சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த நயன்தாரா பட இயக்குநர்!

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த நயன்தாரா பட இயக்குநர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  பிரபல திரைப்பட இயக்குநர் அஸ்வின் சரவணனுக்கும், எழுத்தாளரும் அவரது நீண்ட நாள் காதலியுமான காவ்யா ராம்குமாருக்கும்  பாண்டிச்சேரியில் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ’பேனா மற்றும் காகிதத்தில் தொடங்கி, கவிதையில் முடிந்தது... காவ்யா ராம்குமார், ஒவ்வொரு முறையும் என்னுள் எழுந்த புயலை விரட்டியதற்கு நன்றி. உங்களுடன், குறிப்பாக மூன்றாவது அலையின் போது இதைச் செய்வது ஒரு சாகசமாகும்’ எனக் குறிப்பிட்டு தனது திருமண படங்களை பகிர்ந்திருக்கிறார் அஸ்வின்.   https://twitter.com/Ashwin_saravana/status/1487875757796106240?s=20&t=uUcYpym44McN11Ty6qBAsg     அஸ்வின் சரவணன் நயன்தாரா நடித்த 'மாயா' (2015) என்ற திகில் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இது பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற மு...
ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா

ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா

HOME SLIDER, NEWS
  ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அந்த வழக்கில் இன்று அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென கடந்த 28-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் தனக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால் தான் சிகிச்சை எடுத்து வருவதாகவும், அதனால் இன்று தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியாதென்றும் கூறி, தன் மீதான விசாரணையை ஒத்திவைக்க குற்றப்பிரிவுக்கு இன்று கடிதம் அளித்திருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. தனது அக்கடிதத்தில், “எனக்கு கடந்த 23ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் நான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். மீண்டும் தற்போது கொரோனா பரிசோதனை செய்து உள்ளேன். அதன் முடிவில் தொற்று இல்லை என்று சான்று வந்ததும் நான் விசாரணைக்கு ஆஜராகி...
சீட் பங்கீடு கலாட்டா… திமுகவினர் மீது காங்., எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு!

சீட் பங்கீடு கலாட்டா… திமுகவினர் மீது காங்., எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு!

HOME SLIDER, kodanki darbar, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வந்த தன்னை திமுகவினர் வெளியேற்றிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பான இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கலந்தாலோசிக்காமல் வார்டு பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஜோதிமணி இதுபற்றி கேட்டதாகவும், அதற்கு கூட்டத்தை விட்டு வெளியேறும்படி திமுகவினர் கூறியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் . இதைத் தொடர்ந்து வெளியே வந்த ஜோதிமணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தன...
தாம்பூல தட்டு நிறைய பணக் கட்டு.. மதுரை மாநகராட்சி சுயேட்சையின் சுவாரஸ்ய வேட்புமனு தாக்கல்!

தாம்பூல தட்டு நிறைய பணக் கட்டு.. மதுரை மாநகராட்சி சுயேட்சையின் சுவாரஸ்ய வேட்புமனு தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சங்கரபாண்டியன் என்கிற சமூக ஆர்வலர் கட்டுகட்டான டம்மி பணத்துடன் 'வாக்காளர்கள், வாக்களிப்பதற்கு பணம்பெற வேண்டாம்' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி கையில் தாம்பூல தட்டு முழுவதும் 2,000, 500 மற்றும் 200 ரூபாய் டம்மி பணத்தை கட்டுகட்டாக அடுக்கிவைத்தபடி வந்து மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இன்று வேட்புமனுதாக்கல் செய்தார். மண்டல அலுவலகத்தின் வாசல் முன்பு வரை டம்மி பணம் மற்றும் பாதகைகளுடன் வேட்பாளர் அனுமதிக்கப்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்புமனுவுடன் மட்டும் அனுமதிக்கப்பட்டார். பின் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் ச...
1.15 கோடி மதிப்பிலான சொகுசு காரை இயக்குநருக்கு பரிசளித்த தயாரிப்பாளர்!

1.15 கோடி மதிப்பிலான சொகுசு காரை இயக்குநருக்கு பரிசளித்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
தயாரிப்பாளர் சத்திய நாராயண கொனரு இயக்குனர் ரமேஷ் வர்மாவுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி ரவி தேஜா நடித்த கிலாடி திரைப்படம் வெளியாகிறது. தெலுங்கில் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை ரமேஷ் வர்மா இயக்கியிருக்கிறார். ரவி தேஜாவுடன் டிம்பிள் கயாதி, அர்ஜுன் சர்ஜா, உன்னி முகுந்தன், மீனாட்சி சவுத்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் திரைக்கு வரும் முன்பே படத்தின் தயாரிப்பாளர் சத்திய நாராயண கொனரு இயக்குனர் ரமேஷ் வர்மாவுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். சில லட்சங்கள் பெறுமானமுள்ள காரையே இதுவரை இயக்குனர்களுக்கு பரிசளித்து வந்தனர். ஆனால் முதல் முறையாக சத்யநாராயண கொனரு ரூபாய் 1.15 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் காரை இயக்குனர் ரமேஷ் வர்மாவுக்கு பரிசளித்து தெலுங்கு திரையுலகை ஆச்சரியப்பட வைத்துள்ளார். படம்...
ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் டாப் இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் இயக்கிய பாகுபலி படத்திற்கு பின்னர், தெலுங்கு சினிமாவின் புகழ் உலகளவில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. கடைசியாக ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி 2 திரைப்படம் 2017-ல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. இதற்கு பின்னர் ராஜமவுலி என்ன படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்களிடையே காணப்பட்டது.   இதன்பின்னர், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து படம் இயக்கப் போவதாக ராஜமவுலி அறிவிக்க, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சுமார் 4 ஆண்டுகால கடும் உழைப்புக்கு பின்னர் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஜனவரி 7ம் தேத...
கோபால் தலைக்கு விலை வைத்த வீரப்பன்? கூட்டாளியின் பகீர்அனுபவம் I Untold Stories of Veerappan | Part 5

கோபால் தலைக்கு விலை வைத்த வீரப்பன்? கூட்டாளியின் பகீர்அனுபவம் I Untold Stories of Veerappan | Part 5

HOME SLIDER, kodanki voice, politics, தமிழக அரசியல், வீடியோ
    கோபால் தலைக்கு விலை வைத்த வீரப்பன்? கூட்டாளியின் பகீர்அனுபவம் I Untold Stories of Veerappan | Part 5   https://youtu.be/r_JE1to0RnQ
மீண்டும் இணையும் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா!

மீண்டும் இணையும் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு படத்திற்கு கிடைத்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இதில் நடித்த எஸ்.ஜே.சூர்யா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணையபோவதாக சினிமா வட்டாரங்கள் முணுமுணுத்து வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் டிரைவிங் லைசென்ஸ். இந்த படத்தில் பிருத்விராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதனை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் பரவுகிறது. இந்த ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் மீண்டும் சிம்பு-எஸ்.ஜே....
வெளியான மகான் பட டீசர்!

வெளியான மகான் பட டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா போன்ற பல நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம் மகான். விக்ரமும் அவருடைய மகன் துருவும் இணைந்து நடித்திருப்பதாலே படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தை பீசா, ஜிகர்தண்டா, பேட்ட போன்ற பல படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் அறிவிப்புகள் தொடர்சியாக வெளியாகின. இந்த திரைப்படம் பிப்ரவரி 10-ஆம் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் மகான் படத்தின் டீசரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டிருக்கிறார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசரை சமூக வலைத்தளங்களில் ர...
நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்!

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். முன்னதாக இப்படத்தில் பிரியா பவானிசங்கர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கால்ஷீட் பிரச்சனைகளால் இவர் அதில் இணையவில்லை எனவும் பிரியாவுக்குப் பதிலாக பிக்பாஸ் சீசன் 4-இல் இடம்பெற்ற ஷிவானி நாராயணன் இணையவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் "ஷிவானியின் கதாப்பாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் படத்தில் வடிவேலுடன் நடனமாடுவதையும் காணல...