கொலம்பியா டோரோ மெக்கோய்உணவகத்தில் 24 கேரட் தங்கத்தில் பர்கர்!
உலகில் நாள்தோறும் புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை அத்தியாவசியமானதாக, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக உள்ளன. அந்த வகையில் மேல்நாட்டு உணவு வகையான பர்கர் தயாரிப்பில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வழக்கமாக ரொட்டி, கட்லெட், சாஸ், சீஸ் ஆகியவற்றின் கலவையாகத் தான் பர்கரைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கு தங்கத்தில் பர்கர் செய்துள்ளனர்.
கொலம்பியாவில் உள்ள டோரோ மெக்கோய் என்ற உணவகம் மிகவும் பிரபலம். இங்கு ஓரோ மெக்கோய் என்ற பெயரில் 24 கேரட் தங்கத்தில் பேகான், டபுள் மீட், டபுள் சீஸ் பர்கர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவலறிந்த உள்ளூர் மக்கள் ஏராளமானோர் உணவகத்திற்கு படையெடுத்து வந்துள்ளனர்.தங்கத்தில் செய்யப்பட்ட உயர்தர பர்கரின் விலை 59 டாலர். இந்திய மதிப்பில் 4,330 ரூபாய் ஆகும். அதுவே சாதாரண பர்கரின் விலை 11 டாலர். இந்திய மதிப்பில் 807 ரூபாய் ஆகும். வாடிக்கையாளர...









