டெல்லி உள்பட பல நகரங்களை தாக்கியது புழுதி புயல்: 20 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை
வட இந்தியா முழுவதும் கடுமையான கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த 2 தினங்களுக்கு முன் இரவு திடீரென புழுதி புயல் வீசியது. இதைத்தொடர்ந்து இடியுடன் பலத்த மழையும் பெய்தது.
மணிக்கு பல கி.மீ. வேகத்தில் வீசிய இந்த பயங்கர புயலால் இரு மாநிலங்களுக்கு உட்பட்ட பல மாவட்டங்கள் பேரழிவை சந்தித்தன. பல இடங்களில் வீடுகளின் கூரைகள் பறந்தன. குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் பெயர்ந்து விழுந்தன. திடீரென வீசிய இந்த புழுதி புயல் மற்றும் அதைத்தொடர்ந்து பெய்த இடி-மழையால், வீடுகளில் இருந்த மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். 129 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி, சண்டிகர், அரியானா, மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த புயல் தாக்கியது...









