உங்க புருஷன் வெளியூர் சென்றிருந்தாலும் கவலை வேண்டாம். நாங்கள் இருக்கிறோம் என தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு
தேர்தல் பிரசாரத்தில், உங்க புருஷன் வெளியூர் சென்றிருந்தாலும் கவலை வேண்டாம். நாங்கள் இருக்கிறோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் சலசலப்பு உண்டானது.
சர்ச்சையாகவும் காமெடியாகவும் பேசிவதில் புகழ்பெற்றவர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். பேச்சில் மட்டுமல்ல, சிறுவனை தனது காலணிகளை எடுக்கச் சொல்லி செயலிலும் சர்ச்சையில் சிக்கியவர். இயேசுநாதரைச் சுட்ட கோட்சே என்று ஒருமுறை கூறி சர்ச்சையில் சிக்கினார். பாடகி சுதா ரகுநாதனை பரதநாட்டியக் கலைஞர் என்று விழா ஒன்றில் மாற்றிக் கூறிய அமைச்சர் திண்டுக்கல் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியின் பேரன் ராகுல்காந்தி என்றார்.
தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை மறந்துவிட்டு, இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று இன்னொரு முறை ‘மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார். சட்னி சாப...









