புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

கடல் நீரை மேகம் உறுஞ்சும் அதிசயம் அமெரிக்காவில்…!

கடல் நீரை மேகம் உறுஞ்சும் அதிசயம் அமெரிக்காவில்…!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய காட்சி வெளியாகி உள்ளது. லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா பகுதிகளில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்தவர்கள் கடலில் பேரதிசயத்தைக் கண்டனர். ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்று இந்தக் காட்சி இருந்ததாக இதனைப் படம் பிடித்தவர்கள் தெரிவித்துள்ளனர்....
வாகன ஆவணஙகளையும்,  டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கவும் டிசம்பர் 31வரை கால அவகாசம்

வாகன ஆவணஙகளையும்,  டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கவும் டிசம்பர் 31வரை கால அவகாசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வாகன ஆவணஙகளையும்,  டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கவும் டிசம்பர் 31வரை கால அவகாசம் வழஙகி உள்ளது மத்திய அரசு!   கொரோனா பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து,  பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பிறகு காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை  மத்திய  அரசு நீட்டித்து வருகிறது.  செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதிவரை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்களில் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கொரோனா  பெருந்தொற்று சூழல் இன்னும் முழுமையாக நீங்காததால், இதை கருத்தில் கொண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது....
அதானி குழுமத்திற்கு விமான நிலையம் குத்தகை விடும் மத்திய அரசுக்கு எதிராக கேரளாவில் தீர்மானம்!

அதானி குழுமத்திற்கு விமான நிலையம் குத்தகை விடும் மத்திய அரசுக்கு எதிராக கேரளாவில் தீர்மானம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கேரள சட்டசபையில் தீர்மானம். திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்கள் அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுத்தது. அந்த முடிவுக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விட கூடாது என வலியுறுத்தி நேற்று கேரளா முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சி அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று கேரள விமானநிலையங்களை, குத்தகைக்கு விடும் மத்திய அரசின் தீர்மானத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் கேரள முதல்வரால் முன் வைக்கப்பட்ட தீர்மானம் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது....
தமிழக சட்டசபைத்தேர்தலை மனதில் வைத்து “ஆர்ட்டிக்கள் 15” பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி

தமிழக சட்டசபைத்தேர்தலை மனதில் வைத்து “ஆர்ட்டிக்கள் 15” பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழக சட்டசபைத்தேர்தலை மனதில் வைத்து "ஆர்ட்டிக்கள் 15" பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி *போனி கபூரின் பே வியூ ப்ரொஜெக்ட் எல் எல் பி , உதயநிதி ஸ்டாலின்,இயக்குனர் அருண் ராஜா காமராஜா இணைந்து வழங்கும் படம்=இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற "ஆர்டிக்கல் 15' படத்தின் ரீ மேக்.* இந்தியா பல்வேறு மொழிவாரியான மற்றும் கலாச்சார ரீதியான பிரிவுகள் கொண்ட தேசம் என்றாலும் கலை மற்றும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் ஒருமித்த கருத்துக் கொண்ட நாடு. இதைக் கருத்தில் கொண்டு பலவேறு பெரிய நிறுவனங்கள் கடந்த காலத்தில் வேற்று மொழிகளில் வெற்றி அடைந்த பல படங்களை தங்களது மொழிகளில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்று உள்ளன. குறிப்பாக தமிழில் பெரும் வெற்றி பெற்ற பல படங்களை ஹிந்தியில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்றவர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர். சமீபமாக அவர் ஹிந்தியில் வெற்றி பெற்ற படங்களை தமி...
சினிமா ஷூட்டிங் தொடங்க அனுமதி அளித்து விதிகளை சொன்ன மத்திய அரசு!

சினிமா ஷூட்டிங் தொடங்க அனுமதி அளித்து விதிகளை சொன்ன மத்திய அரசு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  கொரேனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை சினமா ஷூட்டிங் நடத்தப்படவில்லை. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். மத்திய அரசுக்கும், அந்தந்த மாநில அரசுகளுக்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலதரப்பில் இருந்தும் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ஜவடேகர், மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்தால் சினிமா ஷூட்டிங் நடத்தப்படலாம் எனத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நடைமுறைகள்:- 1. படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை 2. 6 அடி சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 3. குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு படப்பி...
மயில்களுக்கு உணவளித்த பிரதமர் மோடி!

மயில்களுக்கு உணவளித்த பிரதமர் மோடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  தேசிய பறவையான மயிலுடன் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சுமார் 1.47 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது பக்கத்தில் பிரதமர் வெளியிட்டார். டில்லி லோக் கல்யாண் மார்க் வீட்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவுடன், 'விலைமதிப்பற்ற தருணங்கள்' என்ற தலைப்பில் ஹிந்தியில் எழுதிய கவிதை ஒன்றையும் மோடி பகிர்ந்துள்ளார்....
அண்டாவ காணோம் படத்தை OTT மூலம் ரிலீஸ் செய்வது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்

அண்டாவ காணோம் படத்தை OTT மூலம் ரிலீஸ் செய்வது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று அறிவித்த தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கை விவரம்: இன்றைய திரைத்துறையின் நிலை பற்றிய எனது பார்வை! OTT சமீப காலங்களாக பரவலாக பரபரப்பாக பேசப்படும் தளம். இந்த தளம் சாமான்ய தயாரிப்பாளர்களுக்கு ஆனதல்ல. பெரிய பட்ஜெட் படங்கள், மிகப் பெரிய நடிகர்கள், இப்படி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களுக்கும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தயாரிப்பாளர்களுக்கும் மட்டுமே சாத்தியமாகக் கூடிய வியாபாரமாக கூடிய தளமாக கூறப்படுகிறது. அதையும் மீறி ஒரு சில படங்கள் திரையிடப்படுகின்றன, அதன் உண்மை நிலை... பங்கு சதவீத அடிப்படையில் அந்த படங்கள் திரையிடப்படுகிறது. அப்படி திரையிடப்படும் படங்களுக்கு எந்தவித விளம்பரமும், வருவாயை ஈ...
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி குற்றவாளியா செப்.30ல் தெரியும்!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி குற்றவாளியா செப்.30ல் தெரியும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி குற்றவாளியா செப்.30ல் தெரியும்!   அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறி, கர சேவகர்கள் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அதை இடித்து தரை மட்டமாக்கினர். இது தொடர்பாக பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங், வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா உள்ளிட்டவர்கள் மீது உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் குற்ற வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் தனிக்கோர்ட்டு விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் 8-ந் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 32 பேரிடம் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 313-ன் கீழான விசாரணையை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நடத்தி முடித்து விட்டது....
ரூ.2.5 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் கண் கண்ணாடி!

ரூ.2.5 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் கண் கண்ணாடி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    ரூ.2.5 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் கண் கண்ணாடி! மகாத்மா காந்தி வட்ட வடிவ மூக்கு கண்ணாடி அணிவது வழக்கம். அவரது, தங்க பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி ஒன்று இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் ஹன்ஹாம் என்ற இடத்தில் உள்ள ஈஸ்ட் பிரிஸ்டல் ஆக்சன்ஸ் ஏல மையத்தில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. இந்த கண்ணாடி 10 ஆயிரம் பவுண்டு முதல் 15 ஆயிரம் பவுண்டு வரை ஏலம் போகலாம் என்று அந்த நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் அந்த மூக்கு கண்ணாடி 2 லட்சத்து 60 ஆயிரம் பவுண்டுக்கு (சுமார் ரூ.2 கோடியே 55 லட்சம்) ஏலம் போய் உள்ளது. அபூர்வமான இந்த மூக்கு கண்ணாடி நம்பமுடியாத விலைக்கு விற்பனையாகி இருப்பதாக அதை ஏலம் விட்ட ஈஸ்ட் பிரிஸ்டல் ஆக்சன்ஸ் ஏல மையத்தைச் சேர்ந்த ஆன்டி ஸ்டோவ் தெரிவித்தார். இங்கிலாந்தில் உள்ள மங்கோட்ஸ்பீல்டு என்ற இடத்த...
சூர்யாவின் சூரரைப் போற்று OTT டிஜிட்டல் தளமான அமேசான் பிரைமில் ரிலீஸ்!

சூர்யாவின் சூரரைப் போற்று OTT டிஜிட்டல் தளமான அமேசான் பிரைமில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நேரடியாக டிஜிட்டல்: அமேசான் ப்ரைம் வீடியோ சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் வேர்ல்ட் பிரீமியரை அறிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர். சூரரைப்போற்று அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்படப்போகிறது. அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் பிரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக பெறுதல். பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேம...