சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

எல்லையில் வலுவான தடுப்பு வேலி – பி.எஸ்.எப். நடவடிக்கை!

எல்லையில் வலுவான தடுப்பு வேலி – பி.எஸ்.எப். நடவடிக்கை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
எல்லையில் வலுவான தடுப்பு வேலி - பி.எஸ்.எப். நடவடிக்கை! இந்தியா-வங்காளதேச எல்லையில் போதைப்பொருள், கால்நடைகளை கடத்துவோர் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர். இந்த பகுதியில் போடப்பட்டுள்ள வேலி பழையதாக வலு இழந்ததாக உள்ளதால் அதை துண்டித்து சட்ட விரோதமாக கடத்தல்காரர்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து விடுகின்றனர். இதை தடுக்கும் வகையில் நவீன வகை வேலியை எல்லைப் பாதுகாப்பு படை அமைத்துள்ளது. இதன்படி இந்த வேலியை யாரும் வெட்டவோ அல்லது ஏறி குதிக்கவோ முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட உழைப்பு மற்றும் வலுவுடன் இது இருக்கும் என வடக்கு வங்க எல்லை பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அஜய் சிங் தெரிவித்துள்ளார். இரு நாடுகள் இடையே வேலி இல்லாத பகுதியில் 110கிலோ மீட்டர் தூரம் தற்போது ஆன்டி கட்-ஆன்டி க்ளைம்ப் தடுப்பு வேலி அமைக்கப் பட்டுள்ளதாகவும், இது மொத்தமுள்ள 4,216 கில...
ஜூனியர் உலக கோப்பை – பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலியா!

ஜூனியர் உலக கோப்பை – பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலியா!

HOME SLIDER, NEWS, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஜூனியர் உலக கோப்பை - பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலியா! ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குரூப் சி பிரிவில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தான் அணியும், குரூப் டி பிரிவில் 2-ம் இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்தது. டீகே வில்லி 71 ரன்னும், கொரே மில்லர் 64 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் காசிம் அக்ரம் 3 விக்கெட்டும், அவைஸ் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்துவீச்சில் பாகிஸ்தான் சிக்கி திணறியது. பாகிஸ்தான் மெஹ்ரன் மும்தாஸ்...
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கையோடு எடுத்துச் செல்லும் போர்டபிள் டாய்லெட்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கையோடு எடுத்துச் செல்லும் போர்டபிள் டாய்லெட்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், பிரத்யேக போர்டபிள் டாய்லெட் ஒன்றை பயன்படுத்தி வருவதாகவும், எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் அதை கையோடு எடுத்துச் செல்வார் எனவும், அதை யாராவது தொட்டாலே சுட்டுக் கொலை செய்துவிடுவார் எனவும் அந்நாட்டின் முன்னாள் கமாண்டோ படை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். வட கொரியாவின் இளம் அதிபர் கிம் ஜாங் உன், நவீன காலத்து சர்வாதிகாரியாக வர்ணிக்கப்படுகிறார்.   சின்ன விஷயங்களுக்கும் அவர் அளிக்கும் கடுமையான தண்டனைகள் உலகளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மிகவும் வித்தியாசமான நபரான கிம் ஜாங் உன்னின் செயல்களும் கவனம் ஈர்ப்பதாகவே உள்ளன. இதன் காரணமாகவே இவரைப் பற்றிய செய்திகளை மக்கள் தேடிப்படிக்கிறார்கள். சமீபத்தில் வடகொரிய அதிபராக 10 ஆண்டுகளை நிறைவு செய்ததுடன், தனது தந்தையின் 10வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, 11 நாட்களுக்கு யாருமே நாட்டில் ...
14 அடி நீள கொடிய ராஜநாகத்தை வெறும் கையில் அசால்ட்டாக பிடித்த நபர்!

14 அடி நீள கொடிய ராஜநாகத்தை வெறும் கையில் அசால்ட்டாக பிடித்த நபர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
    உலகின் மிக நீளமான கொடிய விஷம் கொண்ட நச்சுப் பாம்பு இனமாக திகழ்வது ராஜநாகம். அதனால் தான் அதனை நாகங்களுக்கு அரசன் என பொருள்படும் வகையில் பெயரிட்டுள்ளனர். பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வசிக்கும் தன்மை கொண்ட இப்பாம்புகள் சுமார் 20 அடி நீளம் வரை வளரக் கூடியதாகும். இவை பிற பாம்புகளை உணவாக கொள்கின்றன. மிக மிக கொடிய விஷமுடைய இந்த நாகத்தின் ஒரு கடியே ஒரு மனிதனை கொல்லவல்லதாகும். இந்த நாகத்தின் கடியால் இறப்பு நேரிடும் விகிதம் 75% ஆக உள்ளது. இப்பாம்பினைக் கண்டாலே பலரும் மிரண்டு ஓடவே செய்வார்கள். இந்த பாம்பு கடித்தால் ஒரு யானையே 3 மணி நேரத்தில் இறந்துவிடுமாம். இத்தனை கொடிய விஷப்பாம்பை தனி ஒருவரால் கையாளுவது பெரும் சிரமம் என கூறப்படுகிறது. அப்படியிருக்க, 14 அடி நீளமுடைய ராஜநாகத்தை வெறும் கைகளால் துனிச்சலாக ஒருவர் பிடித்திருப்பதை கேட்கவே புல்லரிக்கிறதல்...
சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு! உயர் நீதிமன்றம் புது உத்தரவு!!

சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு! உயர் நீதிமன்றம் புது உத்தரவு!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் உள்ள பெருங்குடி கிராமத்தில், தாமோதரன் என்பவர், தனக்கு சொந்தமான 10 செண்ட் நிலத்தை பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மூலம் அபகரித்ததாக தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.   இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாததால், திருநெல்வேலி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அப்பாவு, பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் க...
மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற கணவனை சுத்தியால் அடித்து கொன்ற மனைவி விடுவிப்பு!

மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற கணவனை சுத்தியால் அடித்து கொன்ற மனைவி விடுவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  சென்னையில் பெற்ற மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற தந்தையை , தாயே சுத்தியலில் அடித்துக்கொன்றதாக கைதான நிலையில், தற்காப்புக்காக கொலை நடந்ததாகக்கூறி காவல்துறையினர் பெண்ணை விடுவித்துள்ளனர். சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 43 வயது நபர் , மது போதையில் தனது 20 வயது மகளிடம் புதன்கிழமை இரவு பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி கண்டித்துள்ளார். அதனையும் மீறி அத்துமீற முயன்றுள்ளார். மகளை காப்பாற்ற ஒரு கட்டத்தில் கணவனை சுத்தியலால் தாக்கினார். இதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.   இதனையடுத்து சம்பவம் குறித்து அந்தப்பெண் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத...
இன்றைய முக்கியச் செய்திகள் – kodanki head lines 29.01.22

இன்றைய முக்கியச் செய்திகள் – kodanki head lines 29.01.22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, செய்திகள்
    தமிழகம் முழுவதும் 20-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது   உக்ரைன் நாட்டின் மீது, ரஷ்யா அடுத்த மாதம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். உக்ரைனுக்கு அனைத்து ராணுவ உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் பைடன் உறுதி அளித்துள்ளார்.   ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்ட்டியும், அமெரிக்க வீராங்கனை டேனியல் காலின்சும் விளையாட உள்ளனர்.   கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பு...
நடிகர் ராதாரவி டப்பிங் யூனியனில் சுமார் 10 கோடி ரூபாய் ஊழல் செய்தது ஆதாரத்துடன் அம்பலம்!?

நடிகர் ராதாரவி டப்பிங் யூனியனில் சுமார் 10 கோடி ரூபாய் ஊழல் செய்தது ஆதாரத்துடன் அம்பலம்!?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
    நடிகர் ராதாரவியின் டப்பிங் சங்க நிர்வாகம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர, தொழிலாளர் நலத்துறையே மனுதார்களுக்கு பரிந்துரைத்துள்ளது.!! இது தொடர்பாக இன்று, சௌத் இந்தியன் சினி,டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் ( South Indian Cine Artists and Dubbing Artist Union ) உறுப்பினர் தாசரதி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவருடன் முரளிகுமார், சிஜி, மயிலைகுமார், ஜேம்ஸ், கண்ணன், மதி மற்றும் சுதா ஆகிய உறுப்பினர்கள் இருந்தனர். அதில் பேசப்பட்டதாவது: டப்பிங் ஆர்டிஸ்ட் சங்கத்தில் ராதாரவிக்கு உடந்தையாக நிர்வாகத்தில் KR செல்வராஜ் , கதிரவன் பாலு, ராஜ் கிருஷ்ணா,ராஜேந்திரன், ஸ்ரீலேகா, KRS குமார்,சீனிவாச மூர்த்தி, சத்திய பிரியா, பசி சத்யா, ஸ்ரீஜா ரவி, குமரேசன், அச்சமில்லை கோபி, சிவன் சீனிவாசன், ஷஜிதா, விஜயலட்சுமி, சாந்தகுமார், L பிரதீப், அனுராதா, மாலா k, ஜனா ...
சீயான் விக்ரமின் ‘மகான்’ படத்தின் புதிய கானா பாடல் வெளியீடு

சீயான் விக்ரமின் ‘மகான்’ படத்தின் புதிய கானா பாடல் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
      ஆக்ஷன் திரில்லர் படமான 'மகான்' படத்திலிருந்து துள்ளலான கானா பாடல் ஒன்று வெளியாகியிருக்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 'மகான்'. சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகும் அறுபதாவது திரைப்படமான இதிலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. 'எவன்டா எனக்கு கஸ்டடி..' எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்க, பாடலுக்கு இசை அமைத்து, சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் 'யெவ்வர்ரா மனகி கஸ்டடி..' என்றும், மலையாளத்தில் 'இனி ஈ லைப்ஃபில்..' என்றும், கன்னடத்தில் 'யவனோ நமகே கஸ்டடி..' என்றும் வெளியாகியிருக்கிறது. சீயான் விக்ரம் நடித்த 'மகான்' படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பா...
வீரப்பன் தேடிய தமிழ் தேசிய படை … போட்டு வைத்திருந்த மெகா  திட்டம்… மனம் திறந்த கூட்டாளி சிவா part 1

வீரப்பன் தேடிய தமிழ் தேசிய படை … போட்டு வைத்திருந்த மெகா திட்டம்… மனம் திறந்த கூட்டாளி சிவா part 1

HOME SLIDER, kodanki voice, NEWS, செய்திகள், வீடியோ
    வீரப்பன் தேடிய தமிழ் தேசிய படை I போட்டு வைத்திருந்த மெகா  திட்டம் I மனம் திறந்த கூட்டாளி சிவா part 1 https://youtu.be/cByWBMItdVQ