குப்பத்துராஜா விமர்சனம்
வியாசர்பாடி ஏரியாவில் சிறு சிறு குறும்புகளை செய்து கொண்டும், குடிகார பாசக்கார அப்பா எம் எஸ் பாஸ்கருக்கு நல்ல மகனாகவும், காதலிக்கு நல்ல காதலனாகவும், பார்த்திபனை தன் வில்லன் என்று நினைத்துக் கொண்டும் வரும் கதாபாத்திரம் தான் நம்ம ராக்கெட்(ஜி வி பிரகாஷ்).
எம் ஜி ராஜேந்திரன்(எம் ஜி ஆர்) என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் பார்த்திபன். எம் ஜி ஆர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் குழந்தையின் காது குத்து விழாவில் ஆரம்பித்து அந்த ஏரியாவில் நல்லது கெட்டது என அனைத்திற்கும் உதவி செய்பவர் பார்த்திபன்.
காதல், கலாட்டா என ராக்கெட் வாழ்க்கை நகர, ஒருநாள் அவர்கள் ஏரியாவில் கலகலவென சுற்றித்திரிந்த பள்ளி சிறுவன் காணாமல் போகிறான், அதிலிருந்து சில நாட்களில் எம் எஸ் பாஸ்கர் கொலை செய்யப்படுகிறார்.
தனது அப்பாவை இழந்து, செய்வதறியாது கலங்கி நிற்கிறார் ஜி வி பிரகாஷ். தனது அப்பாவை கொன்றது யார் என்று கண்டுபிடிக்க கிளம்புகிறார்...









