நான் தெலுங்காக இருந்தாலும் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது ஏவிஎம்மெய்யப்ப செட்டியார்தான் – TMJA பொங்கல் விழாவில் கின்னஸ் புகழ் பாடகி பி.சுசிலா பெருமிதம்!
நான் தெலுங்காக இருந்தாலும் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது ஏவிஎம்மெய்யப்ப செட்டியார்தான் - TMJA பொங்கல் விழாவில் கின்னஸ் புகழ் பாடகி பி.சுசிலா பெருமிதம்!
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடை பெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் சேரன், பாடகி பி.சுசிலா, எடிட்டர் மோகன், பிக்பாஸ் புகழ் தர்ஷன், நடிகை சர்மிளா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
சங்கத்தின் தலைவர் கவிதா பத்திரிகையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் சங்கத்தின் பொங்கல் சிறப்பு மலரை மூத்த பின்னணி பாடகி பி.சுசிலா மற்றும் எடிட்டர் மோகன் இருவரும் வெளியிட இயக்குனர் சேரன் மற்றும் பிக்பாஸ் தர்ஷன் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
தயாரிப்பாளர் எடிட்டர் மோகன் பேசும் போது, நான் கொஞ்சம் உண்மையை பேசுறவன், தப்பா நினைக்காதீங்க, நீங்க நிம்மதியா இருந்தால்...









