முத்தரப்பு டி 20 கிரிக்கெட் போட்டி;.இந்திய அணி.திரில் வெற்றி !!
முத்தரப்பு டி 20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் வங்காள தேச அணியை வீழ்த்தி இந்திய அணி சாட்பியன் பட்டத்தை வென்றது.
இலங்கையில் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இலங்கை அணியை வெளுத்து வாங்கி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வங்கதேச அணியுடன் இந்திய அணி நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் சிராஜ் நீக்கப்பட்டு உனத்கட் சேர்க்கப்பட்டுள்ளார். வங்காள தேச அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி முதல் மூன்று ஓவரில் 26 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் லித்தோன் தாஸ் ஆட்டமிழந்தார். அவர் 9 பந்தில் 11 ரன்கள் சேர்த்தார். சுந்தர் இந்த ஓவரில் ஒரு ரன் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அடுத்த ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவ...









