வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.இராசாவுக்கு திமுகவில் புதுப்பதவி

டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.இராசாவுக்கு திமுகவில் புதுப்பதவி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.இராசாவுக்கு திமுகவில் புதுப்பதவி   டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.இராசாவுக்கு திமுகவில் புதுப்பதவி சென்னை அண்ணா அறிவாலயத்தில் சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு செய்யப்பட்டார். திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டார். திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டார்....
கவர்னர் அழைப்பு… 30ம் தேதி ஆந்திர முதல்வராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி..!

கவர்னர் அழைப்பு… 30ம் தேதி ஆந்திர முதல்வராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திராவில் ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு படு தோல்வி அடைந்ததோடு ஜெகன் மோகன் ரெட்டி இமாலய வெற்றி பெற்றதால் அவரை ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் ஆந்திரா தலைநகர் அமராவதியில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஆந்திரா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஐதராபாத் சென்று, கவர்னர் நரசிம்...
பக்கா கமர்சியலான ஒரு மசாலா படம்தான் கொரில்லா – ஜீவா

பக்கா கமர்சியலான ஒரு மசாலா படம்தான் கொரில்லா – ஜீவா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கொரில்லா பட பாடல் விழாவில் பிரபலங்கள் பேசியது:   இயக்குநர் டான் சாண்டி பேசியதாவது, "தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்ததிற்காக நன்றி. இசை அமைப்பாளர் எனக்கு மிக நெருக்கமான நண்பர். யுகபாரதி மிக முக்கியமானவர் எனக்கு. மற்றபடி கேமராமேன், எடிட்டர், அவர்களுக்கும் நன்றி. காஸ்ட்யூமர் பூர்த்தி ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார். கொரில்லா டீசரின் பார்த்துவிட்டு சிம்பஸி வைத்து என்னை ஏமாத்துறீயான்னு கேட்டாங்க. ஜீவா சாரை நான் கற்றது தமிழில் இருந்து பார்த்து வருகிறேன். அவர் இல்லை என்றால் இந்தப்படம் இல்லை. இந்தப்படத்தில் அவர் நிறைய உதவி பண்ணி இருக்கிறார். இந்தக்குரங்கு எங்களை அவ்வளவு அடித்திருக்கிறது. தாய்லாந்து சென்று மஜாச் செய்யாமல் வந்த டீம் நாங்கள். எங்களின் இந்த நேர்மையைப் பாராட்டி படத்தை வெற்றியடைய வேண்டும்" என்றார் இசை அமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது, "முன்னாடியே ரிலீஸ் ஆகியிர...
உண்மை நிகழ்வின் திரை வடிவம் தான் லட்சுமி ராமகிருஷ்ணனின்  “ஹவுஸ் ஓனர்”

உண்மை நிகழ்வின் திரை வடிவம் தான் லட்சுமி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  2015ம் ஆண்டு சென்னைமட்டும் அதன் சுற்றுப்புறத்தை புரட்டிப்போட்ட சம்பவம், ‘சென்னை வெள்ளம். இந்த வெள்ளத்தினால் பலர் உணவின்றி, பூச்சிகள், பாம்புகள் போன்றவையுடன் அவர்களுடைய வீடுகளில் வெள்ள நீர் தேங்கிய நிலையில் தூக்கமின்றி பல நாட்கள் இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர், சிலர் உயிரிழந்தனர். இந்த சென்னை வெள்ளத்தில், இப்படிப்பட்ட ஒரு சூழலை சந்தித்த ஒருவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை தான் படமாகியுள்ளார் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த படத்திற்கு ‘ஹவுஸ் ஓனர்’ என்று பெயரையும் வைத்து, படத்தின் முழு படபிடிப்பையும் முடித்துவிட்டு படத்தினை ரிலீசுக்கு தயார் செய்துள்ளார் லட்சுமி. இப்படம் சென்னை வெள்ளம் சம்பத்தப்பட்ட காட்சிகள் உள்ளதால், அதற்கு செட் போடும் பணியும், பொருட்செலவும் சற்று அதிகம் தான். இந்த சூழலில் படத்தின் இயக்குனர் லட்சுமி ரா...
மனிதர்களை வைத்து படம் எடுப்பதே கஷ்டம்… மிருகத்தை வைத்து அழகாக படமெடுத்திருக்கிறார்கள் – ராதாரவி

மனிதர்களை வைத்து படம் எடுப்பதே கஷ்டம்… மிருகத்தை வைத்து அழகாக படமெடுத்திருக்கிறார்கள் – ராதாரவி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். பேப்பரில் இருக்கும் கதையை அப்படியே ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அத்தகையவர் தான். அது படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் தெரிந்தது. சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் ராஜேஷ்செல்வா பேசியாதாவது, "இந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என் படத்திலும் வொர்க் பண்ணி இருக்கிறார்கள். அதனால் இந்தப்ப்படத்தை...
கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த ஹீரோயின்

கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த ஹீரோயின்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  சாய் பல்லவி சமீபத்தில் ஒரு பேஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் 'நான் என் தங்கையை விட நல்ல கலர், ஒரு சில நாட்கள் அவள் என்னுடன் கண்ணாடி பார்க்கும் போது என்னை விட அவர் கலர் கம்மி என்பதை உணர்ந்தாள். நானும் நிறைய வெஜிடேபுள் சாப்பிடு என்றேன், அதையும் அவள் செய்தால், அப்போது தான் தெரிந்தது கலர் என்பது ஒரு சிறு பிள்ளை மனதை எப்படி மாற்றுகிறது என, அதனாலேயே அதை ஊக்கப்படுத்துவது இல்லை' என கூறியுள்ளார் சாய் பல்லவி....
ம.நீ.ம. என்ற 14 மாத குழந்தையை மக்கள் நடக்க வைத்திருக்கிறார்கள்… தேர்தல் முடிவு பற்றி கமல்

ம.நீ.ம. என்ற 14 மாத குழந்தையை மக்கள் நடக்க வைத்திருக்கிறார்கள்… தேர்தல் முடிவு பற்றி கமல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
'மநீம' என்ற 14 மாத குழந்தையை தமிழக மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர். தமிழக மக்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளோம்; கடமையை செய்ய காத்திருக்கிறோம் நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் பேசக்கூடிய அளவுக்கு மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். நீங்கள் (மோடி)  வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் - கமல்ஹாசன்...
முதல் முறையாக போட்டியிட்ட எல்லா தொகுதியிலும் திமுக வெற்றி..!

முதல் முறையாக போட்டியிட்ட எல்லா தொகுதியிலும் திமுக வெற்றி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதல் முறையாக போட்டியிட்ட எல்லா தொகுதியிலும் திமுக வெற்றி..! தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அதிலும் தி.மு.க. போட்டியிட்ட 19 இடங்களிலும் அக்கட்சி வேட்பாளர்களே வெற்றி வாகை சூடினார்கள். அதேபோல், தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8-ல் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தோல்வி அடைந்தார். புதுச்சேரியை காங்கிரஸ் கைப்பற்றியது. அதேபோல், தி.மு.க. கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை போட்டியிட்ட தலா 2 இடங்களிலும் வெற்றி வாகை சூடியது. அதேபோல், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை போட்டியிட்ட தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ...
த்ரிஷாவின் வாய் பேச முடியாத மகளாக மாறிய நயன்தாராவின் வாயாடி மகள்..!

த்ரிஷாவின் வாய் பேச முடியாத மகளாக மாறிய நயன்தாராவின் வாயாடி மகள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  இமைக்க நொடிகள் படத்தில் நயன்தாரா நடிப்பைவிட மிக பரவலாக பாராட்டை பெற்றது நடிகர் கொட்டாச்சியின் மகள் மான்ஸ்வி. நயன்தாரா மகளாக வாயாடி குழந்தையாக நடித்து மான்ஸ்வி அசத்தி இருந்தார். அதன் பின் பிசியான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த மான்ஸ்வி தேதி கிடைக்காமல் பல படங்கள் காத்திருந்தன. சதுரங்க வேடை 2 படத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் திரிஷா நடித்து வரும் பரமபதம் விளையாட்டு படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருக்கிறார் மான்ஸ்வி. இமைக்கா நொடியில் நயன்தாரா மகளாக வாயாடி குழந்தையாக நடித்த மான்ஸ்வி திரிஷா மகளாக நடிக்கும் பரமபதம் விளையாட்டு படத்தில் வாய் பேச முடியாத குழந்தையாக நடித்து அசத்தி இருக்கிறார்....
என்னதான் பணம் கொடுத்தாலும் “அந்த” காட்சியில் “குயின்” காஜல் நடித்தது ரொம்ப ஓவர் – பாரீஸ் பாரீஸ் பட சர்ச்சை

என்னதான் பணம் கொடுத்தாலும் “அந்த” காட்சியில் “குயின்” காஜல் நடித்தது ரொம்ப ஓவர் – பாரீஸ் பாரீஸ் பட சர்ச்சை

CINI NEWS, HOME SLIDER, MOVIES
  பாலிவுட் கங்கணா ரணவத் நடித்து செம்ம ஹிட்டடித்த படம் ‘குயின்’. இது தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழ் வெர்ஷனில் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். ‘பாரீஸ் பாரீஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது இந்தப் படம். இந்நிலையில் இந்தப் படத்தின் ஒரிஜினல் வெர்ஷனில், கங்கணாவின் தோழி, விளையாட்டுக்கு அவரது வலது பக்க மார்பை பிடித்து அமுக்குவது போல் ஒரு காட்சி இருக்கும். தமிழ் ரீமேக்கில் நிச்சயம் அது இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அத்தனை பேரின் நினைப்பையும் தவிடு பொடியாக்கியது படத்தின் டீசர். ஆமாம்... காஜலின் மார்பை பக்கத்தில் நிற்கும் தோழி திடீரென பிடித்து அழுத்தும் காட்சி படமாக்கப்பட்டு டீசரிலும் இடம் பெற்று உள்ளது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு காஜல் அகர்வால் சும்மா பரபரப்புக்கு வெளியிட்ட ச்சீய் புகைப்படம் கடும் விமர்சன...