புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்

நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய் நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள், நாடக கலைஞர்கள், பழம் பெரும் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய வாக்கை பதிவு செய்திருக்கிறார். நடிகர் விஜய் வரும் போது கடும் தள்ளுமுள்ளு நடைபெற்றது. போலீசார் சிரமபட்டு விஜயை பாதுகாப்புடன் வாக்களிக்க வைத்து அனுப்பி வைத்தனர்....
பொன்னியின் செல்வன் திரையில் காட்ட நான் புறப்படுகிறேன் – சவுந்தர்யா விசாகன் அறிவிப்பு

பொன்னியின் செல்வன் திரையில் காட்ட நான் புறப்படுகிறேன் – சவுந்தர்யா விசாகன் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  பொன்னியின் செல்வன் வெப் சீரிஸூக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளரான சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக் விற்பனையான நாவல் பட்டியலில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் முதலிடத்தில் இருக்கும். இப்போது கூட பொன்னியின் செல்வன் புத்தகக் கண்காட்சிகளில் பெஸ்ட் செல்லராக இருந்து வருகிறது. இந்த நாவலைப் படமாக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், செல்வராகவன் என பலரும் முயற்சி செய்து ஏனோ தொடங்காமலேயே கை விட்டார்கள். இதில் மணிரத்னம் பலமுறை முயற்சி செய்து இப்போது ஒரு வழியாக பெரிய நிறுவனத்தோடு இணைந்திருக்கிறார். ஆனால் பிரம்மாண்டம் காரணமாக தள்ளிக்கொண்டே போனது. இப்போது இறுதியாக படமாக எடுக்க மணிரத்னம் களத்தில் இறங்கியுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகாவுடன் இணைந்து பல நூறு கோடி செலவி...
பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்… கதை புத்தகத்துக்குதான் பயன்படும் டிரம்ப் மறுப்பு..!

பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்… கதை புத்தகத்துக்குதான் பயன்படும் டிரம்ப் மறுப்பு..!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்... கதை புத்தகத்துக்குதான் பயன்படும் டிரம்ப் மறுப்பு..! அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் (வயது 73), மிகப்பெரிய கோடீசுவரர். இவர், கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அடுக்கடுக்காக செக்ஸ் புகார்கள் எழுந்தன. இது போல டிரம்ப் மீது 12-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் எழுப்பினர். ஆனால் அவற்றையெல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். அத்துடன், இந்தப் புகார்களையெல்லாம் கடந்து டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆகி, அனைவரையும் வியக்க வைத்தார். இப்போதும் அடுத்த ஆண்டு அங்கு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக டிரம்ப் சில தினங்களுக்கு முன்னர் புளோரிடா மாகாணத்தில் நடந்த பிரமாண்டமான பொது கூட்டத்தில் அறிவித்தார். இந்த நிலையில், டிரம்ப் மீது பெண் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஒருவர் கற்பழிப்பு புகார் எழுப்பி ...
தாமதமான தபால் வாக்கு… ஓட்டுபோட முடியாமல் போனது – ரஜினி வருத்தம்..!

தாமதமான தபால் வாக்கு… ஓட்டுபோட முடியாமல் போனது – ரஜினி வருத்தம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் எனது வாக்கை பதிவுசெய்ய இயலவில்லை - ரஜினிகாந்த் நடிகர் சங்கத் தேர்தல் ஏற்கனவே அறிவித்தப்படி சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் 23ம் தேதி காலை 7 மணிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் நான் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறியதாவது: மும்பையில் படப்பிடிப்பில் உள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு எனக்கு தாமதமாக கிடைத்தது. தபால் வாக்கு படிவம் இன்று மாலை 6.45 மணிக்கு வந்ததால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தபால் வாக்கு படிவத்தை முன் கூட்டியே பெற முயற்சித்தும் தாமதமாக கிடைத்தது. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான நிலை வரும் காலங்களில் ஏற்படக்கூடாது. தாமதமாக தபால் வாக்கு கிட...
வடசென்னை மக்களை பற்றிய படமா பிகில்…!

வடசென்னை மக்களை பற்றிய படமா பிகில்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வடசென்னை மக்களை பற்றிய படமா பிகில்...! பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. சென்னை அருகே பல கோடி ரூபாய் செலவில் கால்பந்தாட்ட மைதானத்தை படக்குழுவினர் இதற்காக அமைத்து இருந்தனர். அதில் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்துக்கு தலைப்பு வைக்காமலேயே ‘தளபதி 63’ என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி நேற்று மாலை படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய் நடித்து வரும் 63-வது படத்துக்கு ‘பிகில்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கும் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் இரண்டாவது தோற்றமும் வெளியானது. படத...
வாரீசு அரசியலை கேள்வி கேட்கும் யோகிபாபுவின் “தர்மபிரபு”

வாரீசு அரசியலை கேள்வி கேட்கும் யோகிபாபுவின் “தர்மபிரபு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் தர்மபிரபு படத்தின் டீசர் வெளியானது. டீசரில் வாரீசு அரசியலை வெளுத்து வாங்கும் வசனங்கள் இடம் பெற்று உள்ளது. வாரீசு அரசியல்தான் தமிழகத்தை பல ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகிறது. அதனால் யாரை குறிப்பிடுகிறார்கள் என்பது படம் பார்க்கும் போது புரியும் போல... எது எப்படியோ யோகிபாபு அரசியல் பேசுகிறார். https://youtu.be/AKAq7iDUxrs...

காதலியா… யார்றா அந்த புஷ்பா… பதறும் யோகிபாபு..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  காதலியா... யார்றா அந்த புஷ்பா... பதறும் யோகிபாபு..! தமிழ் சினிமாவில் இன்றைக்கு அசைக்க முடியாத கதாபாத்திரமாக மாறி உள்ளவர் யோகிபாபு. சின்ன பட்ஜெட் படம் தொடங்கி சூப்பர் ஸ்டார் நடிக்கும் தர்பார் வரைக்கும் யோகிபாபு இல்லாத படமே இல்லை. அந்தளவுக்கு பிசியாக உள்ள கன்னிப் பையன் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை... சில நாட்களாக யோகிபாபுவுக்கும் அந்த நடிகைக்கும் காதல் என கிசு கிசு பரவியது. அதிலும் வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன் படத்தில் புஷ்பா புருஷன் காமெடி ஹிட். அந்த காமெடியில் புஷபாவாக நடித்தது ரேஷ்மா. இவருக்கும் யோகிபாபுவுக்கும் காதல் என இணையத்தில் தகவல் கைகால் முளைக்க பறந்தது. இதெல்லாம் சரிபட்டு வராது... யோகிபாபுவிடமே கேட்கலாம் என முயற்சிக்க... "என்னது நான் காதலிக்கிறேனா... யார... யாருங்க அந்த புஷ்பா... சே...சே... ரேஷ்மா... அதெல்லாம் யாருன்னே தெரியலீங்க... எனக்கு கல்...
நிதி அமைச்சர் ஆனதும் துறை ஊழியர்களுக்கு அல்வா கிண்டிக் கொடுத்த நிர்மலா சீதாராமன்..!

நிதி அமைச்சர் ஆனதும் துறை ஊழியர்களுக்கு அல்வா கிண்டிக் கொடுத்த நிர்மலா சீதாராமன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பட்ஜெட்டுக்காக முதன்முறையாக அல்வா கிண்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..! பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு தயாரித்து, இந்த பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து 2019-20ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை அச்சடிக்கும் பணி தொடங்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் மத்திய நிதி மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் இதுவாகும். இதற்காக தான் நிர்மலா சீத்தாராமன் அல்வா கிண்டினார்....
எம்.பி. வெற்றி பெற்றது ஒருவர் அவருக்கு அவரே தலைவர் – இது அதிமுக கலாட்டா அறிக்கை

எம்.பி. வெற்றி பெற்றது ஒருவர் அவருக்கு அவரே தலைவர் – இது அதிமுக கலாட்டா அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எம்.பி. வெற்றி பெற்றது ஒருவர் அவருக்கு அவரே தலைவர் - இது அதிமுக கலாட்டா அறிக்கை பாராளுமன்றத்தில் ஒவ்வொரு கட்சியும் மக்களவையில் வெற்றி பெற்ற எம்பிக்களில் ஒருவரை அந்த கட்சியின் மக்களவை தலைவராக தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் திமுக மக்களவை எம்பிக்களின் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து ஒரே ஒரு எம்பியாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்த்ரநாத் குமார் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு அவரே தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கடிதம் ஒன்றை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடிதம் ஒன்றை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு அனுப்பியுள்ளனர். இந்த கடிதத்தை குறிப்பிட்டு இணையத்தில் ...
தமிழ் நடிகைக்கு திடீர் திருமணம்..!

தமிழ் நடிகைக்கு திடீர் திருமணம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  தமிழில் செல்வா இயக்கிய ‘நாங்க’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஷ்ணுபிரியா. புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் ஸ்பீடு டிராக் படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். ராத்திரி மழா, மகர மன்சு, கிரைம் ஸ்டோரி, பெண் பட்டினம், நாட்டி பிரபொசர், காட்ஸ் ஓன் கண்ட்ரி உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மலையாள டி.வி. தொடர்களிலும் நடிக்கிறார். விஷ்ணுபிரியா பரதநாட்டியம் கற்றவர். மேடை நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடி வருகிறார். விஷ்ணுபிரியாவுக்கும், பிரபல மலையாள இயக்குனரும் தயாரிப்பாளருமான ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய்க்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமணம் ஆழப்புழையில் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர்...