விஜயகாந்தை சந்திக்கும் டிடிவி! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன?
விஜயகாந்தை சந்திக்கும் டிடிவி! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன?
சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாளை விஜயகாந்தை சந்திக்கிறார். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மே 2ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் அதிமுக – திமுக கூட்டணிகளுடன் டிடிவி தினகரன், கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அணிகளும் களத்தில் இறங்கியுள்ளன.
இதில் டிடிவி தினகரனின் அமமுகவுடன், விஜயகாந்தின் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்த கூட்டணியில், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும் மற்ற 4 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டன.
அதிமுக கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் பிரிந்து வந்த தேமுதிகவுக்கு 60 இடங்களை அமமுக ஒதுக்கி இ...









