வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த சினேகா

ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த சினேகா

HOME SLIDER, நடிகைகள், விமர்சனம்
‘புன்னகை அரசி’ என்றும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்ளுக்கு பொருத்தமானவர் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற ஆண்குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு கதாநாயகி வாய்ப்பு அமையாததால் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் சிவகார்த்திகேயனுடன் ‘வேலைக்காரன்’ படத்தில் வந்தார். அதில், தான் நடித்த காட்சிகளை வெட்டி குறைத்து விட்டதாக அவர் அதிருப்தி வெளியிட்டது பரபரப்பானது. தற்போது தெலுங்கிலும் கன்னடத்திலும் தலா ஒரு படம் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் கூந்தலை பாதியாக குறைத்த சினேகாவின் படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இவருக்கு நீளமான தலைமுடியும் மாடர்ன் உடையை விட புடவை கட்டிக்கொள்வதிலும்தான் அழகு என்று ரசிகர்கள் சொல்வது உண்டு. இந்த நிலையில் தலைமுடியை வெட்டி குறைத்ததை பார...
நாடோடிகள்-2 கூட்டணியின் உழைப்பு அசாதாரணமானது – சமுத்திரக்கனி

நாடோடிகள்-2 கூட்டணியின் உழைப்பு அசாதாரணமானது – சமுத்திரக்கனி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் படத்தின் இயக்குநர் சமுத்திரகனியும் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தேனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த முடிந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாடல் காட்சி ஒன்றை பல லட்சம் ரூபாய் ...
ஒரு வழியாக பொட்டு ரிலீசுக்கு தேதி குறித்த படக்குழு

ஒரு வழியாக பொட்டு ரிலீசுக்கு தேதி குறித்த படக்குழு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் `பொட்டு'. வடிவுடையான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள். தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். மருத்துவ பின்னணியில் ஹாரர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் தள்ளிப்போன நிலையில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார்....
சைக்கிளில் பயணம், மாட்டு வண்டியில் பிரசாரம் – கர்நாடகத்தை கலக்கும் ராகுல் காந்தி

சைக்கிளில் பயணம், மாட்டு வண்டியில் பிரசாரம் – கர்நாடகத்தை கலக்கும் ராகுல் காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்து வருகிறார். நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி இன்று சைக்கிளில் சென்று மாட்டு வண்டியின் மீது நின்று பிரசாரம் செய்தார். பெங்களூருவிலிருந்து ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ராகுல், சிறிது தூரம் பேருந்தில் பயணம் செய்தார். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து ஆயிரக்கணக்கான மக்கள் ராகுல் பிரசாரத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் இணைந்து ராகுல் சிறிது தூரம் சைக்கிளில் சென்றார். இதில் வெற்று கேஸ் சிலிண்டர்களுடன் பெண்களும் கலந்து கொண்டனர். அதன்பின் மாட்டு வண்டியில் நின்றபடி ராகுல் காந்தி பேசியதாவது:- பொய்யான பிரசாரங்களை செய்வதற்காக மட்டுமே மோடி கர்நாடக மாநிலத்துக்கு வருகிறார். கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் ஒன்றை கூட கடந்த நான்கு ஆண்ட...
காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? – விவசாயிகள் எதிர்பார்ப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? – விவசாயிகள் எதிர்பார்ப்பு

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாகப்பட்டணம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் தான் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். இதேபோல் நீர்மட்டம் 90 அடிக்கு குறைவாக இருந்தாலும் அணைக்கு வரும் நீர்வரத்து திருப்திகரமாக இருந்தால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பருவ மழை சரிவர பெய்யாததாலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் குறிப்பிட்ட காலத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிய...
காலா இசை வெளியீடு – ரஜினி ரசிகர்கள் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு

காலா இசை வெளியீடு – ரஜினி ரசிகர்கள் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படத்தின் ஆடியோ வருகிற 9-ந்தேதி வெளியிடப்படுகிறது. இதுவரை ரஜினி படத்தின் ஆடியோ வெளியீடு ஏதாவது அரங்குக்குள்தான் நடைபெறும். முதல் முறையாக காலா படத்தின் ஆடியோ வெளியீட்டை சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திறந்தவெளி அரங்கில் வெளியிட உள்ளனர். காலா படத்தைத் தயாரித்துள்ள நடிகர் தனுஷ் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். ரஜினி தனது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு மிகப் பெரிய அளவில் நடத்தும் விழா இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி 10 ஆயிரம் பேருக்கு “ரஜினி மக்கள் மன்றம்” அழைப்பிதழும், விழா நுழைவு அனுமதி அட்டையையும் அனுப்பி வைத்துள்ளது. இந்த 10 ஆயிரம் பேரில் 7,500 பேர் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகிறார்கள். சென்னையை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அதிகபட்சமாக 2,500 அழைப்பிதழ்கள் வழங்கப...
ரிலீசுக்கு ரெடியான புதுமுகம் ராஜனின்  ‘செயல்’

ரிலீசுக்கு ரெடியான புதுமுகம் ராஜனின் ‘செயல்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சி.ஆர்.கிரியேசன்ஸ் நிர்மலாராஜன் வழங்க, திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘செயல்’. இதில் அறிமுக நாயகன் ராஜன் தேஜேஸ்வர் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக புதுமுகம் தருஷ் நடித்துள்ளார். ‘செயல்’ படத்தின் நாயகன் ராஜன் தேஜேஸ்வர் தனது அனுபவம் பற்றி கூறுகிறார்.... “எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது. பின்னர் அது வெறியாக மாறிடுச்சி. அப்போது, டைரக்டர் ரவி அப்புலுவை சந்தித்தேன். அவர் ஒரு கதையை சொன்னார். அது எனக்கு ஏற்ற கதையாக இருந்ததால் நடிக்க ‘ஓகே’ சொன்னேன். சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் என் அப்பாவே தயாரிக்க முன் வந்தார். அப்படி ஆரம்பித்த ‘செயல்’ படம் இந்த மாதம் 18-ந் தேதி வெளியாகிறது. விஜய்யை வைத்து ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய ரவி அப்புலு 14 வருடத்துக்குப் பிறகு இயக்குகிற படம் இது. இதில் நடிக்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த படத்தில் எனக்கு ஆக்‌‌ஷன்...
பயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு

பயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாடு முழுவதும் வளர்ச்சிப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே இலாகா கையகப்படுத்தியது. இது தவிர அகல ரெயில் பாதை திட்டத்துக்காகவும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகல ரெயில் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன. இந்த பாதைகள் அகற்றப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அப்படியே வீணாக கிடக்கிறது. இதையடுத்து தன்னிடம் உபரியாக உள்ள 12 ஆயிரத்து 66 ஏக்கர் நிலத்தை மாநில அரசுகளுக்கு விற்பனை செய்ய ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதுபற்றி ரெயில்வே வாரியம் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம், மத்திய பிரதேசம், கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், “உபரியாக இருக்கும் ரெயில்வேக்கு சொந்தமான நிலங்களை மாநில அரசுகள் தேசிய அல்லது மாநில நெடுஞ்சா...
இன்று முதல் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு – ஐதராபாத் பறந்த அஜித்

இன்று முதல் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு – ஐதராபாத் பறந்த அஜித்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சிவா - அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மார்ச்சில் தொடங்க இருந்த படப்பிடிப்பு பட அதிபர்கள் போராட்டத்தால் தள்ளிப்போனது. ஸ்டிரைக் முடிந்து மற்ற படங்களின் அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், விஸ்வாசம் அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், விஸ்வாசம் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கிறது. இதற்காக நடிகர் அஜித் ஐதராபாத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் துவங்கி, படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக...
333 கோடி வரதட்சணை கொடுத்து திருமணம் செய்த சவுதி இளவரசர்..!

333 கோடி வரதட்சணை கொடுத்து திருமணம் செய்த சவுதி இளவரசர்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான், ரூ. 333 கோடி வரதட்சனை கொடுத்து, 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதி இளவரசரான 68 வயது சுல்தான் 25 வயதான பெண்ணை மணந்துள்ளார். இதற்காக அவர், 50 மில்லியன் டாலர்கள் வரதட்சணையாக அவர் கொடுத்துள்ளார். https://youtu.be/JBsSx-NKcxU திருமணத்தின் போது 30 சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தவிர, ஒரு சொகுசு பேருந்தில் 30 பெட்டிகளில் பரிசுகள் கொண்டு வரப்பட்டன. இந்த பரிசுகள் மணப்பெண் வீட்டாருக்கு கொடுக்கப்பட்டது. தவிர, வைரங்களும் தரப்பட்டது. மணப்பெண் வெள்ளை நிற ஆடையில் ஜொலிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது....