செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

கைது செய்ய முயன்றபோது பெண் காவலரை  தாக்கியதாக அர்னாப் மீது வழக்குப்பதிவு

கைது செய்ய முயன்றபோது பெண் காவலரை தாக்கியதாக அர்னாப் மீது வழக்குப்பதிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மும்பை அலிபாக் பகுதியில் 2018ம் ஆண்டு இன்டீரியர் டிசைனர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாய் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். . அவர் தனது மரணத்துக்கு ரிபப்ளிக் டிவி முதன்மை செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி காரணம் என எழுதி வைத்துள்ளார். அதன் அடிப்படையில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர். அதற்காக அர்னாப் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினருக்கும் அர்னாப் கோஸ்வாமிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதில் பெண் காவல் அதிகாரி ஒருவரை அர்னாப் கோஸ்வாகி தாக்கியதாகக் கூறப்படுகிறது. மும்பையில் உள்ள வீட்டில் இருந்து தன்னை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றதாக அர்னாப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அர்னாப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பையில் உள்ள இல்லத்தில் சென்று கைது செய்ய முயன்றபோது பெண் காவலரை அர்னாப் தாக்கியதாக வழக...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மையை உளறிய சமந்தா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மையை உளறிய சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார். அதை தொடர்ந்து நான்காவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் ஒயில்ட் டாக் படப்படிப்பில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் நாகர்ஜுனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். நாகர்ஜுனா இல்லாத நேரத்தில் அவரின் மருமகளான சமந்தா பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் தொகுத்து வழங்கினார். ஒயில்ட் டாக் ஷூட்டிங் இன்னும் முடியாததால் இந்த வாரமும், அடுத்த வாரமும் சமந்தா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார் சமந்தா. மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை க...
சிம்பு முழுமையாக மாற்றியுள்ளார் – தங்கை இலக்கியா பாராட்டு

சிம்பு முழுமையாக மாற்றியுள்ளார் – தங்கை இலக்கியா பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார் சிம்பு. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஈஸ்வரன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தனது உடலமைப்பை மாற்றியவுடன், எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிம்பு. அந்தப் புகைப்படங்களுடன் இந்த மாற்றத்துக்கு உதவிய, வழிகாட்டிய அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்திருந்தார். சிம்புவின் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு அவருடைய தங்கை இலக்கியா ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சிம்பு பல மாற்றங்களைக் கண்டிருக்கிறார். இந்த மாற்றம் எடைக் குறைப்பு பற்றியது மட்டுமல்ல. தனது சுயம், வாழ்க்கையின் நோக்கம், லட்சியங்களை அறிந்து கொள்ளவும்தான். இந்தப் பயணத்தில் சில நாட்கள் நான் அவருடன் இருந்தேன். அவரது இலக்கை நோக்கி அவர் கடுமையா...
புதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை…தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி

புதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை…தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  புதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் அறிவித்தார். அதில் வருகிற நவம்பர் 10-ந் தேதி முதல் உரிய கட்டுப்பாடுகளுடன் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் வி.பி.எப் என்ற திரைப்பட ஒளிபரப்பு கட்டணத்தை செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். மேலும் டிஜிட்டல் நிறுவனங்கள் மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒருமுறை கட்டணத்தை மட்டுமே செலுத்த முடியும். ஒரே ஒரு முறை வி.பி.எப் கட்டணத்தை செலுத்தும் முறைக்கு தியேட்டர் உரி...
மீ டூ பிரச்சினை சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்

மீ டூ பிரச்சினை சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். நடிகைகள் மீ டூவில் பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் சொன்ன பிறகு இந்தியாவில் மீ டூ இயக்கம் பிரபலமானது. இந்த நிலையில் சக்திமான் தொடரில் நடித்து பிரபலமான முகேஷ் கன்னா மீ டூ இயக்கம் பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். வீட்டை பார்த்துக்கொள்வதுதான் பெண்களின் வேலை. அவர்கள் வேலைக்கு போக ஆரம்பித்த பிறகுதான் மீ டூ பிரச்சினை உருவானது. ஆண்களுக்கு நிகராக நடக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்கள் என்றெல்லாம் பேசி உள்ளார் அவரது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  பாடகி சின்மயி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகுதான் மீ டூ பிரச்சினை வந்ததாக முகேஷ் கன்னா கூறியிருக்கிறார். ஆண்கள் தங்கள் கை...
வேல் யாத்திரை மூலம் சமூக அமைதியை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேட தமிழக பா.ஜ.க. முயற்சி செய்கிறது – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

வேல் யாத்திரை மூலம் சமூக அமைதியை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேட தமிழக பா.ஜ.க. முயற்சி செய்கிறது – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- முருகன் பெயரை வைத்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர், வேல் யாத்திரை நடத்தி தமிழகத்தில் ரத்தக் களரியை ஏற்படுத்த தூபம் போட்டு வருகிறார். கடந்த காலத்தில் சூலாயுதத்தினால் ஏற்பட்ட விளைவுகளைப் போல, வேல் யாத்திரை மூலம் சமூக அமைதியை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேட தமிழக பா.ஜ.க. முயற்சி செய்கிறது. இந்த முயற்சிகளை ஜனநாயக, மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள சக்திகள் முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மத்திய வேளாண் சட்டங்களினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதை மக்களிடையே பரப்புரை செய்வதற்காக 150 இடங்களில் இருந்து விவசாய டிராக்டர்களில் ஏர் கலப்பை பொறுத்தப்பட்ட ஊர்வலம் காங்கிரஸ் கட்சி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த ஊர்வலத்தின் மூலமாக வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக...
தேர்தலுக்கு தயாராகும் கமல்ஹாசன்

தேர்தலுக்கு தயாராகும் கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தேர்தலுக்கு தயாராகும் கமல்ஹாசன் சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இன்று காலை, பிற்பகல், மாலை என மூன்று கட்டமாக 100 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசிக்கிறார். சட்டசபை தொகுதிவாரியாக மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சி குறித்து நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார். தனித்து போட்டியிடுவதா? கூட்டணி அமைக்கலாமா? என ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது....
பாடகர் வேல்முருகன் வெளியேற  பாடகி ‘சுசிலீக்ஸ்’ சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி!

பாடகர் வேல்முருகன் வெளியேற பாடகி ‘சுசிலீக்ஸ்’ சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் 25 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 17-வதாக வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தார் அர்ச்சனா. அதைத்தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்று முதல் நபராக வெளியேற்றப்பட்டார் நடிகை ரேகா. இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இவர்களில் பாடகர் வேல்முருகன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்று 18-வது போட்டியாளராக 'சுசிலீக்ஸ்' சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதற்கான புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கடந்...
மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபர் கைது!

மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபர் கைது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த வெள்ளியன்று மாலை மசூதியின் தெற்கு நுழைவாயிலை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. இடையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சாலைத் தடுப்புகளையும் மோதித்தள்ளி விட்டு வேகமாகச் சென்ற அந்த கார் சுவற்றில் மோதி நின்றது கார் வேகமாகச் செல்வதைக் கண்டதும் அதனைப் பின் தொடர்ந்து ஓடிவந்த போலீசார் விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்தனர். அந்த நபர் அசாதாரண நிலையில் இருந்ததாகக் குறிப்பிட்ட போலீசார் அவர் குறித்த விவரங்களை வெளியிடவில்லை. மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்....