‘நடன புயல்’ பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் டீசர் வெளியீடு!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பி கே தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். A.R மோகன் கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார்.
இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்ட...









