ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்!

வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்! ஜி7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன்வால் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் கலந்து கொண்டார். அவருடன் இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவி கெமில்லா மற்றும் பேரன் வில்லியம் ஆகியோரும் கலந்து கொண்டனர். ராணி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, குடும்பத்துடன் இங்கிலாந்து ராணி  கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு இதுவாகும். இந்த நிகழ்வின் போது, ஜி 7 கூட்டமைப்பின் தலைவர்கள், ராணியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். புகைப்படம் எடுக்கையில், ராணி 2ம் எலிசபெத் நகைச்சுவையாகப் பேசி, அனைத்துத் தலைவர்களையும் சிரிக்க வைத்து மகிழ்ந்தார். மாநாட்டிற்கிடையில், ராணி 2ம் எலிசபெத் கேக் வெட்டும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் சிறப்பம்சமாக ராணி வாள் கொண்டு கேக் வெட்டியத...
பாலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

பாலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
பாலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு அதிகரிக்கும் மவுசு! மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம்வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மூன்று படங்களும் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகின்றன. அதன்படி மாநகரம் படத்தை இந்தியில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இப்படத்தை இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். லோகேஷ் கனகராஜின் மூன்றாவது படமான மாஸ்டரும் விரைவில் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதில் விஜய் கதாபாத்...
‘விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்!

‘விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்! நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். கொரோனா பரவல் குறைந்த பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ், இப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரட்டையர்களான இவர்கள் இருவரும், ஏற்கனவே கேஜிஎப், கைதி, கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது....
25 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் – மீனா!

25 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் – மீனா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
25 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் - மீனா! மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர். தமிழிலும் ‘திரிஷ்யம் 2’ படம் பாபநாசம் 2-ம் பாகமாக உருவாக உள்ளதாகவும், இதில் நடிக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பேசப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கவுதமி, இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக நடிகை மீனாவை நடிக்க வைக்க பேச...
ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு! தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- * கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டீக்கடைகள் நாளை முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. * பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. * பொதுமக்களின் நலன் கருதி அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் நாளை முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. * கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வ...
யூரோ கோப்பை – துருக்கியை 3-0 என வீழ்த்தியது இத்தாலி!

யூரோ கோப்பை – துருக்கியை 3-0 என வீழ்த்தியது இத்தாலி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
யூரோ கோப்பை - துருக்கியை 3-0 என வீழ்த்தியது இத்தாலி! ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. யூரோ கோப்பை போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இத்தாலியின் ரோம் நகரில் நேற்று தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள துருக்கி, இத்தாலி அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடின. இதனால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் துருக்கி வீரர் 53-வது நிமிடத்தில் ஓன் கோல் அடித்தார். இதையடுத்து இத்தாலி அணி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இம்மொபைல் 66-வது நிமிடத்திலும், இன்சிக்னே 79-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். துருக்கி அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி அபார வெற்ற...
ஜோடி சேர்வதற்காக 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த காண்டாமிருகம்!

ஜோடி சேர்வதற்காக 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த காண்டாமிருகம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
ஜோடி சேர்வதற்காக 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த காண்டாமிருகம்! ஆப்பிரிக்காவில் வாழும் வெள்ளை நிற காண்டா மிருகங்கள் அழியும் நிலையில் உள்ளன. இந்த விலங்கினத்தை காப்பாற்றுவதற்கு தீவிர முயற்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் தைவான் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில் 5 வயதான என்மா என்ற பெயருடைய வெள்ளை பெண் காண்டா மிருகம் இருக்கிறது. அது இனப்பெருக்கம் செய்வதற்கு தைவானில் ஆண் காண்டாமிருகம் இல்லை. எனவே அதனை ஜப்பான் நாட்டுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். ஜப்பானில் டொபு உயிரியல் பூங்காவில் மொரான் என்கிற 10 வயது காண்டாமிருகம் உள்ளது. அதனுடன் ஜோடி சேர்வதற்காக என்மா காண்டாமிருகத்தை ஜப்பானுக்கு விமானத்தில் அழைத்து சென்றுள்ளனர். ஜப்பானுக்கும் தைவானுக்கும் இடையே உள்ள தூரம் 2,160 கி.மீ. ஆகும். ஆனாலும் காண்டாமிருகம் ஜோடி சேர வேண்டும் என்பதற்காக அங்கு அழைத்து சென்றுள்ளனர். சில மாதங்கள் இரு காண்ட...
உருவ கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை!

உருவ கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
உருவ கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை! மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை சனுஷா தமிழில் ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ரேணிகுண்டா திரைப்படத்தில் வாய் பேச முடியாத இளம் பெண்ணாக நடித்த சனுஷாவின் நடிப்பு பலரையும் வெகுவாக கவர்ந்தது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சானுஷா, தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வரும் நிலையில், இவரது உடல் எடையை வைத்து உருவ கேலி செய்தவர்களுக்கு தற்போது நடிகை சனுஷா தக்க பதிலடி கொடுத்துள்ளார். “யாரெல்லாம் என் உடல் எடையைப் பற்றி என்னைவிட அதிகமாக கவலைப்படுகிறார்களோ அதைக்குறித்து பேசுகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அவசியமில்லை. என்னை சுட்டிக் காட்டி பேசும் எல்லோரும் ஒன்றை மனதில் வைத்துக் கொள...
கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் பிரியாமணி!

கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் பிரியாமணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் பிரியாமணி! ‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் நல்ல அறிமுகத்தை பெற்றவர் பிரியாமணி. இவர் சமீபத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தெலுங்கில் ‘நாரப்பா’, ‘விராட்டா பர்வம்’, ‘சயனைடு மோகன்’ உள்ளிட்ட பல படங்களை பிரியாமணி கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களை அடுத்து விவேக் இயக்கத்தில் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். இப்படம் மும்பையில் நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக உருவாகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூஜை போடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ள நடிகை பிரியாமணி, இந்த படத்தில் ஒப்பந்தக் கொலையாளியாக நடிப்பது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. மேலும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதால், அதற்காக தன்னை தயார்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.  ...