வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

HOME SLIDER

பப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள்..!

பப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள் 'தாதா 87' படத்தை டைரக்ட் செய்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி யின் அடுத்த படமான பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜூமன் , பிக் பாஸ் ஜூலி , மொட்ட ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறன்றனர் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தில் நடிக்கும் மற்ற மூன்று நடிகைகள் யார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்த அனித்ரா நாயர் , பெங்களூரை சேர்ந்த நிவேதா பட்டுலா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சாந்தினி ஆகியோர் தான் அந்த மூன்று நடிகைகள் ஆவர். மிகுந்த பொருட்செலவில் காமெடி த்ரில்லராக இப்படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
மேக்கிங்கில் மிரட்டும் மகாமுனி – கோடங்கி விமர்சனம்

மேக்கிங்கில் மிரட்டும் மகாமுனி – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கல்வி கொடுக்க ஓடும் சாந்த சொரூபி முனியையும்... பணத்துக்கு பக்காவாக திட்டம் தீட்டி ஆளைத் தூக்கும் அதிரடி மகாவையும் பயணிக்க விட்டு கூடவே வழிப் போக்கனாக ரசிகனையும் அழைத்து செல்லும் மெளனகுரு சாந்தகுமாரின் அதிரடி மிரட்டல் தான் ஆர்யாவின் மகாமுனி. ஞானவேல் ராஜா தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் 8 ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்ட ஒரு புள்ளி இன்றைக்கு இஸ்ரோவின் சந்திராயன்2 கணக்காய் ரசிகர்கள் நெஞ்சில் தடம் பதிக்க களம் இறங்கி இருக்கிறது. டேய் யார்ரா இவன்... என்னடா இப்படி இருக்கான்னு ஆர்யாவை பிரேமில் பார்க்கும் போதெல்லாம் மண்டைக்குள் குறுகுறுக்கிறது... கதாபாத்திர நடிப்பு என்பது வேற... காதாபாத்தரமாவே வாழ்க்கை நடத்துறது வேற... ஆர்யா... நீ நிஜத்துல யார்யா... யப்பா நல்ல கதை வைச்சிருக்கும் டைரக்டருங்க எல்லாத்துக்கும் சொல்லிக்கிறேன் இந்த ஆர்யா கிட்ட என்னமோ இருக்கு... கிளாமர் கதை, காமெடி ...
அமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் பிரபல ஓவியர் ஏபி ஸ்ரீதர்

அமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் பிரபல ஓவியர் ஏபி ஸ்ரீதர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  *அமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர்* அமேசான் காடுகள் உலகின் மிக பெரிய காடாக விளங்குகிறது. இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படுகிறது. காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்டுத்தீ யை கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள், இராணுவ விமானங்கள், தன்னார்வலர்கள் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து போராடுகின்றனர். இந்நிலையில், பிரபல ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர் தனது ஓவியங்கள...
பஜாரி ஆகும் ஸ்லிம் இடையழகியும்,  பிக்பாஸ் பிரபலமும்… சர்ச்சையை தேடும் தாதா87 இயக்குனர்..!

பஜாரி ஆகும் ஸ்லிம் இடையழகியும்,  பிக்பாஸ் பிரபலமும்… சர்ச்சையை தேடும் தாதா87 இயக்குனர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பஜாரி ஆகும் ஸ்லிம் இடையழகியும்,  பிக்பாஸ் பிரபலமும்... சர்ச்சையை தேடும் தாதா87 இயக்குனர்..! தமிழ் சினிமாவில் கேலி பொருளாக... ஆபாச கதாபாத்திரமாக மட்டுமே காட்டப் பட்ட திருநங்கைகளை முதல் முறையாக மிக நேர்த்தியாக காண்பித்து, அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை வெளிப்படுத்திய படம் தாதா87. இந்த படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இப்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற பெயரில் பப்ஜி படத்தை ஐஸ்வர்யா தத்தாவை வைத்து தயாரித்து இயக்கி வருகிறார். அதே நேரம் அம்சவர்தன் நடிப்பில் பீட்ரு படத்தையும் இயக்கி வருகிறார். வழக்கமாக இவரது படங்களில் தமிழ் சினிமாவில் முன்பு பிரபலமாக இருந்து ஒதுங்கி இருக்கும் பிரபலங்களை  இப்போது தேடி பிடித்து நடிக்க வைப்பார். இந்த நிலையில் இப்போது இவரின் நிறுவனம் சார்பில்  அடுத்த தயாரிப்பாக பஜாரி என்ற டைட்டில் வெளியாகி உள்ளது. மலையாளம், தமிழ் இரு மொழிகளில் இந்த படம் உருவாகிறது...
சிங்கப்பூரில் மெழுகு சிலையான பாலிவுட் கனவுக்கன்னி ஸ்ரீதேவி..!

சிங்கப்பூரில் மெழுகு சிலையான பாலிவுட் கனவுக்கன்னி ஸ்ரீதேவி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  சிங்கப்பூரில் ஸ்ரீதேவியின் அச்சு அசலான மெழுகு சிலை..! தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி பின்னர் பாலிவுட் கனவு கன்னியாக இருந்த ஸ்ரீதேவி சமீபத்தில் துபாய் சென்ற போது திடீரென மரணம் அடைந்தார். இப்போது ஸ்ரீதேவி முழு உருவ மெழுகு சிலை ஒன்று சிங்கப்பூரில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த சிலை திறப்பில் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் கலந்து கொண்டனர். அம்மா ஸ்ரீதேவி சிலையாக தத்ரூபமாக கண்முன் நிற்பதை ஜான்வி பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது....
சந்திராயன் 2 நிலவை நெருங்கியது… விண்வெளி ஆராய்ச்சியில் சாதித்த இந்தியா..!

சந்திராயன் 2 நிலவை நெருங்கியது… விண்வெளி ஆராய்ச்சியில் சாதித்த இந்தியா..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விண்வெளி திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியா, வல்லரசு நாடுகளுக்கு சற்றும் சளைத்ததாக இல்லை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் விஞ்ஞானிகள், உலகின் எந்தவொரு நாட்டினாலும் இதுவரை ஆராயப்படாத நிலவின் தென் துருவப்பகுதியை ஆராய்ந்து அறிவதற்கு ரூ.1,000 கோடி செலவில் சந்திரயான்-2 என்ற விண்கல திட்டத்தை கையில் எடுத்ததே இதற்கு சான்று. சந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 5 முறை உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் 14-ந் தேதி, அதிகாலை 2.21 மணிக்கு பெங்களூரு அருகேயுள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ...
3 ஜோடிகளோடு FIR பூஜை போட்ட விஷ்ணு விஷால்..!

3 ஜோடிகளோடு FIR பூஜை போட்ட விஷ்ணு விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  3 ஜோடிகளோடு FIR பூஜை போட்ட விஷ்ணு விஷால்..! விஷ்ணு விஷால் ராட்சசன் படத்துக்கு பின்  அடுத்ததாக நடிக்கும் படம் எப்.ஐ.ஆர். அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சுஜாதா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அஷ்வந்த் இசையமைக்கிறார். கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவை கவனிக்கிறார்....
விதார்த்-உதயா நடிப்பில் “அக்னி நட்சத்திரம்”

விதார்த்-உதயா நடிப்பில் “அக்னி நட்சத்திரம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *உதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ கரிஷ்மடிக் கிரியேஷன்ஸ்' மணிகண்டன் சிவதாஸ் - ஜேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிப்பு* 1988ல் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த சூழலில், ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லராக, உதயா - விதார்த் நடிப்பில், மீண்டும் ஒரு ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படம், முற்றிலும் புதிய கதைகளத்துடன் பிரம்மாண்டமாக உருவாகிறது. இப்படத்தை நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்தன், மோகன் ராஜா ஆகிய முன்னணி இயக்குனர்களுடன் பல வெற்றிப் படங்களில் இணை- துணை இயக்குனராக பணியாற்றிய சரண் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். மணிரத்னத்தின் திரைப்படத்திற்கும், இந்த புதிய படத்திற்கும் பெயர் ஒன்றை தவிர வேறு இந்த தொடர்பும் இல்லையென்றாலும், இப்பெயர் கிடைத...
தடகள வீராங்கனை வாழ்க்கை படத்தில் டாப்சி..!

தடகள வீராங்கனை வாழ்க்கை படத்தில் டாப்சி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து தடகள போட்டிகள் வீராங்கனையாக சாதனை பெற்ற ஒரு இளம்பெண்ணின் உண்மை கதையை இயக்குனர் நந்தா பெரியசாமி கதையாக எழுதி உள்ளார். இந்த கதையை திரைப்படமாக பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஆர்காஷ் கருணா முன்வந்துள்ளார். இந்த கதை தற்போது பாலிவுட்டில் பிரமாண்டமாக பெரிய பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாக உள்ளது இந்த படத்தில் கதையின் நாயகியான ராஜஸ்தான் இளம்பெண்ணாக நடிகை டாப்ஸி நடிக்க உள்ளார். இதற்காக அவர் தடகள பயிற்சி எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்மி ராக்கெட் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த அறிவிப்பை  நடிகை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...
சென்னையில் ஹெலிகப்டர் ஆம்புலன்ஸ் சேவையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்… லண்டனில்  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சென்னையில் ஹெலிகப்டர் ஆம்புலன்ஸ் சேவையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்… லண்டனில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இங்கிலாந்தில் செயல்பட்டுவரும் ஆம்புலன்ஸ் சேவையைப் பார்வையிட்ட முதலமைச்சர்... ஆம்புலன்ஸ் சேவை குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.... சென்னையில் ஹெலிகப்டர் ஆம்புலன்ஸ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்... லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு சுகாதார மற்றும் வெப்ப மண்டல மருந்து ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டார் முதலமைச்சர்... தமிழகத்தில் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த உடன்பாடு... இங்கிலாந்தில் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அவசர காலத்தில் அவை செயல்படும் முறைகள் குறித்து, லண்டன் வாட்டர்லூவில் உள்ள மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்தையும் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுக...