செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 8 கோடி கழிவறைகள் பிரதமர் மோடி சாதனை – மத்திய அமைச்சர் பெருமிதம்

4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 8 கோடி கழிவறைகள் பிரதமர் மோடி சாதனை – மத்திய அமைச்சர் பெருமிதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 8 கோடி கழிவறைகளை கட்டியுள்ளார். அது மட்டுமின்றி 2022-க்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க முடிவு செய்துள்ளார் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி செயல்படுத்திய பல்வேறு திட்டங்களின் பலனாகத் தான் அவருக்கு விருது கிடைத்துள்ளது. அதனை இந்த நாட்டின் 130 கோடி மக்களுக்கும் அவர் அர்ப்பணித்துள்ளார். மோடி அரசு ஏற்படுத்தப்பட்டவுடன் உடனடியாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊக்கம் அளிக்கும் வகையில் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் பல்வேறு மாறுதல்களை செய்துள்ளது. விவசாய நிலத்தில் ஏற்படும் பாதிப்புகள், விவசாய பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், விளைந்த பின்னர் ஏற்படும் பாதிப்...
அதிமுக ஆலோசனை கூட்டம் மதுரையில் தொடங்கியது

அதிமுக ஆலோசனை கூட்டம் மதுரையில் தொடங்கியது

HOME SLIDER, politics, செய்திகள்
அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவையடுத்து அவரது திருவாரூர் தொகுதியும், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் காலமானதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியும் காலியாக உள்ளது. இதையடுத்து, இந்த இரு தொகுதிகள் உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில், அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மூத்த அமைச்சர்கள், நிர்வாகிக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தேர்தல் பணிக் குழுக்களை அமைப்...
ஸ்டாலின் ஆபீஸ் ஆகிறது கோபாலபுரம் கலைஞர் இல்லம்..!

ஸ்டாலின் ஆபீஸ் ஆகிறது கோபாலபுரம் கலைஞர் இல்லம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
குருப்பெயர்ச்சி ஸ்பெஷல் ஸ்டாலின் ஆபீஸ் ஆகிறது கோபாலபுரம் கலைஞர் இல்லம்..! இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் அரை நூற்றாண்டுகளாக கோலோச்சி வந்த இடம் கோபாலபுரம் கலைஞர் இல்லம். பல நேரங்களில் பிரதமரை தீர்மானித்த பேச்சுக்களை இங்குதான் முடிவு செய்திருக்கிறார்கள் என்றாலும் மிகையில்லை. இந்த வீடு 1955-இல் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு வருவதற்கு முன்பாகவே கருணாநிதி பெயரில் அந்த வீடு வாங்கப்பட்டுள்ளது. அப்போது முதல், இறுதியாக மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு வரை அந்த வீட்டில் தான் கருணாநிதி வாழ்ந்தார். இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி முதல் தற்போதைய பிரதமர் மோடி வரை அந்த வீட்டின் படி ஏறி இறங்காத அரசியல் ஆளுமைகளே இல்லை என்று கூறலாம். அத்தனை சிறப்புமிக்க அந்த வீட்டை, தானும் தன் மனைவி தயாளு அம்மையாரும் மறைந்த பின் இலவச மருத்துவமனையாக மாற்றியமைக்கப்படும் என கருணாநிதியே அறி...
விஜயை பார்த்து அதிமுகவுக்கு பயமா..? அமைச்சர் மாபா பாண்டியராஜன் பதில்

விஜயை பார்த்து அதிமுகவுக்கு பயமா..? அமைச்சர் மாபா பாண்டியராஜன் பதில்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிய இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இசை வெளியீட்டு விழாவில்  பேசிய  நடிகர் விஜய்,  சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன். மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை. மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால் மாநிலம் நல்லதாகவே இருக்கும். மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. ஆனால் சர்கார் படத்தில் அர்சியலிலேயே மெர்சல் பண்ணியி...
தமிழகத்தில் பரவலாக மழை – 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் பரவலாக மழை – 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  லட்சத்தீவுப் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அடையாறு , மந்தைவெளி , திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில், நள்ளிரவு சுமார் 20 நிமிடங்கள் வரை மழை பெய்தது. அதேபோல், இன்று காலை மீண்டும் கனமழை பெய்ய துவங்கியது. கிண்டி, எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்படுகிறது....
“எங் மங் சங்” படம் மூலம் குழந்தைகளை கவர களமிறங்கிய பிரபுதேவா..!

“எங் மங் சங்” படம் மூலம் குழந்தைகளை கவர களமிறங்கிய பிரபுதேவா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "எங் மங் சங்". இந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்திராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி அர்ஜுன்.எம்.எஸ். இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்தது. சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட...
ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு!

ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    இந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து உலக அளவிலான விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது “பரியேறும் பெருமாள்” திரைப்படம். “நீலம் புரொடக்சன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்காக சென்னையில் பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் வன்னி அரசு, “நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் தமிழன் பிரசன்னா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திராவிடர் வ...
சைக்கோ கதை சிக்கல்… நம்ப வைத்து ஏமாற்றிய மிஷ்கின்…  குற்றம்சாட்டும் நடிகர்

சைக்கோ கதை சிக்கல்… நம்ப வைத்து ஏமாற்றிய மிஷ்கின்… குற்றம்சாட்டும் நடிகர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், வீடியோ
    சைக்கோ கதை எனக்காக உருவாக்கப்பட்டது - மிஷ்கின் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் - புதுமுக நடிகர் மைத்ரேயா குமுறல் பிரபல இயக்குனர் மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோ லிங்க்... https://www.youtube.com/watch?v=-1F4PmrCv6Y...
96 திரை விமர்சனம்

96 திரை விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் இப்படி ஒரு படங்கள் தலைகாட்டும்... அந்த படங்களை பார்க்கிற அத்தனை தலைகளும் தங்கள் கடந்த கால வாழ்க்கையை திரும்பி பார்க்க வைக்கும்... அப்படி ஒரு படம்தான் விஜய்சேதுபதி&த்ரிஷா நடித்திருக்கிற 96 பள்ளிப்பருவ காதல் கதையை அதுவும் நிறைவேறாத காதலை இத்தனை நீளமாக... அத்தனை அழகாக... கவிதையாக... படத்திலும், படம் பார்க்கிறவர்களையும் வெட்கப்பட வைத்து... யப்பா இயக்குனரே... இவ்ளோ நாளா எங்கய்யா இருந்த... என்று கேட்க வைத்திருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார். பள்ளிக்காதல் முடிந்து திடீரென காணாமல் போன ராமச்சந்திரன் தன் முன்பு 22 வருஷங்களுக்கு பிறகு தாடி மீசையுடன் 40ஐ தாண்டிய முதிர்ந்த வயசுடன் வந்து நிற்கும்போது... எதிரில் நிற்பது பள்ளியில் உருகி உருகி ஆசைப்பட்ட ஜானு என்பதை அறிந்து வெட்கப்படும் விஜய் சேதுபதி... அதை பார்த்து வயசை மறந்து படம் பார்க்கும் எல்லாருமே வெ...
அல்சபி ஆம்பூர் பிரியாணி இப்போது நுங்கம்பாக்கத்திலும்…!

அல்சபி ஆம்பூர் பிரியாணி இப்போது நுங்கம்பாக்கத்திலும்…!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் 2 வது கிளை! - சென்னை நுங்கம்பாக்கத்தில் திறப்பு சுமார் 25 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க, ஆம்பூரின் புகழ் பெற்ற பிரியாணி உணவகமான அல்சபி ஆம்பூர் பிரியாணி, கடந்த மாதம் சென்னை வளசரவாக்கத்தில் தொடங்கப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் அதன் 2 வது கிளை சென்னை நுங்கம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ளது. சுவை மற்றும் தரம் இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகங்களின் 20 கிளைகள் சென்னையில் திறக்கப்பட உள்ளது. கடந்த மாதம் இதன் முதல் கிளை சென்னை வளசரவாக்கம் திறக்கப்பட்டு வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, உடனடியாக இரண்டாவது கிளை திறக்கும் பணியில் ஈடுபட்ட அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் உரிமையாளர் கமல், தங்களது இரண்டாவது கிளையை நுங்கம்பாக்கத்தில் உள்ள, உத்தமர் காந்தி சாலையில், காவேரி காம்பிளக்ஸ் பக்கத்தில்...