வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

HOME SLIDER

போயஸ்கார்டன் பகுதியில் ஜாகை மாறிய ஜெயம்ரவி..!

போயஸ்கார்டன் பகுதியில் ஜாகை மாறிய ஜெயம்ரவி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  சென்னையில் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ்கார்டன் ஏரியாவில் புதிதாக ஒரு வீட்டை வாங்கியுள்ளார் ஜெயம் ரவி. சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் போயஸ் கார்டன் பகுதி வி.வி.ஐ,பி.கள் வசிக்கும் பகுதி. அங்கு சினிமா நடிகர்களுக்கே வீடு கிடைப்பது கஷ்டம். அதேப் போல அந்த ஏரியாவில் காலி மனைகளும் கிடையாது. அதனால் புதிதாக யாரும் அங்கு மனை வாங்கி வீடு கட்டவும் முடியாது. இதனால் எவ்வளவுதான் பணமும் ஆசையும் இருந்தாலும் அந்த ஏரியாவில் வீடு வாங்குவது குதிரைக் கொம்புதான். ஆனால் நடிகர் ஜெயம் ரவி இப்போது அங்கு சுமார் 20 கோடி மதிப்பிலான தனி வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கிரீன் சீன் நிறுவனம் எனும் வரிசையாக ஜெயம் ரவி நடிக்கும் 3 படங்களைத் தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது. இந்த மூன்று படங்களில் நடிக்க ஜெயம் ரவிக்குப் பேசப்ப்பட்ட சம்பளம் எதுவும் கிடையாதாம். அதற்குப் பதிலாக அந்த நிறுவன...
குழந்தைகளின் உளவியல் ரீதியான மனஅழுத்தம் மற்றும் தற்கொலைக்கு தீர்வு காண விஷால் புது முயற்சி!

குழந்தைகளின் உளவியல் ரீதியான மனஅழுத்தம் மற்றும் தற்கொலைக்கு தீர்வு காண விஷால் புது முயற்சி!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  குழந்தைகளின் உளவியல் ரீதியான மனஅழுத்தம் மற்றும் தற்கொலைக்கு தீர்வு காண 'ரீச் தீஷா'வுடன் கைகோர்க்கும் விஷால் பல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மனஅழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளவயதினர்கள் தான் அதிகமாகி வரும் மிகவும் வருத்தமான சூழ்நிலையே தற்போது நிலவுகிறது. இதற்கு முற்றிலும் தீர்வுகாண நாராயணா நிறுவனம் 'தி திஷா ஹெல்ப்லைன் ' உடன் கைகோர்த்துள்ளார். இதனால் அனைத்து மாணவர்களும் தங்களின் மனநல பாதிப்புகளுக்கு இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும் நடிகர் விஷால், இதுபோன்ற பாதிக்கப்படும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- உங்களுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது, விளையாட முடியவில்லை, நடக்க முடியவில்லை, ஏன்? நிற்கக்கூட முடியவில்லை. என்...
சென்னையின் இருட்டு உலகம் சி.வி.குமாரின் “கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

சென்னையின் இருட்டு உலகம் சி.வி.குமாரின் “கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
  அட்டக்கத்தி’ படம் தொடங்கி பல்வேறு படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்த அவர், ஏற்கனவே ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் களம் இறங்கினார். இப்போது ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்ற பெயரில் இரண்டாவது படத்தையும் எடுத்திருக்கிறார். இந்தப் படம் சென்ஸாருக்கு தப்புமா என்பதே இப்போதைய கேள்வி! ஜெயிலுக்குள்ளயே போதைப் பொருட்கள் தாராளமாக புழங்கும் போது, இவ்வளவு பெரிய சென்னையில் எவ்வளவு போதைப் பொருட்கள் புழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா!? கஞ்சா, ஹெராயின், சரஸ் என்று ஆரம்பித்து சென்னையில் கிடைக்காத போதைப் பொருட்களே கிடையாது!   போதை பழக்கத்திற்கு ஆளாகும் ஒரு இளம் ஜோடி எவ்வளவு சிக்கலுக்குள்ளாகிறார்கள் என்பதுதான் படத்தின் ஒன்லைன். அதன் பின்னணியில் இருக்கும் நிழல் உலக வாழ்க்கையை இதுவரை எந்த தமிழ் சினிமாவிலும் சொல்லாத அளவுக்கு டீடெய்லாக சொல்லியிரு...
இங்லிஷ் பட உலகம் மாதிரி தமிழ் பட உலகம் அழகா மாறிகிட்டே வருது – கண்ணே கலைமானே வசுந்தரா

இங்லிஷ் பட உலகம் மாதிரி தமிழ் பட உலகம் அழகா மாறிகிட்டே வருது – கண்ணே கலைமானே வசுந்தரா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக களமிறங்கி, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனிக் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் நடிகை வசுந்தரா. எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரக்கனி, சீனுராமசாமி என முத்திரை இயக்குநர்களின் கையால் மோதிரக்குட்டு பெற்றவர். தற்போது சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படம் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார். தற்போது தான் நடிக்கும் படங்கள், ஏன் இந்த இடைவெளி என்றெல்லாம் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் வசுந்தரா. ‘கண்ணே கலைமானே’ படத்தில் முக்கியமான கேரக்டரை சீனுராமசாமி சார் எனக்கு கொடுத்துள்ளார். எப்பவுமே அவருக்கு பிடித்தமாதிரி இனிமையா, கொஞ்சம் நகைச்சுவையா, அதேசமயம் கொஞ்சம் கடினமான அப்பட்டமான கிராமத்துப் பெண் கேரக்டர் ஒன்று இருக்கும் இல்லையா.? அப்படி ஒரு கேரக்டரில் தான் நான் நடிக்கிறேன். இதில் கிராமமும் இல்லாத மிகப்பெரிய நகரமும் அல்லாத ஒரு மீடியமான நகரத்துப் பெண்ணாக ஒ...
தன்வந்திரி பீடத்தில்தேர்வுபயம் நீங்க சிறப்பு ஹோமங்கள்..!

தன்வந்திரி பீடத்தில்தேர்வுபயம் நீங்க சிறப்பு ஹோமங்கள்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தன்வந்திரி பீடத்தில் தேர்வுபயம் நீங்க சிறப்பு ஹோமங்கள். 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதியில் நடைபெற்றது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வருகிற 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை ஸ்வாதி நக்ஷத்திரம் பஞ்சமி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி ஹோமத்துடன் சரஸ்வதி ஹோமமும் ஸ்ரீ வாணி சரஸ்வதி தேவிக்கு தேன் அபிஷேகமும், தாமரை பூக்களால் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது. தேர்வு பயம் நீங்க தன்வந்திரி ஹோமம் : வருகின்ற பொது தேர்வில் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் தேர்வுபயம் நீங்கவும், ஞாபக மறதியை போக்கவும், ஜாதக ரீதியாகவும், சீதோஷ்ண நிலையினாலும் ஏற்படும் தோஷங்கள் அகலவும், படிப்பில் கவனம் ...
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஏற்றம் தரும் ஏழு ஹோமங்கள்..!

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஏற்றம் தரும் ஏழு ஹோமங்கள்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஏற்றம் தரும் ஏழு ஹோமங்கள் மார்ச் மாதம் 13 முதல் 15 வரை கோமாதா திருக்கல்யாணம் - 108 சுமங்கலி பூஜை - சமஷ்டி உபநயனம் துளசி செடி நெல்லி செடி திருக்கல்யாணம் - 108 கன்யா பூஜை வேம்பு மரம் அரச மரம் திருக்கல்யாணம் - 108 தம்பதி பூஜை தினமும் காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை நடைபெறுகிறது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி வருகிற 13.03.2019 புதன்கிழமை முதல் 15.03.2019 வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை கோமாதா திருக்கல்யாணம், 108 சுமங்கலி பூஜை - சமஷ்டி உபநயனம், துளசி செடி நெல்லி செடி திருக்கல்யாணம், 108 கன்யா பூஜை, வேம்பு மரம் அரச மரம் திருக்கல்யாணம், 108 தம்பதி பூஜை நடைபெறுகிறது....
துப்பாக்கி சூடு உடற்கூறு ஆய்வு முடிவுகளில் பகீர் தகவல்… ஆதாரம் வெளியிட்ட முகிலன் மாயமான விவகாரம்… மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சர்ச்சை

துப்பாக்கி சூடு உடற்கூறு ஆய்வு முடிவுகளில் பகீர் தகவல்… ஆதாரம் வெளியிட்ட முகிலன் மாயமான விவகாரம்… மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சர்ச்சை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  துப்பாக்கி சூடு உடற்கூறு ஆய்வு முடிவுகளில் பகீர் தகவல்... ஆதாரம் வெளியிட்ட முகிலன் மாயமான விவகாரம்... மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சர்ச்சை ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது, காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்களில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்த இந்த சம்பவம், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி அப்பாவி மக்கள் பலர் சுடப்பட்டனர். இந்தக் கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல் கூறாய்வு அற...
ஓவியாவின் 90ml பட டிரைலர் சர்ச்சைகளை மீறி 90 லட்சம் பார்வையாளர்களை தாண்டியது..!

ஓவியாவின் 90ml பட டிரைலர் சர்ச்சைகளை மீறி 90 லட்சம் பார்வையாளர்களை தாண்டியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
அழகிய அசுரா இயக்கத்தில், எஸ்டிஆர் இசையமைப்பில், ஓவியா, பொம்மு, மசூம், ஸ்ரீ கோபிகா, மோனிஷா, அன்சன் பால், தேஜ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘90 எம்எல்’. இப்படத்தின் டிரைலர் இரண்டு வாரங்களுக்கு முன்பு யு டியுபில் வெளியாகும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிரைலரில் காட்சிகளிலும், வசனங்களிலும் ஆபாசம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. https://youtu.be/Jl14barRz84 படத்தின் டிரைலர்தான் அப்படி இருக்கும். ஆனால், படத்தில் அது மாதிரியான காட்சிகளோ, வசனங்களோ இல்லை என படத்தின் இயக்குனர் அழகிய அசுரா என்கிற அனிதா உதீப் தெரிவித்திருந்தார். "அள்ளி குடுத்திருக்கான்... கிள்ளி குடுத்திருக்கான்... புள்ளி தான் வைச்சிருக்கான்" என இரட்டை அர்த்தம் ரொம்பவே பட்டவர்தனமாக வருகிறது ‘18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும்’ என டிரைலரின் ஆரம்பத்தில் எச்சரிக்கை வாசகங்களும் இடம் பெற்ற...
நடப்பு அரசியல்வாதிகளுக்கு ‘ஆயில்’ஆப்புகளை வலிக்காமல் ஏற்றியிருக்கிற படம் ‘எல்கேஜி’ – கோடங்கி விமர்சனம்

நடப்பு அரசியல்வாதிகளுக்கு ‘ஆயில்’ஆப்புகளை வலிக்காமல் ஏற்றியிருக்கிற படம் ‘எல்கேஜி’ – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
நடப்பு அரசியல்வாதிகளுக்கு ‘ஆயில்’ஆப்புகளை வலிக்காமல் ஏற்றியிருக்கிற படம் ‘எல்கேஜி’ & கோடங்கி விமர்சனம் கலகலப்பான அரசியல் நையாண்டி படம் பாக்கலாம்னு இப்ப யாரும் யோசிக்கிறதே இல்ல... ஏன்னா நிஜமாவே தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாமே தெனந்தெனம் பண்ற கூட்டணி கூத்துக்களை பாக்கும்போது இதைவிடவா ஒரு நையாண்டி படம் வேணும்னு தோணும்... ரேடியோ ஜாக்கி பாலாஜி ஹீரோ வேஷம்போட்டு நடப்பு அரசியலை வரப்போற அரசியலை கட்சி பேதம் இல்லாம செக்குல போட்டு மாடு போட்டு ஆட்டி பிழிஞ்சி ஆயில் எடுக்க முயற்சி பண்ணியிருக்கார்... பல நிஜக்கட்சிகளுக்கு ஆயில் தடவி ஆப்பும் ஏத்தியிருக்கார்... யார் யாருக்கு ஆயில் தடவின ஆப்பு... யாருக்கெல்லாம் டிரை ஆப்புன்னு படம் பாத்தா புரியும்... எங்க ஊர் உங்க ஊர் கலாய்ப்பு இல்ல உலக மகா கலாய்ப்பு ஆர்.ஜே.பாலாஜியின் கலாய்ப்பு... ஆனா ஒரே ஒரு குறை... ஓவர் வாய்ஸ்... நடிப்பு பெருசா வரல... இந்த கு...