புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

அஜீத் எச்சரிக்கை விவரம் என்ன?

அஜீத் எச்சரிக்கை விவரம் என்ன?

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கடுப்பான அஜித், கனல் தெறிக்கும் எச்சரிக்கை தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அஜீத் அறிக்கை. "தனது பெயரை பயன்படுத்தி தொழில் சம்பந்தமாக அணுகினால் ஏமாற வேண்டாம்": ஒரு சில தனிநபர்கள் தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் சம்பவங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. "வர்த்தக ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ ஏமாற்றப்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல"- அஜித் தரப்பு. அஜித்திடம் வேலை பார்த்தவர்கள் அவரது பெயரை தவறாக பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து அறிக்கை வெளியீடு. நடிகர் அஜித்குமாரின் மேலாளராக சுரேஷ் சந்திரா என்பவர் தான் இருக்கிறார். சுரேஷ் சந்திராவை தவிர்த்து வேறு யாருடனும் தொடர்பு கொள்ள வேண்டாம். நடிகர் அஜித்குமாரின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்.எஸ்.பரத் அறிக்கை....
அடுத்தாண்டு ஜனவரி 27தான் சசிக்கலா விடுதலை நாள் சொல்கிறது RTI Act

அடுத்தாண்டு ஜனவரி 27தான் சசிக்கலா விடுதலை நாள் சொல்கிறது RTI Act

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சசிகலா விடுதலை எப்போது? பரபரப்பு தகவல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை. சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல். சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை  என ஆர்டிஐ மூலம் தகவல். ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப் போகும்....
சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம் என ஓய்வு பெற்ற  6 நீதிபதிகள் கடிதம்!

சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம் என ஓய்வு பெற்ற 6 நீதிபதிகள் கடிதம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் ‘‘அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது. தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்தபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள் அனல் பறக்க விவாதிப்பார்கள்.’’ என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபத...
எங்க அப்பா எப்பவும் “கிங்”தான் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேச்சு!

எங்க அப்பா எப்பவும் “கிங்”தான் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  தேமுதிக 16-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக கொடியை விஜயகாந்த் ஏற்றினர். இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசி, "மொழியை மொழியாக பார்க்க வேண்டும். தமிழை பிரச்சாரம் செய்பவர்கள் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். எனக்கு எப்பொழுதும் எங்க அப்பாதான் கிங். எனக்கு எங்க அப்பா கிங் ஆக இருக்க தான் ஆசை. செயற்குழு பொதுக்குழு கூட்டி தான் தேமுதிக கூட்டணியை முடிவு செய்யும். தேமுதிகவின் மேல் உள்ள நம்பிக்கையில் இளைஞர்கள் இந்த கட்சியில் சேர்ந்துள்ளனர். என்னை விஜயகாந்த் மகனாக பார்க்காதீர்கள். உங்கள் நண்பனாக பாருங்கள். 40 வருடங்கள் கேப்டன் மக்களுக்காக உழைத்து வருகிறார். இந்தி மொழி எதிர்ப்பு என பலர் தப்பான பிரச்சாரம் செய்கின்றனர். கேப்டன் வழியில் அன்னை மொழி காப்போம்....
நீட் தேர்வால் 12 எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் – பார்லிமெண்ட் கூட்டத்தில் டி.ஆர்.பாலு புகார்

நீட் தேர்வால் 12 எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் – பார்லிமெண்ட் கூட்டத்தில் டி.ஆர்.பாலு புகார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நீட் தேர்வால் 12 எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் - பார்லிமெண்ட் கூட்டத்தில் டி.ஆர்.பாலு புகார் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும், எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது, நீட் தேர்வு தொடர்பான பிரச்சனையை திமுக எழுப்பியது. திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசும்போது, நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக 12 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார். ‘நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட 12 மாணவர்கள் அனைவரும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்த அவை மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அவர்கள் பிளஸ் 2-ல் மாநில பாடத்தில்...
மீண்டும் காமெடி படத்தயாரிப்பில் சுந்தர்.சி நிறுவனம்!

மீண்டும் காமெடி படத்தயாரிப்பில் சுந்தர்.சி நிறுவனம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  டைரக்டர் சுந்தர்.C யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய முழுநீள நகைச்சுவை திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம் 'ஹலோ நான் பேய் பேசுறேன்', 'முத்தின கத்திரிக்கா', 'மீசைய முறுக்கு', 'நட்பே துணை', 'நான் சிரித்தால்' ஆகிய 5 வெற்றிப் படங்களை தயாரித்த இயக்குநர் சுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் நிறுவனத்தின் 6வது படம் “புரொடக்ஷன் எண்.6” -ன் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியது. படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சென்னையில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும். மத்திய அரசு பண மதிப்பீட்டை குறைத்த போது பலரின் வாழ்க்கையில் மிகப்பெரிய விளைவுகள் ஏற்பட்டது. அப்படி பிரசன்னா, ஷாம் மற்றும் அஸ்வின் மூவரின் வாழ்க்கை வாழ்க்கையில் ஏற்பட்ட விளைவுகளை நகைச்சுவையாக கூறுவதே இப்படத்தின் மையக்கரு. இதில் பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு, விடிவி கணேஷ், ஆர்.என்.ஆர். மனோ...
நீட் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நீட் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது ஸ்டாலின் குற்றச்சாட்டு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  சபாநாயகர் என்னுடைய கோரிக்கையை ஏற்கவில்லை: ஸ்டாலின் பரபரப்பு பேட்டி சட்டசபை கூட்டத்தில் இருந்து வெளியில் வந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு: நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினேன். அதை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். நீட்டால் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுத்தது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வை ரத்து செய்ய ஒரு முறை கூட முதல்வரோ, அமைச்சர்களோ டெல்லி சென்று வந்துள்ளனரா? நீட் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது. நீட், புதிய கல்விக்கொள்கை, கொரானா என பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதால் சட்டப்பேரவையின் 2 நாட்கள் கூட்டம் போதாது என்று எதிர்க் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.   https://youtu.be/WxoKMQHGji4...
நீட்தேர்வு, சுற்றுச்சூழல் வரைவு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

நீட்தேர்வு, சுற்றுச்சூழல் வரைவு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நீட்தேர்வு, சுற்றுச்சூழல் வரைவு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்   கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. கொரோனா சூழல் காரணமாக, முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும் இரு வெவ்வேறு ஷிப்ட்களில் நடக்கிறது. கூட்டம் நடத்துவதற்காக இருசபைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி  சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. கூட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், காலை 8 மணிக்கே எம்பிக்கள் பாராளுமன்றத்திற்கு வரத் தொடங்கினர். இந்நிலையில், முதல் நாளான இன்று பாராளுமன்றத்திற்கு வந்த திமுக எம்பிக்கள் அனைவரும், பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க வரைவு அற...