வயதான சங்க உறுப்பினர்களுக்கு 30 நாள் வேலை திட்டம், வட்டியில்லா கடன் – பாக்யராஜ் அதிரடி அறிவிப்பு
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் இன்று காலை நடை பெறுகிறது.
ஏற்கனவே தலைவராக 2 முறை பதவி வகித்த செல்வமணி மீண்டும் தலைவர் பதவிக்கு நிற்கிறார். அவரை எதிர்த்து இயக்குனர் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.
பாக்யராஜுக்கு பாரதிராஜாவின் ஆதரவு இருப்பது கூடுதல் பலம்.
அதோடு இப்போது எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் பாக்யராஜ் மிக நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வருவதை அனைவரும் அறிந்திருக்கிறார்கள்.
நேற்று மாலை இமயம் அணியின் கூட்டம் இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பாக்யராஜ் பேசியதாவது:
எழுத்தாளர்கள் சங்கத்தில் எத்தனையோ மாற்றங்களை பார்த்திருப்பீர்கள். அதைவிட பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம்.
வயதான இயக்குனர்கள், உதவி இயக்குனர்களுக்கு 30 நாட்கள் வேலை திட்டம் செயல்படுத்த இருக்கிறோம். பிரபலமான இயக்குனர்கள் படம் எடுக்கும் போது வயதான சங்க ...









