‘தலைவி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக படத்தை திரையிடுவது ஒத்திவைக்கப்பட்டது.
நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு தலைவி படத்தை வெளியிடுவோம் என கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார்.
தற்போது தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 'தலைவி' திரைப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் அதிமுகவினரிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெறும்.
...
நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்!
அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு 10 ஆண்டுக்கான கோல்டன் விசா நேற்று வழங்கப்பட்டது. இதற்காக அபுதாபி பொருளாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த துறையின் தலைவர் முகம்மது அலி அல் சோரபா அல் ஹம்மாதி இருவருக்கும் கோல்டன் விசாவை வழங்கி க...
நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் புகை கோபுரம்: அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது. பக்கத்து மாநிலங்களில் உள்ள விவசாயிகள், பயிர் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதை போக்க புகை கோபுரங்கள் அமைக்குமாறு டெல்லி அரசுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, புகை கோபுரம் அமைக்கும் திட்டத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லி மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
டெல்லி கன்னாட்பிளேஸ் பகுதியில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும், டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தலா ஒரு புகை கோபுரத்தை அமைத்துள்ளன.
கன்னாட்பிளேஸில், நாட்டிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்ட புகை கோபுரத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது. முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்.
பின்னர் அவர...
7 டன் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரிகள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள சின்னகுப்பம், வண்டிப்பாளையம், சேந்தமங்கலம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ ரூ.5 என்ற விலையில் சுமார் 7 டன் வெண்டைக்காயை அப்பகுதியை சேர்ந்த வியாபாரியான இளங்கோ மற்றும் அவரது குழுவை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
ஆனால் திடீரென வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால், இவர்களிடம் இருந்து வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்யவில்லை.
இதனால் வெண்டைக்காயை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் தவித்து வந்தனர். இதனிடையே குடானில் தேக்கமடைந்த வெண்டைக்காய் யாருக்கும் பயனின்றி வீணாகி ...
எப்படி இருந்த குஷ்பு இப்படி ஆகிட்டாங்க.... வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகை குஷ்பு 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்ததை போல தற்போது அரசியலிலும் படு பிசியாக செயல்பட்டு வருகிறார் குஷ்பு.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே தனது உடல் எடையை குறைக்க தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் குஷ்பு. தற்போது அவரின் முயற்சிக்கு பலனாக படு மாடலான லுக்கில் இன்றைய கதாநாயகிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ளார் குஷ்பு.
தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. எப்போதும் சேலைகளில் வலம் வரும் குஷ்பு, மாடர்ன் உடையில் கடின உழைப்பின் மூலமாக கிடைக்கும் பிரதிபலனின் மகி...
முழு படத்தையும் ஒரே வாரத்தில் நடித்து முடித்த ஹன்சிகா!\
நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘105 மினிட்ஸ்’. இப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ராஜா துஷ்ஷா இயக்கி உள்ளார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, கொரியா, சீனா போன்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். நடிகை ஹன்சிகா, ஒரு வாரத்தில் முழு படத்திலும் நடித்து முடித்துவிட்டாராம்.
இதுதவிர தமிழில் உருவாகி உள்ள மஹா படத்திலும் நடித்து முடித்துள்ளார் ஹன்சிகா, இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதில் நடிகர் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இது நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் என்பது கு...
‘கே.ஜி.எப். 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முதலில் இப்படத்தை இந்தாண்டு ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், கே.ஜி.எப். இரண்டாம் பாகத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அடுத்தாண்டு ஏப்ரல் 14-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது....
வங்கி கொள்ளையர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற அசாம் போலீஸ்!
அசாம் மாநிலம் கோக்ராஜர் மாவட்டம், போட்கான் கிராமத்தில் அலகாபாத் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் இன்று அதிகாலையில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து சந்கேமடைந்த போலீசார், செங்மாரி என்ற இடத்தில் அவர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது கொள்ளையர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பி ஓடிவிட்டனர்.
கொள்ளைக் கும்பல் வங்கி லாக்கரை வெல்டிங் செய்து உடைப்பதற்காக வைத்திருந்த கேஸ் சிலிண்டர், ஆக்சிஜன், இரும்பு கம்பி, இரண்டு துப்பாக்கிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
வங்கிக் கொள்ளையை சரியான சமயத்தில் தடுத்ததுடன், கொள்ளையர்களை சுட்டுக்கொன்ற அசாம் காவல்துறையை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்ம...