புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்!  வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன  untold veerappan story

எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்! வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன untold veerappan story

HOME SLIDER, NEWS, story, தமிழக அரசியல், வீடியோ
  எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்! வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன untold veerappan story     https://youtu.be/74EAa_dYhLs
சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்!

சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழக சட்டப்பேர்வையில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி, கடந்த 2021 செப்டம்பர் 13-ம் தேதி ஏகமனதாக சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், 142 நாட்களுக்குப் பின் கடந்த ஒன்றாம் தேதி, ஆளுநரின் தனிச் செயலர் மூலம் நீட் விலக்கு மசோதா, தனக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீட் விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் முதலில் சபாநாயகர் அப்பாவு பேசினார். நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சபாநாய...
ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த கிரணின் ஆபாச கவர்ச்சி!

ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த கிரணின் ஆபாச கவர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER
ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்துடன் 'வில்லன்', பிரஷாந்துடன் 'வின்னர்', கமல்ஹாசனுடன் 'அன்பே சிவம்', எஸ்ஜே சூர்யாவின் 'நியூ' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த 'வின்னர்' படம் சூப்பர் ஹிட்டானது. இதில் அதிக கவர்ச்சியில் கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் முகம் சுளிக்கும் அளவிற்கு இருப்பதால் ரசிகர்கள் பலர் ஆபாச கமெண்ட்டுகள் பதிவு செய்து வருகிறார்கள்....
தொகுப்பாளராக களமிறங்கும் கங்கனா ரனாவத்!

தொகுப்பாளராக களமிறங்கும் கங்கனா ரனாவத்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி முதன் முதலில் மும்பை திரையுலக பிரபலங்கள் மூலம்தான் நாடு முழுவதும் அறிமுகமானது. இன்று அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொடர்ந்து நடத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இப்போது மீண்டும் ஏக்தா கபூர் தயாரிப்பில் லாக்கப் என்ற நிகழ்ச்சி அறிமுகமாக இருக்கிறது. இதை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்க இருக்கிறார். முதல் போட்டியாளராக பூனம் பாண்டே கலந்து கொள்ள இருக்கிறார். இதில் 16 விஐபிகளை தனியாக லாக்கப்பில் அடைத்து விடுவார்கள். அவர்களுக்கு போன், டிவி, கடிகாரம் என்று எதுவும் கொடுக்கப்படமாட்டாது. இந்தச் சூழலில் அவர்கள் பல மாதங்கள் இருப்பார்கள். இந்தப் போட்டியில் யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இணையத்தில் ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தைத் தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் முதல் போட்டியாளராக பூனம் பாண்டே அறிவிக்கப்பட்டுள்ளார்....
கமலுடன் நடித்த பீம் பாய் நடிகர் காலமானார்!

கமலுடன் நடித்த பீம் பாய் நடிகர் காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
1988ஆம் ஆண்டு ‘மஹாபாரத்’ திரைப்படத்தில் பீமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரவீன் குமார் சோப்தி. இவர் நடிகர் மட்டுமின்றி, விளையாட்டு, அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர். இவர் 50-க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பீம்பாய் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த பீம்பாய் கதாப்பாத்திரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவிநாசி என்ற கதாப்பத்திரத்தில் நடித்திருந்த நாகேஷை பீம் பாய் ஒரே கையில் தூக்கி செல்லும் காட்சி இன்று வரை பிரபலமாக உள்ளது. விளையாட்டு வீரரான இவர், ஆசிய அளவில் நடத்தப்பட்ட பல போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பல விருதுகளையும் வென்றுள்ளார். பிரவீன் குமார் நீண்ட நாட்களாக மார்பு தொற்று பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவ...
41 வயதாகும் நடிகையை 2வது திருமணம் செய்யும் பாலிவுட் நடிகர்!

41 வயதாகும் நடிகையை 2வது திருமணம் செய்யும் பாலிவுட் நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல இந்தி நடிகர் பர்கான் அக்தர். இவர் 2008-ல் வெளியான ராக் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவரது பாக மில்கா சிங் படம் பெரிய வெற்றி பெற்றது. பர்கான் அக்தர் நடிப்பில் கடந்த வருடம் டூபான் படம் வெளியானது. சில படங்களை இயக்கியும் இருக்கிறார். அமீர்கான் நடித்த தில் சத்தா ஹை படத்தை பர்கான் அக்தர் இயக்கி இருந்தார். இந்த படம் தேசிய விருது பெற்றது. 2000-ம் ஆண்டு அதுனா பாபானி என்பவரை பர்கான் அக்தர் திருமணம் செய்து 17 ஆண்டுகளுக்கு பிறகு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் இந்தி நடிகையும், பாடகியுமான ஷிபானி தந்தேக்கருடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 41 வயதாகும் ஷிபானியை 48 வயதாகும் பர்கான் அக்தர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இவர்கள் திருமணம் வருகிற 21-ந்தேதி எளிமையான முறையில் நடக்க உள்ளது....
செனகல் நாட்டில் வெற்றி கொண்டாட்டம் – தேசிய விடுமுறையை அறிவித்தார் அதிபர்!

செனகல் நாட்டில் வெற்றி கொண்டாட்டம் – தேசிய விடுமுறையை அறிவித்தார் அதிபர்!

HOME SLIDER, sports, உலக செய்திகள், செய்திகள்
33-வது ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டி கேமரூன் நாட்டில் நடந்தது. இறுதிப்போட்டியில் செனகல்-எகிப்து அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த போட்டியில் 90 நிமிடங்கள் நடைபெற்ற முழு ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிட  நேரத்திலும் இருஅணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து  வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட்-அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் செனகல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து தொடரில் 2002-ம் ஆண்டு கேமரூனிடமும், 2019-ம் ஆண்டு அல்ஜீரியாவிடம் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை கோட்டை விட்ட செனகல் அணி 2022ம் ஆண்டுக்கான போட்டியில்  முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைத்திருக்கிறது. ஆப்பிரிக்க கால்பந்து கோப்பையை செனகல் ...
காஷ்மீர் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டது கே.எஃப்.சி.!

காஷ்மீர் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டது கே.எஃப்.சி.!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி. நிறுவனத்தின் கிளை ஒன்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து, காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பதிவு ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு சொந்தமானது எனக் குறிப்பிட்டிருந்தது. அதேபோல் பீட்ஸா (Pizzahutpak) நிறுவனம் நாங்கள் அந்த நிலையுடன் நிற்கிறோம். காஷ்மீர் ஒற்றுமை தினம் எனத் தெரிவித்திருந்தது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களில் கே.எஃப்.சி-யை புறக்கணிப்போம் என ஹேஷ்டேக் உருவாக்கி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  டுவிட்டரில் #BoycottKFC and #BoycottPizzaHut  டிரெண்டிங் ஆனது. இது கே.எஃப்.சி. நிறுவனத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த கிளை ஒன்று வெளியிட்டுள்ள பதிவிற்கு கே.எஃப்.சி. நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. கே.எஃப்.சி. வெளியி...
பாம்பு கடித்து உயிர் பிழைத்த வாவா சுரேசுக்கு இலவச வீடு!

பாம்பு கடித்து உயிர் பிழைத்த வாவா சுரேசுக்கு இலவச வீடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் வாவா சுரேஷ். வாவா சுரேஷ் பாம்பு பிடிப்பதில் வல்லவர். வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகளை பிடித்து அவற்றை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு விட்டு வருவார். இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து மக்கள் இவரை பாம்பு பிடிக்க அழைப்பார்கள். கடந்த வாரம் கோட்டயம் பகுதியில் பாம்பு பிடிக்க சென்றார். அங்கு நல்ல பாம்பு ஒன்றை பிடித்து சாக்கில் அடைக்கும் போது அவரை பாம்பு கடித்து விட்டது. இதில் வாவா சுரேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷ் உடல்நிலை தேறியது. நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த வாவா சுரேஷ் நிருபர்களிடம் கூறும்போது, இது எனக்கு மறு பிறவி. இம்முறை சாவின் விளிம்புக்க...
குவாலியர் ஓடுபாதையில் விமான விபத்து… கேப்டனுக்கு ரூ.85 கோடி அபராதம்

குவாலியர் ஓடுபாதையில் விமான விபத்து… கேப்டனுக்கு ரூ.85 கோடி அபராதம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
    மத்தியப் பிரதேசத்திற்கு சொந்தமான பீச் கிராஃப்ட் கிங் ஏர் பி250 ஜிடி ரக விமானம் கொரோனா தொற்று பரிசோதனை கருவிகள், மருந்துகள் உள்ளிட்டவை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த விமானம் கடந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி அன்று 71 ரெம்டெசிவிர் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு அகமதாபாத்தில் இருந்து குவாலியருக்கு சென்றது. கேப்டன் மஜித் அக்தர் விமானத்தை இயக்கினார். துணை விமானி ஷிவ் ஜெய்ஸ்வால் மற்றும் நைப் தெசில்தார் திலீப் திவேதி ஆகியோர் உடன் இருந்தனர். விமானம் தரையிறங்கியபோது அந்த ரன்வேயில் இருந்த தற்காலிக தடுப்பில் விமானம் மோதி கடும் சேதம் அடைந்தது. இதில், விமானிகள் மூன்று பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.   இந்நிலையில், அரசுக்கு சொந்தமான விமானத்தை சேதப்படுத்தியதற்காக கேப்டன் மஜித் அக்தருக்கு ரூ.85 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்ப...