தினகரன் தொடங்கிய ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’
மதுரை மாவட்டம் மேலூரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயரை அறிவிப்பேன் என்று டி.டி.வி. தினகரன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி டிடிவி. தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் மதுரை மேலூரில் இன்று காலை தொடங்கியது. அப்போது தொண்டர்கள் மத்தியில் டிடிவி. தினகரன் தனது புதிய அமைப்பின் பெயரை அறிவித்தார்.
"அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என தனது அமைப்பின் பெயரை அறிவித்த தினகரன் தொடர்ந்து கொடியையும் அறிமுகப்படுத்தினார். அதில், கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியின் நடுவில் ஜெயலலிதா படம் இடம்பெற்றுள்ளது.
மேடை முன்பு அமைக்கப்பட்டு இருந்த 100 அடி உயர கொடிக்கம்பத்தில் புதிய கொடியை டிடிவி.தினகரன் ஏற்றினார். இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே மேலூரில் குவிந்தனர். இதனால் மேலூர் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்ட...









