISRO...
கொலைகாரியாக ஹாலிவுட்டில் நடிக்கப் போன ஸ்ருதிஹாசன்..!

கொலைகாரியாக ஹாலிவுட்டில் நடிக்கப் போன ஸ்ருதிஹாசன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  பகலில் ஹோட்டல் பணிப்பெண் இரவில் படுபயங்கர கொலைகாரி ஸ்ருதிஹாசனின் புதிய அவதாரம்..! கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் இப்போது விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் முக்கிய ரோலில் நடிக்க ஸ்ருதி ஹாசன் தேர்வாகியுள்ளார். உலகப்புகழ் பெற்ற Jason Bourne universeன் Treadstone சீரிஸில் தான் ஸ்ருதி நடிக்கிறார். டெல்லியில் ஒரு ஹோட்டலில் வேலை செய்துகொண்டே மற்ற நேரங்களில் கொலை செய்பவராக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். ஹங்கேரியின் புத்தாபெஸ்ட்டில் நடக்கவுள்ள ஷூட்டிங்கில் அவர் விரைவில் கலந்து கொள்ளவுள்ளார். ஹாலிவுட் படங்களை சீரியல்களை நாம் பார்த்து வியந்த காலம் போய் இப்போது ஹாலிவுட் படங்களில் சீரியஸ்களில் நமது நடிகர்கள், நடிகைகள் நடிப்பது தமிழ் திரைத்துறைக்கு கிடைத்த மரியாதை என்றே சொல்லலாம்.  ...
ஜெய் ஜெய் டிரம்ப் மந்திரங்கள் ஒலிக்க டிரம்ப் சிலையை வழிபடும் தெலங்கானா விவசாயி..!

ஜெய் ஜெய் டிரம்ப் மந்திரங்கள் ஒலிக்க டிரம்ப் சிலையை வழிபடும் தெலங்கானா விவசாயி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஜெய் ஜெய் டிரம்ப் மந்திரங்கள் ஒலிக்க டிரம்ப் சிலையை வழிபடும் தெலங்கானா விவசாயி..! அமெரிக்காவில் நிர்வாண சிலையாக நின்ற டிரம்ப் தெலங்கானாவில் கடவுளாக சிலை வைத்து வழிபடுகிறார் ஒரு விவசாயி. தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்தவர் புஸ்சா கிரு‌‌ஷ்ணா 32 வயதான விவசாயியான இவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் அபிமானி ஆவார். தனது வீட்டிலேயே டிரம்புக்கு 6 அடி உயர சிலை அமைக்கும் அளவுக்கு அவரது அபிமானம் சென்றுள்ளது. டிரம்பை கடவுளாக கருதி, அவரது சிலையை புஸ்சா கிரு‌‌ஷ்ணா தினமும் வழிபட்டு வருகிறார். சிலையின் நெற்றியில் பொட்டு வைத்து, மாலை அணிவிக்கிறார். அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டுகிறார். அப்போது, ‘ஜெய் ஜெய் டிரம்ப்’ என்று மந்திரம் சொல்லி வழிபடுகிறார். டிரம்பின் 73-வது பிறந்தநாளையொட்டி நம்மூர் அரசியல்வாதிகள் போல வாழ்த்து போஸ்டர்களை தனது வீட்டு ...
குட்டைப் பாவாடை காற்றில் பறக்கும் மர்லின் மன்றோ சிலை மாயம்…!

குட்டைப் பாவாடை காற்றில் பறக்கும் மர்லின் மன்றோ சிலை மாயம்…!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், நடிகைகள்
  குட்டைப் பாவாடை காற்றில் பறக்கும் மர்லின் மன்றோ சிலை மாயம்...! ஹாலிவுட்டின் பிரபல நடிகையான மர்லின் மன்றோவின் சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1950களில் ஹாலிவுட் சினிமாவின் உச்சநட்சத்திரமாக வலம் வந்தவர் மர்லின் மன்றோ. அப்போதைய அமெரிக்க அதிபரான ஜான் எஃப் கென்னடியும், இவரும் காதலித்ததாக கூட சொல்லப்படுவது உண்டு. இவர் நடித்து 1955 ல் வெளியான படம் “செவன் இயர்ஸ் இட்ச்”. அதில் உள்ள இவரின் பிரபலமாக இருந்த காற்றில் குட்டைப் பாவாடை பறக்கும் பிரபலமான போஸ் ஒன்றை சிலையாக வடித்தார் ஒரு கலைஞர். ஹாலிவுட் படப்பிடிப்பு பகுதிகளில் அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சிலையை மீது மர்ம மனிதர் யாரோ நிற்பதாக போலீஸாருக்கு புகார் வந்துள்ளது. உடனே போலீஸார அங்கு சென்று பார்த்திருக்கிறார்கள். ...

லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலையாக பிரியங்கா சோப்ரா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  மெழுகு சிலையாக பிரியங்கா சோப்ரா..! அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் பிரியங்கா சோப்ரா மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. டில்லி, சிங்கப்பூர் போன்ற இடங்களில் இந்த மேடம் டு சாட்ஸ் மியூசியம் உள்ளது. பிரியங்கா சோப்ரா யுனிசெப் நல்லெண்ணத் தூதராகவும் இருக்கிறார். இந்த அருங்காட்சியகத்தில் இந்திய திரைப் பிரபலங்கள் அமிதாப், ஷாருக்கான் போன்றோரின் தத்ரூபமான மெழுகு சிலைகள் உள்ளன. சன்னி லியோன் மெழுகு சிலையும் உள்ளது....
அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருந்தேன் – தண்ணீர் பிரச்சினையை  பொது மேடையில் பேசிய எஸ்.பி.பி.

அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருந்தேன் – தண்ணீர் பிரச்சினையை பொது மேடையில் பேசிய எஸ்.பி.பி.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருந்தேன் - தண்ணீர் பிரச்சினையை பொது மேடையில் பேசிய எஸ்.பி.பி. யோகிபாபு நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கூர்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பேசியதாவது:- ‘தங்கம், பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது. தண்ணீர் பற்றாக்குறை தற்போது அதிக அளவில் உள்ளது. அதற்கு காரணம் நாம் தான். இப்போதாவது தண்ணீர் சேகரிப்பது தொடர்பாக நல்ல வி‌ஷயங்களை நாம் செய்ய முயற்சி செய்ய வேண்டும். தண்ணீரை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சின்ன சின்ன பயன்படுத்தும் முறைகள் உள்ளன. அவற்றை அன்றாடம் நாம் பயன் படுத்தினால் போதும். நம் தட்டில் சாப்பிடுவதை விட வாழை இலையில் சாப்பிடலாம். அதனால் தண்ணீர் மிச்சமாக வாய்ப்புள்ளது. தினமும் வெவ்வேறு ஆடைகளை பயன்படுத...
சமந்தாவுக்காக டப்பிங் பேசி மீண்டும் பணிக்கு திரும்பிய சின்மயி..!

சமந்தாவுக்காக டப்பிங் பேசி மீண்டும் பணிக்கு திரும்பிய சின்மயி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு எழுப்பியதும் திரையுலகில் சர்ச்சை பெண்ணாக சித்தரிக்கபட்டவர் சின்மயி. சிறந்த பாடகி அதே போல சிறந்த பின்னணி குரல் கலைஞர் என்பதால் பல முன்னணி ஹீரோயின் பலருக்கு டப்பிங் குரல் கொடுத்து வந்தார். வைரமுத்து சர்ச்சைக்கு பின் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி திடீரென நீக்கப்பட்டார். இதனால் அவரை யாரும் டப்பிங் பேசவோ, பாடவோ அழைக்காமல் இருந்தார்கள். இந்த சர்ச்சையில் சிக்குவதற்கு முன் 96 படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் பேசினார். இதுகுறித்து சின்மயி கூறும்போது, “டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை நீக்கிவிட்டனர். அதனால் தமிழ் படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்க முடியாது. சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளாக சந்தா கட்டவில்லை என்றும் அதனால் நீக்கி விட்டதாகவும் காரணம் சொல்கிறார்கள். சந்தா கட்டாதது குறித...
இரண்டாவது முறை அதிபர் ஆக பிரசாரம் தொடங்கிய டிரம்ப்..! இது அமெரிக்க தேர்தல் பரபரப்பு

இரண்டாவது முறை அதிபர் ஆக பிரசாரம் தொடங்கிய டிரம்ப்..! இது அமெரிக்க தேர்தல் பரபரப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். டிரம்பின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், 2-வது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் முறைப்படி தொடங்கினார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் டிரம்ப் பிரசாரத்தை தொடங்கினார். சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக வளர்ச்சி பெற செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். மேலும், எதிர்க்கட்சியான ஜனநாயக ...