துருக்கி நிலநடுக்கம்
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி என்னும் பேரலை உருவானது. இதனால் இஸ்மிர் நகரத்திற்குள் கடல் நீர் புகுந்தது. வீதியில் நின்ற கார்கள், வீட்டில் இருந்த பொருட்களை கடல் நீர் சுருட்டிக் கொண்டு சென்றது.
2004-ம் ஆண்டு இந்தோனேசியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் இந்தோனேசியா, இந்தியா (குறிப்பாக தமிழ்நாடு), இலங்கை போன்ற நாடுகளில் சுனாமி அலை ஏற்பட்டு கடும் விளைவை ஏற்படுத்தியது. அந்த சுனாமி அலையை தற்போது துருக்கி நிலநடுக்கம் ஞாபகப்படுத்தியுள்ளது....
திடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள்
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், கடந்த செப்டம்பர் 6-ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். கடந்த வாரம் அவர் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டதால் அவருக்கு பதில் சமந்தா தொகுத்து வழங்கி வருகிறார்.
தெலுங்கு பிக்பாஸ் 4 நிகழ்ச்சி ஆரம்பித்து 53 நாட்கள் ஆன நிலையில் நேற்று போட்டியாளர்களில் ஒருவரான நோயல் சீன் பாதியில் வெளியேறினார். அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தனர். பரிசோதனையின் முடிவில் அவர் மேல் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்ததையடுத்து அவர் போட்டியிலிருந்து வெளியேறினார்.
இதற்கு முன்னர் கங்கவா என்ற போட்ட...
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். மறைந்த கணவனே குழந்தையாக பிறப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த மேக்னா ராஜுக்கு கடந்த 22-ந் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது
இந்நிலையில், அந்த குழந்தையை ‘சிண்டு’ என்ற செல்லப் பெயரால் அவரது குடும்பத்தினர் அழைத்து வருகிறார்களாம். கவலைகளை மறக்க செய்பவன் என்பதால் இந்த பெயரை செல்லமாக வைத்துள்ளதாக மேக்னாராஜின் தந்தை தெரிவித்துள்ளார். விரைவில் மேக்னா ராஜ் குழந்தையின் பெயர் சூட்டு விழா நடைபெறும் என்றும், அதனை பிரம்மாண்டமாக நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது...
வீட்டிலேயே எளிமையாக நடைபெற்ற காஜல் திருமணம்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் முடிவானது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராததால் திருமணத்தை இன்று பிரமாண்டமாக நடத்தாமல் வீட்டிலேயே எளிமையாக நடத்தி இருக்கிறார்கள். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
...
வேறு வழியின்றி 7.5% இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி - மு.க ஸ்டாலின்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்தார். ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி!
திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம். இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்!” என்று பதிவிட்டுள்ளார்....
பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் இன்று முதல் முற்றிலும் தடை
பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் தடை விதித்து கடந்த மாதம் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் பிற சீன அப்களை போல் இல்லாமல் ஏற்கனவே ப்பஜி அப்பை தனது மொபைல் மற்றும் கணினியில் பதிவிறக்கம் செய்து வைத்தவர்கள் அதனை தொடர்ந்து உபயோகித்து வந்தனர்.
இந்தியாவில் மட்டும் பப்ஜி விளையாட்டில் சுமார் 5 கோடி பேர் ஆக்டிவ் பயனாளிகளாக இருந்தனர். ப்பஜி விளையாட்டிற்கு அடிமையானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், மீண்டும் பப்ஜி விளையாட்டை இந்தியாவிற்குள் கொண்டு வரும் முயற்சியில் தென் கொரிய நிறுவனம் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று முதல் இந்தியாவில் உள்ள பயனாளிகளுக்கான அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என பப்ஜி மொபைல் அப் கேம் நிறுவனம் தெரிவித்துள்ளது....
நாளை 'புளூ மூன்’ நிகழ்வு!
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் (நீல நிலா) ‘புளூ மூன்’ நிகழ்வு நாளை ஏற்பட உள்ளது. இதை தவறவிட்டால் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் மறுபடி பார்க்க முடியும்.
புளூ மூன் என்று கூறுவதால் நிலவின் நிறத்தில் பெரிய மாறுபாடு எதுவும் இருக்காது. இது முழுக்க முழுக்க பவுர்ணமியின் கால நேரத்தை பொறுத்தது என்று நாசா விளக்கி உள்ளது.
ஒரே மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமியில் இரண்டாவதாக வரும் பவுர்ணமியே புளூ மூன் ஆகும்.
மாதத்தில் ஒரு முறை மட்டுமே பவுர்ணமி வரும். எப்போதாவது சில சமயங்களில் இரண்டு பவுர்ணமி வந்துவிடும். 29 நாட்களுக்கு ஒரு முறை வரும் பவுர்ணமி, மாதத்தில் 30 அல்லது 31 நாட்கள் இருப்பதால், சராசரியாக 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வந்துவிடுகிறது.
இந்த புளூ மூன் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவ...
ஆளுநர் தாமதித்ததால் 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிடப்பட்டது -முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பல்வேறு வசதிகளை அதிமுக அரசு ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது. மேலும் மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு அறிவித்து நிறைவேற்றி உள்ளது.
மசோதாவுக்கு ஒப்புதரல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உள்ஒதுக்கீட்டை இந்தாண்டே அமல்படுத்...