செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

தயாநிதிமாறன்  வாகனம் மீது பாமக-வினர் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு!

தயாநிதிமாறன்  வாகனம் மீது பாமக-வினர் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சேலம் மாவட்டத்தில் தயாநிதிமாறன்  வாகனம் மீது பாமக-வினர் கல்வீசி தாக்கியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் பொதுமக்களை சந்திக்கும் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் தயாநிதி மாறன் கலந்துகொண்டு பேசி வருகிறார்.இதன் ஒரு பகுதியாக இன்று காலை ஓமலூரை அடுத்த சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, ஓமலூர், பொட்டிபுரம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார். அதன்பின் பூசாரிப்பட்டி நோக்கி தயாநிதிமாறன் செல்லும் பொழுது அங்கு நூற்றுக்கு மேற்பட்ட பாமகவினர் ராமதாஸ் மற்றும் அன்புமணி பற்றியும் அவதூறாக பேசியதாகக் கூறி கருப்பு கொடி காட்டியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இதில் தயாநிதி மாறன் பயணித்த வாகனத்தின் முகப்பு கண்ணாடி உடைக்கப்ப...
மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் வீடு திரும்பிய முன்னணி நாயகிக்கு கொரோனா!

மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் வீடு திரும்பிய முன்னணி நாயகிக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், நடிகைகள்
முதலில் ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த தமன்னாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு நடிகர் சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ராகுல் ப்ரீத் சிங் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் வீடு திரும்பினார். இதனிடையே அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. எனக்கு பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. நான் என்னை தனிமை படுத்தி கொண்டேன். நான் நன்றாக உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவரது ரசிகர்கள் அவர் நலம் பெற வேண்டும் என பிராத்தனை மேற்கொண்டு வருகின்றனர்.  ...
97 பக்க ஊழல் புகார் பட்டியல் – ஆளுநரிடம் கொடுத்தார் முக ஸ்டாலின்

97 பக்க ஊழல் புகார் பட்டியல் – ஆளுநரிடம் கொடுத்தார் முக ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
97 பக்க ஊழல் புகார் பட்டியல் - ஆளுநரிடம் கொடுத்தார் முக ஸ்டாலின் சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது திமுக தலைவர் முக ஸ்டாலினுடன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு உள்பட முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து ஆளுநர் உடனான சந்திப்பிற்கு பிறகு திமுக தலைவர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்கள் கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கெனவே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான புகாரில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தற்போது ஊழல் தடுப்புச் சட்டத...
பிக்பாஸ் ஒரு போட்டி ரம்யா ஒரு போட்டியாளர் கொச்சையாக விமர்சிப்பதை நிறுத்துங்கள் – ஆரி ரசிகர்களுக்கு ரம்யா சகோதரர் வேண்டுகோள்

பிக்பாஸ் ஒரு போட்டி ரம்யா ஒரு போட்டியாளர் கொச்சையாக விமர்சிப்பதை நிறுத்துங்கள் – ஆரி ரசிகர்களுக்கு ரம்யா சகோதரர் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பிக்பாஸ் ஒரு போட்டி ரம்யா ஒரு போட்டியாளர் கொச்சையாக விமர்சிப்பதை நிறுத்துங்கள் - ஆரி ரசிகர்களுக்கு ரம்யா சகோதரர் வேண்டுகோள் அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. 18 போட்டியாளர்கள் இருந்த பிக்பாஸ் வீட்டில் நேற்று 9-வது போட்டியாளராக அர்ச்சனா வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருப்போரின் எண்ணிக்கை 9-ஆக குறைந்திருக்கிறது. நிகழ்ச்சி முடிவடைய இன்னும் குறைந்த நாட்களே மீதமிருக்கும் நிலையில் இனி வரும் வாரங்களில் போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் பலரும் தங்களுக்குப் பிடித்த போட்டியாளர்களை ஆதரித்தும் பிடிக்காதவர்களை எதிர்த்தும் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இது சிலநேரங்களில் சண்டையாக மாறி விடுவதையும் பார்க்க முடிகிறது. கடந்த வ...

செல்ல பிசாசு ஆண்ட்ரியாவுக்கு “கேக்” வெட்டி கொண்டாடிய மிஷ்கின் டீம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
செல்ல பிசாசு ஆண்ட்ரியாவுக்கு "கேக்" வெட்டி கொண்டாடிய மிஷ்கின் டீம்! நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிசாசு 2 படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.பின்பு அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்று அந்த ஆண்டிற்கான ஃபிலிம் ஃபேர் விருதில், சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றார். இதையடுத்து முகமுடி,ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகிய படங்களை இயக்கினார். 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பிசாசு திரைப்படம் ஹாரர் மூவியாக இருந்தாலும் தந்தை மகளிற்கு இடையேயான அன்பின் ஆழத்தை எடுத்துக்காட்டும் படமாக அமைந்து வெற்றிப்பெற்றது. இதையடுத்து நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிசாசு பாகம் இரண்டி...
சசிகலா விடுதலையாகி வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு அடிப்பார் – உதயநிதி ஸ்டாலின்

சசிகலா விடுதலையாகி வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு அடிப்பார் – உதயநிதி ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  அதிமுக ஆட்சியில் அனைத்து மட்டத்திலும் ஊழல் மலிந்து விட்டது என்றும், நம்மை விட மோசமானவன் என நினைத்து கொரோனாவே பயந்து ஓடும் நிலை உள்ளது என்றும், சசிகலா விடுதலையாகி வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு  வைப்பார் எனவும்,  சிதம்பரத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சிதம்பரத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடந்தது.  திமுகவின் முன்னாள் அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், திமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், நான் முதன் முதலாக திருவாரூர் மாவட்டத்தில் இந்த பிரச்சார பயணத்தை மேற்கொண்டேன். திருக்குவளையில் கலைஞர் பிறந்த இல்லத்தில் அவரது விட்டு வாயிலின் முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டேன். எடப்பாடி அரசு...
அமீத்ஷா நீங்கள் உள்துறை மந்திரி பொய் சொல்லாதீர்கள்  – கடுப்பான மம்தா

அமீத்ஷா நீங்கள் உள்துறை மந்திரி பொய் சொல்லாதீர்கள் – கடுப்பான மம்தா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அமீத்ஷா நீங்கள் உள்துறை மந்திரி பொய் சொல்லாதீர்கள் - கடுப்பான மம்தா மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா, அனைத்து துறைகளிலும் மம்தா அரசு தோல்வி அடைந்துவிட்டது. நாட்டின் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, ஊழல், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றைத் தவிர மற்ற பல நிலைகளில் மேற்கு வங்காளம் பின்தங்கியுள்ளது என்று குற்றம்சாட்டினார். இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:- ‘‘அமித்‌ஷாவுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், நீங்கள் உள்துறை மந்திரி. உங்கள் கட்சிக்காரர்கள் கூறும் பொய்யான தகவல்களை அப்படியே தெரிவிப்பது உங்களுக்கு அழகல்ல. அமித்‌ஷா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு செவ்வாய்க்கிழமை (இன்று) நான் விரிவான பதில் அளிப்பேன். ஆனால் இன்று (நேற்று) இரண்டு வி‌‌ஷயங்களை மட்டும் பேசப்போகிறேன். தொழில்துறையில் மேற்கு வங்காளம் பூ...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சூறாவளி பிரசாரத்தை தொடங்குகிறார். இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் தொடர்பாக நேற்று முன்தினம் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ என்ற பிரசார இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதில் பதிவிட்டுள்ளனர். நாளை (புதன்கிழமை) முதல் 10 நாட்கள் தி.மு.க.வை சேர்ந்த 1,600 நிர்வாகிகள், 16 ஆயிரம் கிராமங்களில், கிராம சபை கூட்டத்தை நடத்த உள்ளனர். அதில், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்ட...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதல் இடம் பிடித்து உள்ளது அந்த நாடு. இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டு உள்ளது. அப்போது பேசிய அவர், மருந்து கிடைக்கும்பொழுது அதனை எடுத்துக் கொள்ளுங்கள் என நாட்டு மக்களை  வலியுறுத்தியுள்ளார்....
இளையராஜாவை அனுமதிக்க முடியாது – ஸ்டுடியோ நிர்வாகம்

இளையராஜாவை அனுமதிக்க முடியாது – ஸ்டுடியோ நிர்வாகம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் 1976-ம் ஆண்டு முதல் தனது படங்களுக்கு இசையமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில், பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தன் பொருட்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும், தியானம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இளையராஜாவை அனுமதிக்க முடியாது அவர் பிரதிநிதிகள் வந்து பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும் பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பொருட்களை எடுக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிப்பதாகவும், அவருடன் இளையராஜா, பிரசாத் ...