ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

கதையை மாற்றச் சொன்ன அஜீத்…குஷியான போனிகபூர்..!

கதையை மாற்றச் சொன்ன அஜீத்…குஷியான போனிகபூர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் வினோத் இயக்கத்தில் ரீமேக் ஆகியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 10 தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரித்துள்ள போனி கபூர் மீண்டும் அஜீத் நடிக்க புதுப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தையும் வினோத்தே இயக்க உள்ளார். பேச்சு வார்த்தையில் மட்டுமே இருந்த நிலையில் பட ஒப்பந்தம் இயக்குனரோடு கையெழுத்து ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரம் ஆரம்பத்தில் வினோத் சொன்ன கதை அஜீத்துக்கு பிடிக்காமல் போனதால்தான் இந்த தாமதம். இப்போது புதிதாக ஒரு கதையை அஜீத்துக்கு சொல்லி இருக்கிறார். இந்த கதை அஜீத்துக்கு பிடித்து போக ஓகே சொல்லி தயாரிப்பாளருக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து இயக்குனர் வினோத்துடன் தயாரிப்பாளர் போனிகபூர் ஒப்பந்த...
நியூஸ் சேனல், போன் இல்லாமல் இருந்தால் நிம்மதி – ஜிப்ஸி பட விழாவில் ஜீவா லகலக…

நியூஸ் சேனல், போன் இல்லாமல் இருந்தால் நிம்மதி – ஜிப்ஸி பட விழாவில் ஜீவா லகலக…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒலிம்பியா மூவிஸின் ஜிப்ஸி படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.   நடிகர் ஜீவா பேசும்போது, "ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். என் வீட்டிலே நான் ஜிப்ஸி போல தான். இந்தமாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி ஆனேன். ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன். இன்னைக்கு நம்ம போன் நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும். இந்தப்படத்திற்கு நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்து இருக்கிறேன். இந்தப்படத்தில் ராஜுமுருகன் சார் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்து தான். ராஜு முருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும். ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி எமோஷனை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட அதிகமாக எமோஷனை வெளிப்படுத்தும். ர...
ஜீவாவின் ஜிப்ஸி படம் பெரும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் அபூர்வ படம் – பிரபலங்கள் வாழ்த்து

ஜீவாவின் ஜிப்ஸி படம் பெரும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் அபூர்வ படம் – பிரபலங்கள் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  எதைச்சொல்கிறோம் என்பதைப் போலவே யார் சொல்கிறார்கள் என்பதும் கவனிக்கக்கூடியது. இரு படங்கள் தான் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். ஆனால் அப்படங்களின் தாக்கம் இன்னும் வெகுகாலம் சமூகத்தின் நெஞ்சைத் தாக்கும். அப்படியொரு சீரிய சிந்தனையுடன் படைப்புகளை கொடுத்து வரும் அவர் தற்போது ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜீவனுள்ள கதாபாத்திரத்தை சிதைக்காமல் அற்புதமாக வெளிப்படுத்தும் ஜீவா நடித்துள்ள இப்படத்தை  ஒலிம்பியா மூவிஸ் சார்பாக S. அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இன்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் உள்பட பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள் ட்ரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய "துணிவின் பாடகன் பாந்த் சிங்" என்ற ஒரு புத்தகமும் வெளியீடப்பட்டது. இந்த நூலை...
பொந்துக்குள் முடங்கிய என் படங்களை மான்ஸ்டர்  எலி வெளியே கொண்டு வரும் – எஸ்.ஜே.சூர்யா நம்பிக்கை

பொந்துக்குள் முடங்கிய என் படங்களை மான்ஸ்டர் எலி வெளியே கொண்டு வரும் – எஸ்.ஜே.சூர்யா நம்பிக்கை

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  மான்ஸ்டர் பட வெற்றியில் மகிழ்ச்சியை நடிகர் எஸ்.ஜே.சூர்யா பத்திரிகையாளர்களோடு பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியது: வாலியில் இயக்குனராக ஆரம்பித்து இன்று மான்ஸ்டர் வரை என் பயணம் வந்துள்ளது. நல்லதை எப்போதும் பாராட்ட நீங்கள் மறந்ததில்லை இப்படத்திற்காக மட்டுமல்ல ஒட்டு மொத்த என் பயணத்திற்காகவும் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு நன்றி. என்னுடைய கனவுகளும் ஆசைகளும் அதிகம் ஒரு நடிகனாக சாதிக்க வேண்டும் என எண்னி 25வருடங்கள் ஓடிவிட்டன , பாலை வனத்தில் ஒட்டகம் போல ,ஓடிக்கொண்டிருக்கும் என் திரைப் பயணத்தில் முதல்முறையாக குடும்பங்களை இணைத்துள்ளது, மான்ஸ்டர் . ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் என் படத்திற்கு முதல்முறையாக இவ்வளவு குடும்பங்கள் வந்துள்ளது இதை தவறவிட்டு விட்டேன் இவ்வளவு நாள் , இந்தி தெலுங்கு என ஒரு கலக்கு கலக்கவேண்டும்.. பிள்ளையாரின் வாகனமாக எலியின் மூலமாக நல்ல த...
அரசியல்வாதிகளுக்கும் தமிழ் ராக்கர்ஸ் நபர்களுக்கும் தொடர்பு உண்டு – SAC பகீர் குற்றச்சாட்டு

அரசியல்வாதிகளுக்கும் தமிழ் ராக்கர்ஸ் நபர்களுக்கும் தொடர்பு உண்டு – SAC பகீர் குற்றச்சாட்டு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  கமலா திரையரங்கில் நடைபெற்ற குறும்பட வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு: சினாமாவை காப்பாற்ற வேண்டியவர்கள் சினிமாவை காப்பாற்ற முயற்சிக்கவில்லை...மாறாக சினிமா தொடர்பில்லாத இந்த படத்தை இயக்கிய ரவிராஜா சினிமா காப்பாற்ற படம் எடுத்துள்ளார்... அரசியலில் 90 சதவிகிதம் பேர் திருடர்களாக உள்ளனர். அரசியல் வாதிகள் சினிமாவை அழிக்க திட்டம் போட்டுள்ளனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் சினிமாவை யாரும் காப்பற்றவில்லை... சினிமாவிலிருந்து வந்து ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்ற பயம் அரசியல் வாதிகளிடம் உள்ளது. எம்ஜிஆருக்கு அடுத்து சினிமாவை காப்பாற்ற வேண்டுமென்கிற உணர்வு எந்த அரசியல் வாதிகளிடமும் இல்லை... சினிமாக்கார்ர்கள் சில லட்சம் ஓட்டை அவர்கள் எதிர்பார்க்கவில்லை... அரசியல் வாதிகள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களுக்கு கூட்டாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது....
மத்தியில் மாநில கட்சிகளின் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமையும் – வைகோ நம்பிக்கை

மத்தியில் மாநில கட்சிகளின் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமையும் – வைகோ நம்பிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தேச துரோக வழக்கு விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார். 2009-ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறப்பு நீதிமன்ற வாயிலில் செய்தியாளர்களிடம் தலைவர் வைகோ தமிழகத்தில் நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மத்தியில் காங்கிரஸ், மாநிலக் கட்சிகளின் கூட்டணி அரசு அமையும். தமிழ்நாட்டில் மேலும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருப்பது மிகுந்த கவலை அளிக்கின்றது. நாற்று நட்ட வயலில் இயந்திரங்களைக் கொண்டு இறக்கியது தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நடக்காத கொடுமை. இதற்குத் தமிழக அரசு முழுக்க முழுக்க உடந்தை. காவிரி மண்டலத்து மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றார்கள்....
இன்று மாலை 5 மணிக்கு ரசிகர்களை சந்திக்க சூர்யா அழைப்பு … எங்கே?

இன்று மாலை 5 மணிக்கு ரசிகர்களை சந்திக்க சூர்யா அழைப்பு … எங்கே?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள என்ஜிகே படம் மே.31-ம் தேதி வெளியாகவுள்ளது. நடிகர் சூர்யா இன்று (20.5.19) மாலை 5 மணிக்கு ரசிகர்களை ட்விட்டரில் சந்திக்கவுள்ளார் என்று என்ஜிகே பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குநர் செல்வராகவன் - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்ஜிகே. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் மே.31-ம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியீட்டு பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது நடிகர் சூர்யா ரகிகர்களுடன் ட்விட்டரில் பேச உள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ நடிகர் சூர்யா என்ஜிகே படம் குறித்து...
கமல் மீது செருப்பு வீசி கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தாரா ஹெச்.ராஜா… செருப்பு வீசியவரை வீட்டுக்கு அழைத்து பாராட்டியதால் சர்ச்சை

கமல் மீது செருப்பு வீசி கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தாரா ஹெச்.ராஜா… செருப்பு வீசியவரை வீட்டுக்கு அழைத்து பாராட்டியதால் சர்ச்சை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரச்சாரத்தின் போது கமல் மீது செருப்பு வீசிய நபரை வீட்டுக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி மகிழ்வித்துள்ளார் எச்.ராஜா. இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவா் பெயா் நாதுராம் கோட்சே என்று கமல் பேசியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த எதிர்ப்பால் பிரச்சாரத்தை ரத்து செய்த கமல் இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது பிரசார மேடையை நோக்கி காலணி வீசப்பட்டது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காலணி வீசியவர் பாஜகவை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதனால், கமல் மீது காலணி வீசிய நபரை பாஜக தேசியச் செயலாளா் எச்.ராஜா தனது இல்லத்திற்கு அழைத்து அவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்துள்ளார். ஹெச்.ராஜாவின் இந்த கேவலமான செயலை பார்க்கும் போது ராஜாதான் தூண்டி விட்டு கமல் மீது செருப்பு வீச சொல்லி இருக்கலாம் என்பது தெ...
விஜய் – சிவகார்த்திகேயன் இருவரில் யார் ஹீரோ …!

விஜய் – சிவகார்த்திகேயன் இருவரில் யார் ஹீரோ …!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் - சிவகார்த்திகேயன் இருவரில் யார் ஹீரோ ...! சிவகார்த்திகேயன் - மித்ரன் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ஹீரோ என்று பெயரிடப்பட்டுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் நடிகர் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிக்கும் இந்தப் படத்துக்கும் ஹீரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. சிவகார்த்திகேயன் பட டைட்டில் அறிவிக்கப் படுவதற்கு முன்பே விஜய் தேவரகொண்டா பட டைட்டில் ஹீரோ என்றும் பட வி...
கருத்து கணிப்புகளில் கூடாரம் காலியாகும் அதிமுக… நாற்காலி பிடிக்கும் திமுக..!

கருத்து கணிப்புகளில் கூடாரம் காலியாகும் அதிமுக… நாற்காலி பிடிக்கும் திமுக..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. குறிப்பாக தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி இருவரின் மறைவுக்கு பின் நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால் அதிகம் கவனம் பெற்றது. திமுக ஸ்டாலின் தலைமையில் ஒரு கூட்டணியையும், அதிமுக பாஜகவுடன் ஒரு கூட்டணியும், தினகரனின் அமமுக தனியாகவும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் தனியாகவும், நாம் தமிழர் சீமான் தனியாகவும் களத்தில் நின்றன. தேர்தல் வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடை பெற உள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை நிலவுவதால் மாநில கட்சிகள் அதிக அளவில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதோடு மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக மத்தியில் இருந்த மோடி அரசுக்கு இணக்கமாக செயல்பட்டதோடு, மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்...