போடி குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 8 பேர் உயிரிழந்தாக தகவல்
குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர் பாக்யராஜ் கூறியதாகத் தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த 12 பேர்,சென்னையை சேர்ந்த 24பேர் என மொத்தம் 36 பேர் கொண்ட குழு ஒன்று போடி அருகே குரங்கணி, கொலுக்கு மலைப்பகுதிக்கு மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றுள்ளனர். இந்த மலைக்குச் சூரியநல்லி வழியாகத்தான் செல்ல முடியும். ஆனால், இவர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வழியாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. இவர்களில் 8 ஆண்கள்,26 பெண்கள்,3 குழந்தைகள் அடங்குவர்.அதிகமானவர்கள் சென்னையைச் சேர்ந்த தனியார் மென்பொருள் ஐடி ஊழியர்கள்.
இவர்கள் மலைக்குச் சென்றிருந்த சமயத்தில் அங்கு காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட தீ, மாலையில் அதிவேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இதனால் மலைக்குச் சென்றவர்கள் திரும்ப முடியாமல் தீய...









