செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

அல்வா விற்கும் கதை சொல்ல வரும் அமித்ஷா – காங்கிரஸ் எம்.பி.

அல்வா விற்கும் கதை சொல்ல வரும் அமித்ஷா – காங்கிரஸ் எம்.பி.

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பா.ஜனதா கட்சியின் முக்கியத் தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா வருகிற 21-ந்தேதி தமிழகம் வருகிறார் என்று தமிழக பா.ஜனதா தலைவர் எல். முருகன் நேற்று தெரிவித்தார். மேலும், அமித் ஷாவின் தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ‘‘அல்வா விற்பதைப் போன்ற பெரும் கதை ஒன்றை சொல்ல வருகிறார் அமித்ஷா. இதற்கு முன் பலமுறை தமிழகம் வந்த அமித் ஷா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’’ என்றார்....
2021 சட்டமன்ற தேர்தலில் மு.க. அழகிரி ஆதரவு யாருக்கு?

2021 சட்டமன்ற தேர்தலில் மு.க. அழகிரி ஆதரவு யாருக்கு?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  2021 சட்டமன்ற தேர்தலில் மு.க. அழகிரி ஆதரவு யாருக்கு? மதுரையில் மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது அல்லது புதிய கட்சி தொடங்குவது குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே அது குறித்த முடிவுகள் தெரிவிக்கப்படும். கொரோனா நோய் பரவல் காரணமாக எனது ஆதரவாளர்களை சந்திக்கவில்லை எனது ஆதரவாளர்கள் என்னிடம் தான் உள்ளனர் அனைவரும் நன்றாக உள்ளனர். திமுகவில் புகைச்சல் அதிகமாகியுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் திமுகவின் நிலையை நீங்களே அறிந்து கொள்ளலாம். அதுகுறித்து தற்போது என்னால் கூற முடியாது ஏனெனில் நான் ஜோதிடன் கிடையாது. தற்போது திமுகவில் தற்போது உள்ள சில தலைவர்கள் பதவிக்காகவே இருக்கின்றனர். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அந்த நிலைமையை நீங்களே பார்க்கத்தான் போகிறீர்கள். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கல...
சிம்புவின் ‘மாநாடு’ பட ஃபர்ஸ்ட் லுக் விரைவில்…

சிம்புவின் ‘மாநாடு’ பட ஃபர்ஸ்ட் லுக் விரைவில்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் நேற்று தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஈஸ்வரன் டீசருக்கு வாழ்த்து தெரிவித்த வெங்கட் பிரபு ”ஈஸ்வரனுக்கு எங்கள் அப்துல் காலிக்கின் வாழ்த்துக்கள். விரைவில் மாநாடு ஃபர்ஸ்ட் லுக்” என பதிவிட்டுள்ளார்.   https://twitter.com/vp_offl/status/1327854118635937793?s=20  ...
இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி

இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி  நடித்த  ‘சுல்தான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜார்ஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். தீபாவளியை முன்னிட்டு இந்த அறிவிப்பை இப்படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://twitter.com/johnsoncinepro/status/1327662325470433280?s=20...
வீட்டின் முன் திரண்ட ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த ரஜினி!

வீட்டின் முன் திரண்ட ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ரஜினி விரைவில் கட்சி அறிவிப்பை வெளியிட்டு, 2021ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில்  போட்டியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை வந்து ரஜினியின் அரசியல் திட்டத்தை மாற்றிவிட்டது. ரஜினி தன் உடல்நலனை கருத்தில் கொண்டு வீட்டிலேயே இருக்கிறார். ரஜினியின் பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் அவரை சந்திப்பதற்காக ரசிகர்கள் ரஜினியின் வீட்டிற்கு வருவது வழக்கம். ரஜினியும் வெளியில் வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று காலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். கேட்டுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் ரஜினியை வாழ்த்தி கோஷமிட்டனர். உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனால், பண்டிகை நாளான இன்று சந்திக்க வந்த ரசிகர்களை ஏமாற்றம...
சிம்புவின் மத்தாப்பு… சசிகுமாரின் ஊசி வெடி… விஜய்யின் மாஸ்டர்குண்டு டீசர் அலசல்

சிம்புவின் மத்தாப்பு… சசிகுமாரின் ஊசி வெடி… விஜய்யின் மாஸ்டர்குண்டு டீசர் அலசல்

CINI NEWS, HOME SLIDER, REVIEWS, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், நடிகர்கள், விமர்சனம்
தீபாவளி அன்று ரிலீஸ் ஆன புதுப்பட டீசர்கள் குறித்த கோடஙகி பார்வை https://youtu.be/HiesRfT8lkU
தீபாவளியன்று  வெளியான மாஸ்டர் டீசர்

தீபாவளியன்று வெளியான மாஸ்டர் டீசர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் டீசர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டியது. கொரோனா பெருந்தொற்று, ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், பட வெளியீடு தள்ளிப்போனது. படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், மாலை ஆறு மணியளவில் வெளியானது.   https://www.youtube.com/watch?v=UTiXQcrLlv4...
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் 9 பேருக்கு எதிராக 31 பக்க குற்றப்பத்திரிக்கை 105 சாட்சிகள்!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் 9 பேருக்கு எதிராக 31 பக்க குற்றப்பத்திரிக்கை 105 சாட்சிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் 9 பேருக்கு எதிராக 31 பக்க குற்றப்பத்திரிக்கை 105 சாட்சிகள்! சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ். இவர்களது கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கில் கடந்த செப்.25ல் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒருங்கிணைந்த குற்றப்பத்திரிக்கையை சிபிஐ போலீசார் தாக்கல் செய்தனர். கொரோனா பாதித்து இறந்த எஸ்எஸ்ஐ பால்துரை தவிர, மற்ற 9 பேருக்கும் எதிராக சிபிஐ கூடுதல் எஸ்பி வி.கே.சுக்லா, 31 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த குற்றப்பத்திரிக்கையில் சாத்தான்குளம் காவல்நிலைய தலைமை காவலர் பியூலா, ரேவதி உள்ளிட்ட 6 காவலர்கள், சிறை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் சில வியாபாரிகள், உறவினர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட 105 பேர் சாட்சிகளாக இடம் பெற்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. ம...
திருப்பதி கோயில் ஊழியர் பக்தருக்கு அனுப்பிய ஆபாச வீடியோ!

திருப்பதி கோயில் ஊழியர் பக்தருக்கு அனுப்பிய ஆபாச வீடியோ!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு பிரத்யேகமாக டிவி சேனல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் (SVBC) என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது. இதில் 11 மணி நேரம் நேரலை நிகழ்ச்சிகளும், 4 மணி நேரம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக 90 ஊழியர்கள் போதும் என்று கூறப்படும் நிலையில், தற்போது 248 பேர் வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 150 பேர் எந்தவித வேலையும் செய்யாமல் வெறுமனே சம்பளம் பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ஏழுமலையான் தொடர்பான பக்தி நிகழ்ச்சி ஒன்றை அனுப்புமாறு SVBC சேனலிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து இ-மெயில் மூலம் லிங்க் ஒன்று பக்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை திறந்து பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந...