ஹெச்1பி விசா வேலைவாய்ப்பு விசாக்கள் மீதான தடையை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் சில நாட்களில் தனது அதிபர் பதவியில் இருந்து விலக உள்ள நிலையில், அமெரிக்காவிற்கு வெளிநாட்டு ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஹெச்1பி விசா மற்றும் இதர வேலைவாய்ப்பு விசாக்கள் மீதான தடையை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளார்.
அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த ஹெச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். டொனால்டு டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு, ஹெச்.1 பி விசாவில் பல்வேறு கெடுபிடிகளை அறிவித்து வருகிறார்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரும் நிலையில், வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் சு...








