நட்பே துணை – விமர்சனம்
பிரான்ஸ்க்கு செல்ல காத்திருக்கும் பாண்டிச்சேரி மாணவன் நமது நாயகன் ஹிப் ஹாப் ஆதி. பாண்டிச்சேரியில் காதலி அனாகாவை பார்த்ததும் அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது நாயகனுக்கு.
காரைக்காலில் உள்ள தனது மாமா வீட்டிற்கு செல்லும் ஹிப் ஹாப் ஆதி மீண்டும் நாயகி அனகாவை சந்திக்க, அவர் மீது காதலில் விழுகிறார். ஹாக்கி வீரராக வரும் நாயகி அனாகாவிற்கு ஹாக்கி செலக்ஷனில் பிரச்சனை ஏற்பட, அவருக்கு உதவ முன்வருகிறார் ஆதி.
இவருடைய விளையாட்டை கண்டு அனைவரும் வியக்கின்றனர். அதற்கு பிறகு தான் தெரிகிறது ஆதி U19ல் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் கேப்டனாக இருந்தவர் என்று…
காரைக்காலில் பல போராட்டங்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஹாக்கி கிரவுண்ட் ஒன்றிற்கு ஹரோஷ் உத்தமன் பயிற்சியாளராக இருக்கிறார்.
பல நாடுகள் ஒதுக்கிய மருந்து கம்பெனி ஒன்றை பணத்திற்காக சென்னையில் உள்ள அந்த ஹாக்கி கிரவுண்ட் இடத்திற்கு கொண்டு வர முயற்சிக்கிறார் தமிழக அ...









