வீட்டுக்குள் முடங்கினால் குடும்பத்தை காப்பாற்றலாம்… கொரானா தீவிரம் புரியாமல் இருக்க வேண்டாம் – பிரதமர் மோடி
அரசு உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டுக்குள் முடங்கினால் குடும்பத்தை காப்பாற்றலாம்... கொரானா தீவிரம் புரியாமல் இருக்க வேண்டாம் - பிரதமர் மோடி
உலகம் முழுவதிலும் பெரும் அச்சத்தையும் உயிர்பலிகளையும் வாங்கி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுவதற்காக பிரதமர் மோடி தினமும் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஆனால் பொதுமக்கள் மத்திய அரசு வெளியிட்ட கொரோனா எச்சரிக்கை விதிமுறைகளை சரியானபடி பின்பற்றவில்லை என்ற வருத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் நாட்டு மக்களுக்கு வேண்டு கோள் விடுத்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரசின் ஆபத்தை பெரும்பாலான மக்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள். அது வருத்தம் தரு...









