சார்க் நாடுகளின் தலைவர்களோடு பிரதமர் மோடி ஆலோசனை… கொரானாவை தடுக்க இந்தியா சார்பில் ரூ.10 மில்லியன் ஒதுக்கீடு
கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் ஒதுக்கீடு - வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்துக்கு பின் பிரதமர் மோடி அறிவிப்பு
உலகம் முழுதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க உலகம் முழுதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சார்க்
நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் தலைநகர் டெல்லியின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க இணைந்துள்ள உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்த நிலையில் நம்முடன் இணைந்துள்ள நண்பர், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளிக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விரைவில் நலம்...









