ஏழை எளிய மக்களின் வங்கி கணக்கில் உடனடியாக பணம் செலுத்துங்கள் – மோடி அரசுக்கு ராகுல் மீண்டும் கோரிக்கை
ஏழை எளிய மக்களின் வங்கி கணக்கில் உடனடியாக பணம் செலுத்துங்கள் - மோடி அரசுக்கு ராகுல் மீண்டும் கோரிக்கை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் நீண்ட நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அரசு, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டத்தை அறிவித்து உள்ளது. தேவை குறைந்துள்ள நேரத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் அர்த்தம் இல்லை. எனவே இந்த திட்டத்தை நான் எதிர்க்கிறேன்.
தொழிற்சாலைகளுக்கு நிதி ஆதாரங்களை அளிப்பதன் மூலம் பீகார் போன்ற மாநிலங்களில் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும்.
உணவும், பணமும்...









