ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

பாலா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஆர்.கே.சுரேஷ்!

பாலா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஆர்.கே.சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாலா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஆர்.கே.சுரேஷ்! மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில்  ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ‘ஜோசப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே அதன் தமிழில் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹீரோயினாக பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய நடிகர் ஆர்.கே.சுரேஷ், முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருந்ததாகவும், இயக்குனர் பாலா தான் தன்னை பரிந்துரைத்ததாகவும் அவர் கூறி உள்ளார். மேலும் இப்...
கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை – விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு!

கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை – விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை - விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு! தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால், கா்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில், கொரோனா பொதுமுடக்க காலம் வரை மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காகவும், மகப்பேறு முடிந்து தாய், சேயை வீட்டிற்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் 2 காா்களை இலவசமாக பயன்படுத்த விஜய் ரசிகா் மன்றத்தினா் வழங்கினா். விஜய் மக்கள் மன்ற மாவட்ட தலைவா் சி.எஸ். குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜச...
சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை ஓட்டெடுப்பு!

சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை ஓட்டெடுப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை ஓட்டெடுப்பு! தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் பல தொகுதிகளை இழந்த நிலையில் இந்த தேர்தலில் மீண்டு எழுந்தது. அந்த கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் 18 எம்.எல்.ஏ.க்களில் சட்டசபை தலைவர் பதவியை பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் முறை எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றவர்கள் மட்டும் அமைதியாக இருக்கிறார்கள். ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்கள், இரண்டு மற்றும் 3 முறை எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களிடையே இந்த பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களை அழைத்து பேசி ஒருமித்த முடிவை ஏற்படுத்த முயற்சித்தனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக யாரை தேர்வு செய்யலாம் எ...
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்!

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்! சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற 18-5-2021 (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, ரெம்டெசிவிர் மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும். இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு ச...
‘கோயில்களை காப்போம்’ என்ற கோஷம் ஜக்கி வாசுதேவின் முட்டாள்தனம் – அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

‘கோயில்களை காப்போம்’ என்ற கோஷம் ஜக்கி வாசுதேவின் முட்டாள்தனம் – அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ‘கோயில்களை காப்போம்’ என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள கோயில்களை எல்லாம் இந்து சமய அறநிலையத்திடம் இருந்து மீட்கப்போவதாக கோஷம் எழுப்பி வரும் ஜக்கி வாசுதேவுக்கு தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். 1927 ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையை உருவாக்கிய நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவருமான சர் பி.டி. ராஜன் அவர்களின் பேரனான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை மீனாட்சி அம்மனின் தீவிர பக்தர். அதோடு, 1950 ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் சேதமடைந்த மூல விகிரகத்திற்கு பதிலாக புதிய விக்கிரகத்தை வழங்கியவரும் பி.டி.ராஜன் என்பது வரலாறு, இன்றளவும் பி.டி.ஆர். அவர்கள் வழங்கிய ஐயப்பன் சிலையே மூலஸ்தானத்தில் வழிபாட்டுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்துமதத்தின் மீது...
பாஜக அரசின் திட்டமிடாத தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் மூன்றாம் அலை உருவாகும் : ராகுல் காந்தி

பாஜக அரசின் திட்டமிடாத தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் மூன்றாம் அலை உருவாகும் : ராகுல் காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பாஜக அரசின் திட்டமிடாத தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் கொரோனா மூன்றாம் அலை உருவாகும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் அதிக அளவில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது.   இதைத் தடுக்க கொரோனா தடுப்பூசி சிறந்த வழி என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு மூன்று கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை அறிவித்துள்ளது.  அதன்படி மே 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே முதல் இரண்டு கட்டங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் பலருக்கு இன்னும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படவில்லை.  இதற்கு கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு முக்கிய காரணம் ஆகும்.   பாஜக அரசு சரியான உற்பத்தி மற்றும் திட்டமிடல் இல்லாமல் வெளிநாடுகளுக்கு மருந்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதால் இந்த தட்டுப...
பிரபல நடிகர்களே நலிந்த நடிகர்களுக்கு உதவுங்களேன்…

பிரபல நடிகர்களே நலிந்த நடிகர்களுக்கு உதவுங்களேன்…

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், வீடியோ
  பிரபல நடிகர்களே நலிந்த நடிகர்களுக்கு உதவுங்களேன் https://youtu.be/HPK4bYmynZw தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி. எஸ்.முருகன் முன்னணி நடிக, நடிகைகளுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது, ‘முன்னணி நடிக, நடிகைகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். முன்னணி நடிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்… இந்த திடீர் முடக்கத்தால் திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் அன்றாட சம்பளத்துக்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தான். இவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நான் என்னால் முடிந்த அளவுக்கு தமிழ்நாடு முழுக்க இருக்கும் உறுப்பினர்களுக்கு நேரடியாகவும் அந்த அந்த பகுதிகளில் இருக்கும் நண்பர்கள் மூலமாகவும் உதவிகள் செய்துவருகிறேன். ஆனால் இந்த விஷயத்தில் தங்களது கரங்க...
காசாவில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்

காசாவில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்

HOME SLIDER, உலக செய்திகள், உலகம், செய்திகள்
காசாவில் உள்ள சர்வதேச ஊடகங்கள் இயங்கும் பிரபல அடுக்குமாடி கட்டிடத்தை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தி தகர்த்தது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதலுடன், விமானப்படை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுகளையும் வீசி வருகிறது. இந்த நிலையில், காசாவில் உள்ள சர்வதேச ஊடகங்கள் இயங்கும் பிரபல அடுக்குமாடி கட்டிடத்தை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது. அல் ஜசிரா, அசோசியேடட் பிரஸ் போன்ற சர்தேச ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் உட்பட பல முக்கிய நிறுவனங்கள்  அல்- ஜலாலா  கட்...
கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க எளிமையான சித்த மருத்துவ வழிமுறை!

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க எளிமையான சித்த மருத்துவ வழிமுறை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா வைரஸின் தீவிரம் மிக வேகமாக இருப்பதால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருவதால் மருத்துவதுறை அதனை சரிசெய்ய போராடி வருகிறது. அதேநேரம் பலரும் சித்த மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். அவை நல்ல பலன் அளிப்பதாகவும் கூறுகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் சுவாமிநாதன் எளிமையான வழிமுறைகளை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, காலையில் இஞ்சி, மஞ்சள் தலா ஒரு துண்டு, ஒரு வெற்றிலை ஆகியவற்றை 200 மில்லி தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து 50 மில்லியாக வற்றச்செய்து குடிக்கலாம். இது உடலில் பரவியுள்ள வைரஸ் சுவரை உடைக்கும். காலை 11:00 மணிக்கு முருங்கை கீரை மற்றும் அதன் குச்சிகளை போட்டு சூப் அல்லது ரசம் வைத்து குடிக்க வேண்ட...