நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்… விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?
நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்... விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாசர் விஷால் தலைமையில் பாண்டவர் அணி என்ற பெயரில் போட்டியிட்டார்கள்.
பெரும் பரபரப்புடன் பொதுத் தேர்தல் போல பெரும் எதிர்பார்ப்புடன் நடந்த தேர்தலில் நாசர் தலைவராகவும் விஷால் பொதுச்செயலாளராகவும் கார்த்தி பொருளாளராகவும் தேர்வு பெற்றார்கள்.
இவர்களது பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன்நிறைவடைந்த நிலையில் நடிகர் சங்க கட்டட பணிகள் நடந்து வருவதால் அதையே காரணம் காட்டி 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 6 மாத கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி செயற்குழு கூட்டம் நட...









