தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் கிருஷ்ணா!
நடிகராக இருந்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தது குறித்து பேசிய கிருஷ்ணா, ‘நான் நிறைய நல்ல கதைகளை ரசிகர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். அதற்கு OTT தளங்கள் தான் எனக்கு பரவலான கற்பனை சுதந்திரத்துடன் அதை செய்யும் வாய்ப்பளிக்கிறது. "ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட்" என்ற இந்த நிறுவனம் இப்போதைக்கு வெப் சீரீஸ், டிஜிட்டல் ஒரிஜினல்ஸ் மற்றும் திரைப்படங்களில் கவனம் செலுத்தும்.
தெலுங்கில் உருவான என்னுடைய முதல் தயாரிப்பான "High Priestess" என்ற வெப் சீரீஸ் மிகச்சிறப்பாக வந்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த மாதிரி அற்புதமாக வரும் என நானே எதிர்பார்க்கவில்லை. அமலா மேடம் போன்ற ஒரு மாபெரும் கலைஞர் இதில் நடிப்பது ஒரு உண்மையான பேரின்பம் மற்றும் ஆசீர்வாதம். குறிப்பாக, இதனை நாகார்ஜூனா சார் அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய அளவிற்கு மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. இந்த பேனர் மூலம் OTT தளத்துக்...









