சர்வதேச அளவில் நடக்கும் உணவுத் திருவிழாக்கள்!- மினி ஸ்பெஷல் ரிப்போர்ட்!
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் பலநூறு உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. உலகின் புகழ் பெற்ற உணவுகளான பீட்சா, சாக்லெட்டில் தொடங்கி அந்தந்த பகுதிகளின் பாரம்பரிய உணவுகள் வரை அனைத்தையும் இத்திருவிழாக்களில் சுவைக்க முடியும். ஒவ்வொரு இடத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப நடத்தப்படும் இத்தகைய உணவுத் திருவிழாவிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர். அப்படி நடைபெறும் பல உணவுத் திருவிழாக்களில் சிறந்தவை சிலவற்றைப் பற்றி சிறிய தொகுப்பு இதோ உங்களுக்காக!
மூன் திருவிழா
சீனாவில் புத்தாண்டிற்கு அடுத்ததாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது மூன் திருவிழா. பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் இது சந்திரனுக்கு நன்றி சொல்லும் விதத்திலும், அறுவடையைக் கொண்டாடும் வகையிலும் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. சீனாவின் லூனார் காலண்டரின்படி எட்டாவது மாதத்தில் 15ஆம் நாள் மக்கள் அனைவரும் ஒன்றுகூட...









