புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா!

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா! நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகப்பு நிற கோர்ட் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, கோடு ரெட் (code RED) என குறிப்பிட்டுள்ளார். விக்ரம் படத்தின் பர்ஸ்ட் ...
நவரசாவின் ‘புராஜெக்ட் அக்னி’ முழுநீள படமாகிறதா? – கார்த்திக் நரேன் சூசக பதில்!!

நவரசாவின் ‘புராஜெக்ட் அக்னி’ முழுநீள படமாகிறதா? – கார்த்திக் நரேன் சூசக பதில்!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நவரசாவின் ‘புராஜெக்ட் அக்னி’ முழுநீள படமாகிறதா? - கார்த்திக் நரேன் சூசக பதில்! துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசூரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் கார்த்திக் நரேன். இவர் சமீபத்தில் வெளியான நவரசா ஆந்தாலஜியில் ‘புராஜெக்ட் அக்னி’ என்கிற குறும்படத்தை இயக்கி இருந்தார். அரவிந்த்சாமி, பிரசன்னா, பூர்ணா நடிப்பில் வெளியாகி இருந்த இந்த குறும்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஹாலிவுட் பட ரேஞ்சில் இருந்ததாக பாராட்டுக்களும் கிடைத்தன. இப்படத்தை முழு நீள படமாக எடுக்குமாறு ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக கார்த்திக் நரேனுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், “புராஜெக்ட் அக்னிக்கு மாபெரும் வரவேற்பை அளித்த ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. விஷ்ணு, கிருஷ்ணா, கல்கி ஆகியோரின் பயணம் இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கார்த்திக் நரேன்....
‘சார்பட்டா பரம்பரை’ ரங்கன் வாத்தியாரை மீம் போட்டு கலாய்த்த சந்தோஷ் நாராயணன்!

‘சார்பட்டா பரம்பரை’ ரங்கன் வாத்தியாரை மீம் போட்டு கலாய்த்த சந்தோஷ் நாராயணன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘சார்பட்டா பரம்பரை’ ரங்கன் வாத்தியாரை மீம் போட்டு கலாய்த்த சந்தோஷ் நாராயணன்! பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. தற்போது, சார்பட்டா பரம்பரை பட காட்சிகளை வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக இதில் ரங்கன் வாத்தியாராக நடித்துள்ள பசுபதியும், கபிலனாக நடித்துள்ள ஆர்யாவும் சைக்கிளில் போகும் காட்சியை அடிப்படையாக கொண்டு ஏராளமான மீம்ஸ் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சார்பட்டா பரம்பரை படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனும் தன் பங்கிற்கு ரங்கன் வாத்தியாரை மீம் போட்டு கலாய்த்து உள்ளார். அவர் தன் மனைவியுடன் சைக்கிளில் ...
சொகுசு காருக்கான நுழைவு வரியை முழுமையாக செலுத்தினார் நடிகர் விஜய்!

சொகுசு காருக்கான நுழைவு வரியை முழுமையாக செலுத்தினார் நடிகர் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
சொகுசு காருக்கான நுழைவு வரியை முழுமையாக செலுத்தினார் நடிகர் விஜய்! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், அபராத தொகையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும் என்றும் வரி என்பது நன்கொடை அல்ல, கட்டாய பங்களிப்பு. நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல், ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியிருந்தார். நீதிபதியின் விமர்சனம் மற்றும் தீர்ப்பு குறித்து அதிருப்தி அடைந்த விஜய், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த ஜூலை 27-ந் தேதி, விஜய்க்கு விதிக்கப்பட...
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! கோவை குனியமுத்தூரில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு  அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
மிரட்டலான போஸ்டர்களுடன் ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது!

மிரட்டலான போஸ்டர்களுடன் ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மிரட்டலான போஸ்டர்களுடன் ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது! தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் ‘லட்சுமி’ என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்ட ராகவா லாரன்ஸ், தற்போது ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2ம் பாகம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘துர்கா’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை லாரன்ஸ் இயக்கி, நடிப்பதோடு மட்டுமின்றி தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவும் உள்ளார். அதோடு 2 மிரட்டலான போஸ்டர்களையும் வெளியிட்டு உள்ளார். இதன்மூலம்...
பீஸ்ட் அப்டேட் – விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்!

பீஸ்ட் அப்டேட் – விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீஸ்ட் அப்டேட் - விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க இயக்குனர் செல்வராகவன் ஒப்பந்தமாகி உள்ளார். அவர் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும், இவர் இதற்கு முன்னர் ‘சாணிக் காயிதம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை....
சார்பட்டா பரம்பரை 2-ம் பாகம் உருவாகுமா? – பா.ரஞ்சித் விளக்கம்!

சார்பட்டா பரம்பரை 2-ம் பாகம் உருவாகுமா? – பா.ரஞ்சித் விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சார்பட்டா பரம்பரை 2-ம் பாகம் உருவாகுமா? - பா.ரஞ்சித் விளக்கம்! தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்தின் பில்லா, விக்ரமின் சாமி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, சுந்தர் சி.யின் அரண்மனை ஆகிய படங்கள் 2 பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் 3 பாகங்கள் வெளியானது. இந்தியன் 2-ம் பாகம் தயாராகிறது இந்த நிலையில் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் 2-ம் பாகத்தையும் எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பா.ரஞ்சித் இயக்கினார். குத்து சண்டையை மையமாக வைத்து தயாரான இந்தப் படத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் ...
ஆப்கானிஸ்தானில் விமானப்படை குண்டு வீச்சில் 200 தலிபான்கள் பலி!

ஆப்கானிஸ்தானில் விமானப்படை குண்டு வீச்சில் 200 தலிபான்கள் பலி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
ஆப்கானிஸ்தானில் விமானப்படை குண்டு வீச்சில் 200 தலிபான்கள் பலி! ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் தலிபான் பயங்கரவாதிதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள். மாகாண தலைநகரங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். ஏற்கனவே தலிபான்களிடம் நிம்ரோஸ் மாகாண தலைநகரம் சாரஞ்ச் வீழ்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜவ்சான் மாகாண தலைநகரம் ஷெபர்கானை தலிபான்கள் கைப்பற்றினார்கள். 2 மாகாண தலைநகரங்கள் தலிபான்கள் கைவசம் சென்றுவிட்டதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலை அங்கு நிலவுகிறது. தலிபான்கள் கைப்பற்றிய ஷெபர்கான் பகுதியை மீட்பதற்கு ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளது. நகருக்குள் பதுங்கி இருக்கும் ...
ஒலிம்பிக் மல்யுத்தம்- வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிக்குமார்!

ஒலிம்பிக் மல்யுத்தம்- வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிக்குமார்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஒலிம்பிக் மல்யுத்தம்- வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிக்குமார்! டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும், தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறினர். அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தீபக்புனியா தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இன்று விளையாட உள்ளார். அதேசமயம், 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ரவிக்குமார் தாஹியா. இந்நிலையில், ஆடவர் 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ரவிக்குமார் தாஹியா, நடப்பு உலக சாம்பியன் ஜாவூர் உகுவேவ் (ரஷியா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியில் ரஷிய வீரரின் உடும்பு பிடியால் புள்ளிகளை இழந்த ரவிக்குமார்...