தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இயக்குநர் K.P. ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’ (Jail Mates ) டைட்டில் டீசர் வெளியீடு
தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இயக்குநர் K.P. ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்' (Jail Mates ) டைட்டில் டீசர் வெளியீடு
‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கியவரும், ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு கதை, வசனம் எழுதியவரும், பத்து இயக்குநர்கள் இணைந்து நடித்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தில் கவனம் ஈர்த்த கதாபாத்திரத்தில் நடித்தவருமான இயக்குநர் K.P. ஜெகனின் அடுத்த படைப்பு ‘ஜெயில் மேட்ஸ்’.
தென்னிந்தியாவில் முதன்முறையாக மெட்டா சினிமா (Meta Cinema) பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில், இயக்குநர் K.P. ஜெகன், இயக்குநர் ஜெகனாகவே நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகனாக விஜய் வர்மா நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘வடம்’ படத்தில் நடித்த சனாஷ்கா ஸ்ரீ நடித்துள்ளார். மேலும், மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, உறியடி சங்கர்,...








