புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ (MANTHIRA STUDIOS) – ஆர்.டி. ராஜா அறிவிப்பு!
புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ (MANTHIRA STUDIOS) – ஆர்.டி. ராஜா அறிவிப்பு!
தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளையும், புதுமையான கதை சொல்லும் முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா புதிய தயாரிப்பு நிறுவனமான ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் வழக்கமான திரைப்பட உருவாக்க முறைகளைத் தாண்டி, புதிய தொழில்நுட்பங்களுடன் தனித்துவமான படைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
33 ஆண்டுகால அனுபவம் கொண்ட கலை இயக்குநரான டி. முத்துராஜ், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் இயக்கி, தயாரிக்கும் ஹைப்பர் ரியலிஸ்டிக் டிஜிட்டல் ஹைப்ரிட் ஃபீச்சர் ஃபிலிம் (HYPER - REALISTIC DIGITAL -HYBRID FEATURE FILM), மெய்நிகர் தொழில்நுட்பத்தையும் புதுமைய...









