செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

தந்தை சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு –  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தந்தை சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
    தந்தை சொந்தமாக சம்பாதித்த சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு என்ற சட்டம் 1956-ம் ஆண்டுக்கு முன்னரும் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 1956-ம் ஆண்டு, இந்து வாரிசு உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி,  மூதாதையரின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு உண்டு என இருந்தது இதன்பின் கடந்த 2005-ம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் பிரிவு 6-ல்,  திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, மூதாதையர்களின் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை உண்டு என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலா என்பவர் தொடர்ந்த வழக்கு ஒன்றில், ’1956-ம் ஆண்டுதான் வாரிசு உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பாகவே குடும்ப தலைவர் இறந்து விட்டால், அவருடைய ஆண் வாரிசுகளுக்கு மட்டும் தான் சொத்து செல்லுமா அல்லது மகள்களுக்கும் சொத்தில் உரிமை உண்டா என்பது...
குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை: மத்திய அரசு

குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை: மத்திய அரசு

helth tips, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனாவின் 3-வது அலை சிறுவர்-சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் சிறார் தொடர்பான திருத்திய கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- * 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை. 6-11 வயதிற்குட்பட்டவர்கள், பெற்றோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பாகவும், சரியான முறையிலும் குழந்தையின் திறனை பொறுத்து முக கவசம் அணியலாம். 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பெரியவர்களை போல முக கவசம் அணிய வேண்டும். * கொரோனா, ஒரு வைரஸ் தொற்று ஆகும். தீவிரமற்ற கொரோனா தொற்றை சமாளிப்பதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு (ஆன்டிமைக்ரோபியல்) எந்தப் பங்கும் இல்லை. எனவே அறிகுறியற்ற மற்றும் லேசான பாதிப்புகளுக்கு சிகிச்சை அல்லது நோய்த்...
இனி மாஸ்க் அணிய வேண்டாம் -இங்கிலாந்து அரசு

இனி மாஸ்க் அணிய வேண்டாம் -இங்கிலாந்து அரசு

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள்
    இங்கிலாந்து மக்கள் அடுத்த வாரம் முதல் முகக்கவசம் அணிய தேவையில்லை என அறிவித்துள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றான இங்கிலாந்தில், ஓமைக்ரான் வகை பரவல் கடந்த ஆண்டு இறுதியில் வேகமெடுத்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல் அங்கு கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மக்கள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும், வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையில்லை, இரவு நேர விடுதிகள் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு அவசியமாக்கப்பட்டிருந்த கோவிட் பாஸ்கள் இனி தேவையில்லை, அதே ...
இன்றைய ராசிபலன் – 21.01.2022 – வெள்ளிக்கிழமை

இன்றைய ராசிபலன் – 21.01.2022 – வெள்ளிக்கிழமை

HOME SLIDER, ராசிபலன்
      மேஷம் ஜனவரி 21, 2022 குடும்பத்தில் இருந்துவந்த தன நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் அஸ்வினி : சாதகமான நாள். பரணி : ஆதரவு கிடைக்கும். கிருத்திகை : விருப்பம் நிறைவேறும். --------------------------------------- ரிஷபம் ஜனவரி 21, 2022 உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். வழக்கு சார்ந்த பணிகளில் நிதானம்...
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 42 ஆயிரம் ரொக்கம் கிடைக்குமாம்!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 42 ஆயிரம் ரொக்கம் கிடைக்குமாம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 42 ஆயிரம் ரொக்கம் கிடைக்குமாம். இந்த பரிசு தொகை குடுப்பது ஆஸ்திரியாவில். ஆஸ்திரியாவின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 72 சதவீத மக்கள் கொரோனாவுக்கு எதிராக முழுமையான தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டுள்ளனர். மேற்கு ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது ஆஸ்திரியா குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரிய அரசு பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் லாட்டரி சீட்டை அறிமுகப்படுத்த உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆஸ்திரியாவில் கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் தொற்று அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் ஆஸ்திரியா அரசாங்கம் மற்றுமொரு ஊரடங்கைத் தவிர்க்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தாலும் இனிமேல் தடுப்பூசி செலுத்துபவரா...
காதலை காட்டி கிட்னியை தானமாக வாங்கிய பின் காதலனை கழற்றிவிட்ட பலே காதலி!

காதலை காட்டி கிட்னியை தானமாக வாங்கிய பின் காதலனை கழற்றிவிட்ட பலே காதலி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
    காதலுக்கு கண் இல்லை என்பார்கள்... ஆனால் பாவம் இவருக்கோ காதலால் கிட்னி இல்லாமல் போய்விட்டது.   அமெரிக்கா எல்லைக்கு அருகே மெக்சிகோவில் நாட்டின் அமைந்துள்ள மாகாணம் பாஜா கலிபோர்னியா. இங்கு வசிக்கும் உசீல் மார்டினெஸ் என்பவர் இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அவர் அந்த பெண்னை உயிருக்கு உயிராக காதலித்து உள்ளார். ஒருகட்டத்தில் தனது காதலியின் தாயாருக்கு கிட்னி தேவை என்பதை  அறிந்து தனது கிட்னியை  தானமாகக் கொடுத்துள்ளார். ஆனால் காதலி  கிட்னி ஆப்ரேஷன் முடிந்த சில வாரங்களில் காதலை  பிரேக் செய்து கொண்டுள்ளார்.மேலும், வேறு ஒருவரையும் உடனடியாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து உடைந்து போன உசீல் டிக்டாக்கில் புலம்பி வருகிறார். இது தொடர்பாக உசீல் மார்டினெஸ் தனது டிக்டாக் வீடியோவில், "எனது காதலிக்கு கிட்னி தேவைப்பட்டது. அவருக்குச் சரியான டோனர் ...
சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!

சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
  இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 14-வது ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கும் சானியா மிர்சா 19 வருடங்களாக விளையாடி வருகிறார்.   இந்த நிலையில் ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் கலந்துகொண்டார் சானியா மிர்சா. பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா கிச்னோக் இணை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி - ஸ்டோர்ம் சான்டெர்ஸ் ஜோடியுடன் மோதியது. இதில்  சானியா மிர்சா  ஜோடி தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து சானியா மிர்சா டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். சானியா மிர்சா கூறும் போது  ‘இனி நான் விளையாடப்...
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ 2.87 கோடி ரொக்கம், 6.63 கிலோ தங்கம் பறிமுதல்!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ 2.87 கோடி ரொக்கம், 6.63 கிலோ தங்கம் பறிமுதல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சாராக செயல்பட்டார். இதற்கிடையில், கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கே.பி. அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, தருமபுரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும், தெலுங்கானாவிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கே.பி.அன்பழகனின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு...
விஜய்சேதுபதி படத்தில் இணைந்த வரலட்சுமி

விஜய்சேதுபதி படத்தில் இணைந்த வரலட்சுமி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  *“மைக்கேல்” படத்தில் இணைந்த நடிகை வரலட்சுமி சரத்குமார்* சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவன தயாரிப்பில் உருவாகும், பன்மொழி இந்திய படமான “மைக்கேல்” படத்தில் இணைந்திருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற தனித்துவமான நட்சத்திரமாக அறியப்படுபவர் நடிகர் சந்தீப், அவரது சிறப்புமிக்க திரைக்கதை தேர்வுகள் அவரை சிறந்ததொரு நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது. தற்போது சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய பாத்திரத்தில் நடிக்கும், ஒரு பிரமாண்டமான ஆக்‌ஷன் எண்டர்டெய்னரான “மைக்கேல்” படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். பன்மொழி இந்திய திரைப்படமாக உருவாகும் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெள...
முத்தக் காட்சிக்கு ரூ.50 லட்சம் – அனுபமா பரமேஸ்வரன் அதிரடி!

முத்தக் காட்சிக்கு ரூ.50 லட்சம் – அனுபமா பரமேஸ்வரன் அதிரடி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
முத்தக் காட்சிக்கு ரூ.50 லட்சம் - அனுபமா பரமேஸ்வரன் அதிரடி! சினிமா துறையில் கவர்ச்சிக்கும், முத்தக்காட்சிகளுக்கும் மறுத்த பல நடிகைகள் அவர்களுடைய வாய்ப்பை இழந்து பிறகு அது போன்ற காட்சிகளில் நடித்திருக்கின்றனர். இந்த பட்டியலில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் தற்போது இணைந்துள்ளார். 2015-இல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக சேர்ந்தவர் அனுபமா. இவர் தனுஷ் நடித்த கொடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பல மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திரிவிக்ரம் இயக்கத்தில் வெளியான அ ஆ தெலுங்கு படத்தில் சமந்தாவும் அனுபமா பரமேஸ்வரனும் கதாநாயகியாகளாக நடித்தனர். நல்ல வரவேற்பை பெற்ற அந்த படம் அனுபமாவிற்கு முக்கிய படமாக அமைந்தது. அதன் பிறகு அவருக்கு வந்த பல படவாய்ப்புகளில் கதாநாயகனுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் மற்றும...