பற்றி எரியும் தீக்கு நடுவே இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்!
பற்றி எரியும் தீக்கு நடுவே இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பொதுவாக மருத்துவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்பார்கள். ஆனால் சில நேரங்களில் அந்த கடவுளையே மிஞ்சும் அளவுக்கு மாறிவிடுகிறார்கள் மருத்துவர்கள். அப்படிபட்ட சம்பவங்களில் ஒன்றுதான் இது.
மாஸ்கோவில் பிளாகோவெஷ்செங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றின் தரைத்தளத்தில் இதய நோயாளி ஒருவருக்கு ஓபன் -ஹார்ட் சர்ஜரி நடந்துகொண்டிருந்தது. அப்போது மருத்துவமனையின் மேல்தளம் தீடீரென தீ பிடித்து ஏறிய தொடங்கியது. இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவது தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
அதேநேரம் மருத்துவமனையில் இருந்த சுமார் 100 கும் மேற்பட்ட நோய்யாளிகளையும் வெளியே மீட்டனர். இந்நிலையில்தான் 8 பேர் கொண்ட மருத்துவ குழு ஒன்று நபர் ஒருவருக்கு ஓபன் -ஹார்ட் சர்ஜரி செய்து கொண்டிருந்தது...









