வியாழக்கிழமை, நவம்பர் 19
Shadow

HOME SLIDER

2020-21ல் தமிழகத்தின் கடன் ரூ. 50,000 கோடி!

2020-21ல் தமிழகத்தின் கடன் ரூ. 50,000 கோடி!

HOME SLIDER, NEWS, politics
2020-21ல் தமிழகத்தின் கடன் ரூ. 50,000 கோடியைத் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2020- 21 ஆம் நிதியாண்டிற்கான தமிழகத்தின் சந்தை கடன் 50 ஆயிரம் கோடியை தொட்டுள்ளது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 107% அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு ஒருபுறம் குறைந்த வருவாய் வசூல் மற்றும் மறுபுறம் செலவினங்களை அதிகரித்துள்ளது, இது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சவாலான சூழ்நிலையை உருவாக்கியது. இதனால் அனைத்து மாநிலங்களும் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டன. மகாராஷ்டிராவிற்க்கு அடுத்தபடியாக அதிக அளவில் கடன் வாங்கிய பட்டியலில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது, தமிழகத்தை அடுத்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது....
நாடாளுமன்றத்தை 40லட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடும் போராட்டம் – விவசாயிகள் மீண்டும் எச்சரிக்கை  

நாடாளுமன்றத்தை 40லட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடும் போராட்டம் – விவசாயிகள் மீண்டும் எச்சரிக்கை  

HOME SLIDER, NEWS, politics
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தை 40லட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடும் போராட்டம் - விவசாயிகள் மீண்டும் எச்சரிக்கை வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி வடமாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று நாளை எட்டி உள்ளது. இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தை 40லட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என  மத்திய அரசுக்கு விவசாயிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம்   92-வது நாளாக இன்றும் தொடர்கிறது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த  மத்திய அரசு இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்பட...
துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் -திருப்பதி கோவிலில்  அறிமுகம்

துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் -திருப்பதி கோவிலில்  அறிமுகம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் -திருப்பதி கோவிலில்  அறிமுகம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த பிரசாதங்கள் பாலித்தீன் பைகளில் வழங்கப்பட்டது சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க பாலித்தீன் பைகள் நிறுத்தப்பட்டு, துணிப்பைகளில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பசுமையை போற்றும் வகையில் துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காலியான பைகளை மண்ணில் போடும் போது துளசி விதைகள் செடிகளாக முளைக்கின்றன. தேவஸ் தான நிர்வாகம் பச்சை நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த பைகள் பச்சை மேஜிக் பைகள் என அழைக்கப்படுகிறது...
இந்தியா – இங்கிலாந்து மோதும் பகல்-இரவு டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா – இங்கிலாந்து மோதும் பகல்-இரவு டெஸ்ட் இன்று தொடக்கம்

HOME SLIDER, sports
இந்தியா - இங்கிலாந்து மோதும் பகல்-இரவு டெஸ்ட் இன்று தொடக்கம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. முதலாவது டெஸ்டில் இ்ங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இ்ந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் மோடேராவில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது. தொடக்க டெஸ்டில் தோற்றதால் கடும் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணி 2-வது டெஸ்டில் எழுச்சி பெற்றது. ஆடுகளமும் (பிட்ச்) முதல் நாளில் இருந்...
அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா திடீர் கடிதம்!

அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா திடீர் கடிதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      *அதிமுகவையும் தமிழகத்தையும் கண்களென காத்திட சூளுரைப்போம்...- சசிகலா கடிதம் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலா கடிதம் ஜெயலலிதா காட்டிய லட்சியப் பாதை விரிந்து கிடக்கிறது. அதில் அதிமுகவின் வெற்றி பயணம் தொடரவேண்டும் : ஜெயலலிதா உயிரோடு இருந்தால் எவ்வாறு உணர்வோமோ அந்த உணர்வோடு அதிமுகவில் தாயின் பரிவை, பாதுகாப்பை தொடர்ந்து இனியும் உணரலாம் : லா வீழ்ந்து கிடக்கும் நம் எதிரிகள், எஃகு கோட்டையில் விரிசல் விடாதா ? தடி ஊன்றியாவது எழுவிட மாட்டோமா என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர் : ஜெயலலிதாவுடனான 33ஆண்டு பயணத்தை நினைத்தே வாழ்நாளை கழித்துவிடலாம் என இருந்தேன், இருந்தாலும் இந்தியாவின் 3வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் அதிமுகவை கீழிறங்கிவிடக்கூடாது என்ற அக்கறை, தொண்டர்களின் கட்டளையால் பொதுவாழ்வு என்ற வேள்வியில் என...
ஹீரோயினுக்கு வெயிட் சேரும் படத்தில் இணைந்த யோகிபாபு!

ஹீரோயினுக்கு வெயிட் சேரும் படத்தில் இணைந்த யோகிபாபு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  *யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படமாக 'கங்காதேவி.'* 'ஸ்ரீகருணை ஆனந்தா மூவிஸ்' தயாரிப்பில், இயக்குநர் ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குநராக இருந்து, 'சண்டிமுனி' படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்த மில்கா செல்வகுமார் இயக்கும் புதிய படத்துக்கு 'கங்காதேவி' என பெயரிடப்பட்டுள்ளது. யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில், முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாகவும், வில்லனாக 'சூப்பர்' சுப்புராயனும் நடிக்கவிருக்கிறார்கள். இவர்களோடு சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் இணைகிறார்கள். 'காக்கா முட்டை' பட இயக்குநர் மணிகண்டனின் உதவியாளர் டி. சுரேஷ் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணிபுரிகிறார். படம் பற்றி இயக்குநரிடம் கேட்டால், ''ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. அதுவும் கங்கா - தேவின்னு இரட்டை ...
பாஸ்போர்ட் கட்டாயமில்லை…போர்டிங் பாஸ் தேவையில்லை,   முகத்தை காண்பித்து விமான பயணம் செய்யலாம் – துபாய் அதிரடி

பாஸ்போர்ட் கட்டாயமில்லை…போர்டிங் பாஸ் தேவையில்லை,   முகத்தை காண்பித்து விமான பயணம் செய்யலாம் – துபாய் அதிரடி

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
பாஸ்போர்ட் கட்டாயமில்லை...போர்டிங் பாஸ் தேவையில்லை,   முகத்தை காண்பித்து விமான பயணம் செய்யலாம் - துபாய் அதிரடி துபாய் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் விவகாரத்துறையின் பொது இயக்குனகரத்தின் இயக்குனர் முகம்மது அகமது அல் மர்ரி கூறியதாவது:- துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் பயணம் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகத்துறையினருக்கு தெரிவிக்கும் வகையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது துபாய் முனையம் எண் 3 வழியாக பயணம் செய்யும் போது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஏற்கனவே இந்த வசதியானது சோதனை முறையில் செய்யப்பட்டிருந்தது. தற்போது நேற்று முதல் இந்த வசதி பயன்பாட்டுக்கு வருகிறது. ...
“தி மார்க்ஸ்மேன்”  ஹாலிவுட் படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு என  இந்திய மொழிகளில் டெல் கணேசன் ரிலீஸ் செய்கிறார்!

“தி மார்க்ஸ்மேன்” ஹாலிவுட் படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு என இந்திய மொழிகளில் டெல் கணேசன் ரிலீஸ் செய்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, உலக செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஹாலிவுட் திரைப்படமான ‘தி மார்க்ஸ்மேன்’, ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் டெல் கணேசனின் கைபா ஃபிலிம்ஸால் வெளியிடப்படுகிறது   Tamil Trailer https://youtu.be/yy2Av69Z51c English Trailer https://youtu.be/xISt46p4J5o   கைபா இன்க் நிறுவனத்தின் தலைவரான திருச்சியை சேர்ந்த தமிழர் டெல் கே கணேசன், முகா என்னும் காணொலி முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். மேலும், ‘டெவில்ஸ் நைட்’ மற்றும் ‘கிறிஸ்துமல் கூப்பன்’ போன்ற ஆங்கில திரைப்படங்களை தயாரித்து நெப்போலியனை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவரும் இவரே. தற்போது இவர், உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹாலிவுட் திரைப்படமான லியாம் நீசனின் ‘தி மார்க்ஸ்மேன்’-ஐ ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடுகிறார். ...
தேர்தல் தேதியை முடிவுசெய்ய பிப்.23ல் (இன்று) ஆலோசனை!

தேர்தல் தேதியை முடிவுசெய்ய பிப்.23ல் (இன்று) ஆலோசனை!

HOME SLIDER, NEWS, politics
  5 மாநில சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் பிப்23ல் ஆலோசனை எனத் தகவல். தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 5 மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக செவ்வாயன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. தேர்தல் தேதி குறித்து முடிவு செய்வதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது....
நடுவானில் தீப்பிடித்து சிதறிய விமான என்ஜின்!

நடுவானில் தீப்பிடித்து சிதறிய விமான என்ஜின்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
    நடுவானில் தீப்பிடித்து சிதறிய விமான என்ஜின் அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து ஹொனலுலு நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில், 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ஒரு என்ஜினில் தீப்பிடித்துள்ளது. இதனால் விமானம் உடனடியாக டென்வர் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டது. நிலைமையை விளக்கிக் கூறி டென்வரில் அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. அதன்படி டென்வர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். எனினும் வரும் வழியிலேயே விமானத்தின் என்ஜினில் பற்றிய தீ வேகமாக பரவி, சில பாகங்கள் உடைந்து தரையில் விழுந்துள்ளன. இதனால் பயணிகளிடையே கடும் பீதி ஏற்பட்டது....