காவிரி மேலாண்மை விவகாரம்: அதிமுக உண்ணாவிரத அறிவிப்பு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வரும் ஏப்ரல் 2ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும் என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் நம்பிக்கைத் தெரிவித்து வந்தனர். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எவ்வித அறிவிப்பையோ அல்லது பணிகளையோ மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இதனால் சட்ட நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இதற்காக 3 அதிமுக எம்.பி.க்கள் வரை ராஜினாமா செய்யத் தயார் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் காவிரி விவகாரம் குறித்துப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், "காவிரி மேலாண்மை...









