அக்.14-ம் தேதி பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!
*அக்.14-ம் தேதி பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!*
*அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு*
நடைபெற்று முடிந்த மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கும் / தனித்தேர்வர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates), மதிப்பெண் பட்டியல் (Statement Of Mark) வரும் அக்டோபர் 14-ம் தேதி வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:
“மார்ச் 2020, மேல்நிலை முதலாம் ஆண்டு (+1 Arrear) / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) 14.10.2020 அன்று முதல் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்கள் தாங...









